தான் சூடிய மலரை.....
இறைவனின் திருமேனியில் அலங்கரித்து பார்த்து ரசித்த
சுடர்கொடியான *ஆண்டாளின் புன்னகை!*
காற்றினில் கலந்து வரும்
மாயவனின் குழலோசையில்
தன்னையே மறந்து போகும்
*ராதேயின் புன்னகை* !
இகபர சுகங்களை மறந்து
தம்பூராவை மீட்டு நாம சங்கீர்த்தனையில்
தன்னையே மறந்த
*மீராவின் புன்னகை!*
சுவற்றில் தான் ஒட்டிய ஒரு ஒரு வரட்டியிலிருந்து வரும்
*விட்டல்!விட்டல்!* என்ற மாயவனின் ஒலியினை கேட்டு ரசித்த
*ஜனாபாயின் புன்னகை!*
சுட்டித்தனமான குறும்புடன்
மண்ணையும், வெண்ணையும்
உண்ட மாயவனின்
புன்சிரிப்பினில் அண்டசராசரங்களை பார்த்து ரசித்த
*யசோதையின் புன்னகை!*
மாயவனின் மீது கொண்ட
அன்பினாலும்
காதலினாலும்
பக்தியினாலும்
பாசத்தினாலும்.....
மலர்ந்த பெரும் புண்ணியம் பெற்ற இப்பேர்புன்னகையில்......
ஒரு துளியினை அடையும் பாக்கியத்தினை.....
யாதுமாகி என் முன்னே.....
மந்தாரபுன்னகையுடன் நிற்க்கும்
என் மாயவனே
எனக்கருள்க🙏🏻🙏🏻


கடவுளான புன்னகைகள் என்றும் வணங்க கூடியது,அருமை🙏
ReplyDeleteகடவுளின் புன்னகையும் கன்னி யின் புன்னகையும் அருமை தோழியே
ReplyDeleteThanku vidyaa,veena💕
ReplyDeleteExpression of God's smiles ... awesome.
ReplyDeleteSuper aka ❤️🙏
ReplyDeleteExcellent 👌👏
ReplyDeleteஅற்புதமாக இருக்கிறது சாய் ராம்
DeleteVaalthiya anaithu sagotharigalukum en manamarntha nandri🙏
ReplyDelete