விடிந்தும்,விடியா காலை பொழுது.... மேனியை தழுவிக் கொண்டுஇருக்கும் பனிகாற்று..... ஜன்னலோர இருக்கை...... இனிதாய் தொடங்கிய என் இரயில் பயணம்..... பச்சைகொடியின் அசைவுக்காக காத்துக்கொண்டிருந்தன........
ஏதோ என் கால்கள் சீண்டப்படுகின்றன கோபத்துடன் குனிந்து பார்த்தால்..... கால்கள் இல்லாமல் நான்கு சக்கர வண்டியில் அமர்ந்து ஏக்கத்துடன்..... சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் தெய்வங்களின் படங்களை வாங்க கேட்கும் சிறுவனின் *ஏக்கமான புன்னகை*......
தன் தேகத்தினை மறைக்க கிழிந்த ஆடையை அணிந்து, எத்தனையோ விதமான காலடிகளின் தூசுகளை சுத்தமாக்கி கையேந்தி சில்லறை கேட்டுகும் ஏழை சகோதரியின் *ஏக்கமான புன்னகை*......
தன் கூடையில் மணிமணியாய் இருக்கும் கடலையை யாரும் வாங்க மாட்டார்களா என்று தாங்கொனா பாரத்தை சுமக்கும் பொக்கைவாய் பாட்டியின் *ஏக்கமான புன்னகை* ......
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல், இரயிலில் அர்த்தநாரிஸ்வரராக ஆசிர்வாதங்களை அள்ளிக் கொடுக்கும் திருநங்கைகளின் *ஏக்கமான புன்னகை* ......
இறைவனுக்கு தன் கண்களை கொடுத்த கண்ணப்பரைப்போல..... ஏதேதோ காரணங்களுக்காக தன் கண்களை இழந்த கண்ணப்பர்களின் வாழ்வாதாரத்திற்காக சிந்தும் *ஏக்கமான புன்னகை* ......,
இத்தனை புன்னகைகளை தாண்டி......என் இருப்பிடம் நோக்கி செல்ல முற்படும் போது..... நள்ளிரவில் தன் தூக்கத்தினை மறந்து, தன் குடும்பத்திற்காக உழைக்க காத்து தனக்கு சவாரி கிடைக்காத என்று காத்திருக்கும் சகோதரர்களின் *ஏக்கமான புன்னகை*.....
ஓர் நாள் பயணத்தில் எத்தனை புன்னகைகள்....
ஆனாலும் மனது ஏனோ பாரத்துடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்...... புன்னகையுடன் கதவை திறந்தார் என் அன்பு அம்மா..... மீண்டும் மீண்டும் வாஞ்சையுடன் பார்க்கிறேன் என் தாயின் முகத்தை...... அறுபதை நெறுங்கி கொண்டிருந்தாலும் நேர்த்தியான அழகுடன் இருக்கும் என் அன்னையை பார்த்து புன்னகைக்கிறேன்...... எத்தனையோவிதமான
*ஏக்கமான புன்னகைகளை* உதிர்க்கவிடாமல்....
பிரசவம் எனும் தாங்கொனா வலியிலும் என்னை இப்புவியில் பிரசவித்து...... வலியினை மறந்து என் பிஞ்சு விரலை கைப்பற்றி சிரித்த என் தாயின்
*புன்னகையை* விட சிறந்தது ஏதும் உண்டா?

அருமை,அப்படியே காட்சிகள் கண் முன் வந்து போகிறது 👏👏
ReplyDelete
ReplyDeleteNice thoughts...
Nice lines
ReplyDeleteNice Sairam
ReplyDeleteஉண்மையான வரிகள்
ReplyDeleteThanku all🙏
ReplyDeletearumaiyana nigazhvin thoguppu
ReplyDelete