Wednesday, December 9, 2020

என் வீட்டு ஜன்னலில் by Vidhya Nivash

 


என் வீட்டு ஜன்னலில்

சமையலறையில் உள்ள ஜன்னலில் வெறும் அரை அடி அளவே இடம் இருக்கும். நான் கவனித்திருக்கிறேன் எப்பொழுதாவது அதில் புறாக்கள் வந்து அமர்ந்து செல்லும் .சரியாகத் தெரியவில்லை ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டில் சிதறிய அரிசிகளை அந்த ஜன்னல் கட்டையில் வைத்தேன் .ஒரே நேரத்தில் 10 புறாக்கள் வந்து அதற்கு சண்டை போட்டுக் கொண்டன .வேற என்ன வைப்பது என்று தெரியாமல் வீட்டிலிருந்த பழைய பார்லி அரிசியை வைத்தேன் .போட்டி போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டது. அதன்பின் அதுவே பழக்கமாக மாறியது அதற்காக கம்பு வாங்கி ஒவ்வொரு நாளும் ஜன்னல் கட்டையில் இரவே வைத்து விடுவேன்.(புறாக்களின் வீடியோ இனணத்துள்ளேன்)


Pigeon friends video


எப்பொழுது விடியும் என்று தெரியாது காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் புறா அழகாக வந்து அந்த ஜன்னல் கட்டையில் அமர்ந்திருக்கும். என்ன ஆச்சரியம் என்றால் சூரியன் உதிப்பதிற்கு முன்பும் சூரியன் மறைந்த பிறகும் அந்தப் புறாக்கள் வந்து கம்பை சாப்பிடுவதே இல்லை .சில நேரம் அதிகாலையில் எனக்கு துணையாக எனக்கு முன்னாடியே வந்து ஜன்னல் கடையில் அமர்ந்திருக்கும் ஒரு புறா .ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஜன்னல் கட்டையை ஒரு புறா தான் குத்தகை எடுத்திருக்கிறது போல் அவர்தான் வந்து முதலில் ஆரம்பித்து வைப்பார் .அந்த நேரத்தில் எந்த புறாக்களையும் அது அண்ட விடாது. அதுவும் அந்த புறா கம்பு சாப்பிடும்போது ஒரு விதமான ஒலியை எழுப்பிக் கொண்டு தான் சாப்பிடும் அதை மற்ற புறாக்களிடம் கவனித்ததில்லை. மற்றதை விட அது ஒரு தனித்தன்மை வாய்ந்தது .இதுவும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது .(குத்தகைக்காரர் வீடியோ இனணத்துள்ளேன்)


Pigeon friends video


இயல்பாகவே கூட்டமாக பறவையை கண்டால் கொத்தி விடும் என்று பயம்,அதனால் சற்று தள்ளி நின்று தான் பார்ப்பேன்.ஒரு நாள் பயந்து விட்டேன் , புறாக்கள் சண்டையில் கீச் கீச் கீச் என்று ஒரு சத்தம் எல்லாப் புறாக்களும் சேர்ந்து ஒரு புறாவை கொன்றுவிட போகுது என்று பயந்துவிட்டேன். என்னுடைய கணவர் கூட சொன்னார் அப்படி எல்லாம் இருக்காது என்று கடைசியில் பார்த்தா அந்தப் புறாவுக்கு மட்டும் வித்தியாசமான குரல்.


அப்புறம் பத்து மணிக்கு ஒரு ஜோடி வரும் அமைதியாக தன்னுடைய அலகால் ஒரு புறா மற்றொரு புறாவை கொத்தி கோதி கொஞ்சிக் குலாவி விட்டுச்செல்லும். அதில் ஒன்று சாப்பிடும் போது இன்னொரு புறா நோட்டமிடும் மற்றொன்று பிறகு சாப்பிடும் .இவ்வாறு இரண்டும் அன்பு பாராட்டி அந்த உணவை பரிமாறிக் கொள்ளும் .


இன்னொரு நாள் இரண்டு புறாக்கள் வேகமாக பேசிக்கொண்டு சாப்பிட்டது. எனக்கு பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது மனிதர்கள் போலவா? இது பேசுகிறது என்று அதை உற்று பார்த்தேன் .அதுவும் என்னை பார்த்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது .அதேபோல் இன்னொரு நாள் எப்பொழுதும் சமையல் அறையில் இருக்கும் ஜன்னலில் தான் அமர்வது வழக்கம் ஒருநாள் மட்டும் என்னுடைய முகப்பு அறையில் உள்ள ஜன்னலில் உட்கார்ந்து அதில் இருக்கும் இடைவெளியில் எட்டி பார்த்து விட்டு பறந்து சென்றது. அதுவும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது .


சில நேரம் காலை அவசரத்தில் வீட்டில் பசங்க தான் சண்டை போட்டுட்டு இருக்காங்க என்றால்? நீங்களும் இப்படி சண்டை போடுறீங்க என்று நானும் அவற்றுடன் சேர்ந்து கத்துக்கிட்டு தான் இருப்பேன்.


புறாக்களுக்கும் ,ஜன்னல்களுக்கும் மற்றும் எனக்கும் இடையே உறவு ஒரு பயணமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நானும் தினமும் அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

8 comments:

  1. Nice vidya.continue ur lovely time with your friends.

    ReplyDelete
  2. Romba iyalbaaga irukirathu vidyaa👏🕊👏

    ReplyDelete
  3. Very nice Vidya. The same thing happens in my hall room window also. I keep food daily. They come in groups and eat. But you are having extraordinary relation with particular Pigeon. Continue your journey dear

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...