Thursday, November 10, 2022

இந்த வாரத்தலைப்பு விடுதலை by Kiruthika

 


**விடுதலை வேண்டும் -


   ஏதேனும் புது முயற்சி எடுக்க நினைக்கையில்..

தவறாமல் ஆஜராகும் தயக்கத்திலிருந்து..!!!!!..



**விடுதலை வேண்டும் -


   எதிர்பாராதது நடக்கும் போது..

  எதிர்பார்த்தது நடக்காத போது ..

தவறாமல் ஆஜராகும் குழப்பத்திலிருந்து..!!!!!..




**விடுதலை வேண்டும் -


   தேவைக்கேற்ப ஆசை..

ஆசைக்கேற்ப முயற்சி..

என்பதில் -

தவறாமல் ஆஜராகும் 

'தவறிய' சமநிலையிலிருந்து..!!!!!.......


**விடுதலை வேண்டும்-


இன்னும் ..

வேறொருவர் வந்து தான் கொடுக்க வேண்டும்- நம் விடுதலையை ..

எனும் எண்ணத்திலிருந்து...!!!!!......

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...