Sunday, December 13, 2020

சிந்தனைக்குரிய பகுதி - " மறதி" by Kanchana

 


சில நேரங்களில்.....

சில சனங்களை நான் கடக்க விரும்பும் போது .....

 

என் கால்கள் தேடிப்போகும் இடம்......

என் வீட்டு மாடி தோட்டம்...... 


என் வீட்டு மாடி தோட்டத்தின் கர்ப்ப குடியில்......

எத்தனை விதமான பிரசவங்கள்....... ஒவ்வொரு குழந்தைகளின் (காய்களின்) ஜனனத்திலும்..... ஒவ்வொரு ஞாபகங்கள்....... அஞ்ஞாபகங்களில் சில....



ஆழிலையில் கண்ணன் இருப்பது போன்று ஞாபகபடுத்தும் என் வீட்டு பிஞ்சு கத்திரிக்காயின் *அழகில் என்னை மறந்தேன்......* 


கிணற்றில் சுரைகூடு கட்டி குதித்ததை ஞாபகபடுத்தும் சுரைக்காயின் *அழகில் என்னை மறந்தேன்......  *


என் குழந்தைகளின் பிஞ்சுவிரல்களை ஞாபகபடுத்தும் வெண்டைகாயின் *அழகில் என்னை மறந்தேன்....... *




தொங்கும் பூங்காவினை ஞாபகபடுத்தும் என் வீட்டு மணிபிளான்ட்டின் *அழகில் என்னை மறந்தேன்.......* 


பச்சை பசேலென்ற புல்வெளியினை ஞாபகபடுத்தும் என் வீட்டு கீரைகளின் செழுமையான *அழகில் என்னை மறந்தேன்....* 



சிவனின் கழுத்தில் அலங்கரிக்கும் வாசுகியைப்போல......என் தந்தையின் கழுத்தினை அலங்கரித்த நல்லபாம்பினை பார்த்து பயந்த நாட்களையும்....... அறியா வயதில் சாரைபாம்பினை மிதித்த பயத்தில் என் தாயினைவிட்டு பிரியாமல் இருந்த நாட்களை ஞாபகபடுத்தும்......

கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் புடலையின் *அழகில் என்னை மறந்தேன்.......*


கைகளில் பூக்களை கட்ட தெரியாத வயதில் கால்கட்டு போட்டு கதம்பங்களை கோர்த்து பெருமாளுக்கு சூட்டியதை ஞாபகபடுத்தும்..... 

துளசிகளின் *அழகில் என்னை மறந்தேன்........*




சில சனங்களை மறக்க நினைத்து எனக்கு..... 


மறக்க முடியாத மலரும் நினைவுகளில் *என்னையே நான் மறந்தேன்* .......!




8 comments:

  1. உங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் நானும் மறந்தேன் என்னை😊

    ReplyDelete
  2. எதை மறந்தாலும் தன்னிலை மறவாமல்.
    அதை உயிர் ஊட்டிய தாய்மை மறவாத
    பதை என்று வாழாமல் பயிர்கள் என்ற உயிர் வளர்த்த பைங்கொடி காஞ்சனமாலை நீ வாழீ

    ReplyDelete
  3. எதை மறந்தாலும் தன்னிலை மறவாமல்.
    அதை உயிர் ஊட்டிய தாய்மை மறவாத
    பதை என்று வாழாமல் பயிர்கள் என்ற உயிர் வளர்த்த பைங்கொடி காஞ்சனமாலை நீ வாழீ

    ReplyDelete
  4. 👌👌👌🌳🌺🌷 superb.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...