Saturday, December 19, 2020

சிந்தனைக்குரிய பகுதி -"முகமூடி" by Kanchana


 

*பல மேசைகளில்....

சில இலைகளில்....

வீணான பற்பல பருக்கைகளை பார்க்கும்போது.....அதற்கு பின்னால் இருக்கும் *முகமூடியை நாம் அறியவில்லை.....* 


நட்டநடு வெயிலில்

இடுப்பில் கோவணத்துடன் உழைத்த உழவனின் வியர்வையில் உதித்த நெல் மணிகள்....... பருக்கைகளாக குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன.......!


பல பல குடுவைகளில்..... அடைக்கப்பட்ட நீர்துளிகளை கடற்கரை மணலில்  

பார்க்கும்போது....

அதற்கு பின்னால் இருக்கும் *முகமூடியை நாம் அறியவில்லை....* 


அளபற்கரியா உப்பளங்களை தன்னில் ஆர்ப்பரித்து.... ஆவியாகி.... விண்ணையடைந்து....... மேகங்களுடன் ஊடலிட்டு..... தூய்மையான 

மழைத்துளிகளாய் இம்மண்ணில் விழும் நீர்துளிகள்.... எச்சில்நீராக கடற்கரை மணலில் கிடக்கின்றன......!


புறவழி சாலைகளுக்காக....நூற்றாண்டுகள் வாழ்ந்த ஆல்....
விறகாக பார்க்கும் போது.... 
அதற்கு பின்னால் இருக்கும் *முகமூடியை நாம் அறியவில்லை.....* 


சிறுவிதையாக மண்ணில் தன்னை விதைத்து...... பூமிக்கடியில் எத்தனையோ போராட்டங்களை கடந்து......  

துளிர் விட்டு..... விருட்சமாகி...... விழுதுகளால்.... எண்ணற்ற பறவைகளின் அசையாவீடாக இருந்த ஆல்.....

ஆள்அரவமில்லா சாலையில் விறகாக கிடக்கின்றன.....! 
 முகமூடியில்லா....முகமாக வாழ்ந்ததாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு..... 





இச்சமுதாயத்தில்...அன்பு மணிகளையும்.....
பாசத்துளிகளையும்......
கருணை விதைகளையும்..... வெளிப்படுத்த

நிலம் உழுது.... விதை விதைத்து....
மழை பொழிய காரணமான இயற்கை வளங்களை உருவாக்கி கொண்டிருக்கும்.....இப்பிரபஞ்சத்தின் ஆணிவேராக.... முகமூடி அணிந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் *விவசாயிகளை போற்றுவோம்..... மதிப்போம்.....*






7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான வரிகள், ஆழமான கருத்துகள்,ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய செயல்கள்..அழகாக வடிவமைத்து தந்ததிற்க்கு நன்றி...வாழ்த்துக்கள் தோழி...

    ReplyDelete
  3. அழகான, சிந்திக்க வேண்டிய முகமூடிகள் அருமை👏👏 கண்டிப்பாக விவசாயிகளை தலைவணங்குகிறேன் 🙏🙏

    ReplyDelete
  4. மிக அருமை .. சிந்திக்க தூண்டியது உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும்... வரிகளும்

    ReplyDelete
  5. Thanku...🙏susila,vista,kiruthiga🙏

    ReplyDelete
  6. Excellent feelings sister 😍😍😍

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...