Friday, February 26, 2021

இசை அருவி by Jaya

 


இசை

இதயத்துடிப்பின்

மற்றுமொரு பரிணாமம் 


இசை

சந்தங்களின் பரிமாணம் 


இசை

ஸ்வரங்களின் சுவாரஸ்யம் 


இசை

மொழியில்லா முன்னோடி 


இசை 

மகிழ்ச்சியின் எல்லை 


இசை

வலிகளின் கண்ணீர் 


இசை

நம்பிக்கையின் நட்பு 


இசை

துரோகத்தின் மருந்து 


இசை

பயணத்தில் சகபயணி 


இசை 

தாலாட்டும் பூங்காற்று 


இசை

தாயின் முத்தம் 


இசை

காதலின் சத்தம் 


இசை

உறவுகளின் உன்னதம் 


இசை

கற்பனைகளின் கால்தடம் 


இசை

கடவுளின் காவல் 


இசை

குழந்தையின் குதூகலம் 


இசை

இளைஞர்களின் இதயதுடிப்பு 


இசை

முதியோரின் மூச்சு 


இசை

இயற்கையின் அதிசயம் 


இசை

மனிதத்தின் மனிதம்!!!!!

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Vidhya Nivash

 


மேக கூட்டத்தின் நடுவில்,

மின்கம்பியில் அமர்ந்து,

ஒய்யாரமாக கனவு காணும் சிட்டு குருவி..

அதற்கு தெரியாது நேரம் கிடைத்தால் அந்த கம்பி தன்னை சாம்பலாகும் என்று!!!


நீல வண்ண திடலில் சிதறி கிடைக்கும் 

வெள்ளை ஊர்திகள்,

அதிலே சில கருமை,

திசை தெரியாமல்,

அலைஅலையாய் மோதுகின்றன..

யார் பார்த்த வேலை,

அதில் மின்கம்பியால் ரோடுப்போட்டு

வரும் ஆபத்து தெரியாமல் காத்திருக்கும் சிட்டுகுருவி  ..


Wednesday, February 24, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Akhiladevi Kumaran

 





புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Kiruthika

 


*வான்வேளியில் உதிரி பஞ்சு*


மனதின் ஆசைகள் -

வானத்தின் மேகங்கள் போலே..

கணக்கில் அடங்காது..

உருமாறும்.. இடமாறும்...

இடியும் நல்கும்...

பனி மழையும் பரிசாக்கும்..!!!


*கண்ணுக்கு எட்டியும்..

கைக்கு எட்டாத..

உதிரி பஞ்சு குவியல்களாய்..

என்னை கண்டு கண் சிமிட்டுகிறாய்..

விமான ஜன்னலகளின் வழியே..!!!


*உன்னை போலே -

பாரம் இல்லாது..

மிதக்க தான் ஆசை.. !...

எந்த நாள் காத்து கிடக்கிறதோ..

நிறை வேற்றிட.....

ஆவலோடு -எதிர்நோக்கியே..நான்!!!..

Tuesday, February 23, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Veena Shankar

 


"ஒற்றுமையை பறை சாற்றும் வெண்மேக க்கூட்டங்கள்"


"வெண்(ணெய்) நெய் ஆகும் போது கருமை மழை ஆகாதோ😂😂😂"


"பூமிக்கு மூன்று கோடுகள். வானத்திற்கு மட்டும் நான்கு."


"ஆசைக்கு முடிவு கட்டி நீல வானத்தில் வெண் மேகமாய் சுழல ஆசை😂😂"


"பிரிந்து செல்லும் மேகங்களே ஒன்று சேருங்கள். கண்ணீர் விடுங்கள்., பூமியில் தண்ணீர் சுரப்பதற்காக..."


"மலையில் தங்க நினைக்கும் வெண்மேகங்களே உங்கள் ஊடலுக்காக காத்திருக்கும் உடல்கள் நாங்கள்

நீல வானில் பூத்திருக்கும் வெண் மேகங்களாகிய நீங்கள் நிறத்தை மாற்றிய பின் நாங்கள்

மண்ணில் பூக்களின் நிறத்தை மாற்றுவோம்"


"கொண்டால் மேகத்தின் கண்ணீரால் நிறைந்த குளத்தில் நீரை (தேடினேன்) காணவில்லை. அறிந்தேன் அது வானத்தின் பிம்பம் என்று"

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Vedavalli Ramani

 


ஓ மேகங்களே என் வீடு போவதற்குள் 

மழையாக விழாதீர்கள் என்று குருவி

 நினைக்கிறது.

Monday, February 22, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Kanchana

 


பரந்து விரிந்த நீல வானில்.......

பல்வேறு குழுக்களாக மேககூட்டங்கள்......தங்களுக்குள்

யார் உருவாக்கும் உருவங்கள் மிகசிறப்பானதாக அமையும் என்று போட்டி போட்டுகொண்டிருகின்றன.......

அனைவரும் தங்களின் உருவாக்கத்தினை சிறப்பாக செய்து கொண்டிருந்தன.....அதில் ஒரு குழுவினர் மட்டும் ஏனோ....எதையும் உருவாக்க முடியாமல் தனிமையில் அமர்ந்திருக்கும் சிட்டு குருவியிடம் சென்றனர்.......

மேககூட்டங்களின் வருகையின் சப்தத்தை கூட கவனிக்காமல் கவலையில் ஆழ்ந்திருந்தன

சிட்டுகுருவி......

காரணம் யாதென கேட்டனர்? மேககூட்டங்கள் .....


சாலையின் 

இருமருங்கிலும்

ஓங்கி உயர்ந்த மரங்கள்......

அம்மரங்களின் ஒரு ஒரு கிளைகளிலும்...... எங்கள் இனத்தவரின் கூடுகளும்.....


  

ஒற்றுமைக்கு உதாரணமான காக்கைகளின் கூடுகளும்.....


மரங்களில் அழகிய பொந்தினை போட்டு அதில் வாழும் மரங்கொத்தியினரும்


மனிதர்களின் மூத்தோர் என்று சொல்லப்படும் வானரத்தோழர்களும்.........



ராமபிராணின் கைகளால் மூன்று கோடுகளை வரைந்து கொண்ட 

தோழர்களான அணிலினத்தவரும்......



எத்தனை பசுமையான நினைவுகள்...... எங்கள் பறவையினத்தாருக்குள் வேற்றுமை இல்லை......

குருவியின் கூட்டிலே.....

காக்கையின் முட்டையும்.....

காக்கையின்

கூட்டினிலே  

சிட்டுக்குருவியின் முட்டையும்.......

எந்த பயமும் இல்லாமல் கர்ப்பகாலங்கள் இருந்தன........


அணில் கடித்த பழங்களின் மீதியினை வானரங்கள்

ருசித்து சாப்பிட்டனர்......


எங்கோ தொலைவில் இரைதேடி வந்த காக்கை.....

குருவிகுஞ்சுக்கும்.......

குருவி......

காக்கைகுஞ்சிற்க்கும் இரையினை பாகுபாடில்லாமல் பகிர்ந்தளித்தன..... 



இப்படி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்த நாங்கள்......

மீளாத்துயரங்களில் தள்ளப்பட்டோம் மாமனிதர்களால்..... 


மேல்நாட்டு உணவுகளின் ருசியானால்..... விவசாய நிலங்களை உழுவதை மறந்து போனான்.....


கணப்பொழுதில் தான் போகும் இடம் செல்ல வேண்டும் என வழிநெடுகிலும் உள்ள மரங்களை அழித்து மரநிழலை மறந்து போனான்.....


இருக்கும் இடத்தில் இருந்து சொந்தங்களை அழைக்க தொடங்கி.......

அதற்காக செல்போன் டவர்களை வைத்து என்இனத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து

இறுதியில் மனிதத்தினையே மறந்து போனான்...... 

மனிதன்!


மனிதத்தை மறந்து போன மனிதனால்

என்இனமே! மீளவழியில்லாமல்

மாண்டுபோய்க்கொண்டிருக்கின்றன..


மாண்டுபோன என் இனத்தில்.....

தனிஒருவனாக

நான்.....



வீசும் தென்றலுடனும்.....கீச்,கீச் எனும் குருவிகளின் கொஞ்சலுடனும்..... 

என் தாய் கட்டிய கூடு எனும் தொட்டிலில் நிம்மதியாக இருந்த என்னை.......

இருக்க இடமில்லாமல்.....

கொளுத்தும் வெயிலில்......

மின்கம்பிக்கு எப்போது இரையாவேன் எனத்தெரியாமல்....

தனிஒருவனாக நிற்கின்றேன்...... 

மாமனிதனால்?



புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Jaya

 


(Pic location -  kottupaakam near Vandavasi.

Pic courtesy - Tarun )


அகிலம் அகண்டதா 

இருந்தாலும் 

இங்கே 

நானே ராஜா 

நானே மந்திரி😊😊


நீலவண்ண பட்டாடையுடுத்தி 

வெள்ளி ஆபரணங்களோடு மேனி தழுவி

காத்திருக்கிறாள்

நிலமகள்

ஓளியவனின் ஓளி தன்னை தீண்ட!!!!!


என்று எப்பொழுது பார்த்தாலும்

அன்று பிறந்ததுபோல் பல அழகை தன்னுள் அடக்கி பார்பவர்க்கு அள்ளித்தூவும் விந்தைக்கு குறைவில்லாததும்

எதற்கும் நிகரில்லாததும் 


ஆதியும் இல்லாதது

அந்தமும்  தெரியாதது

கதிமை நிறைந்தது

முதுமை இல்லாதது

பரந்து விரிந்த நீலவானமே

சொல்லுமே அதன் அழகு மாயாஞாலமே!!!

" புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு" by Valarmathy

 


(Pic location -  place kottupaakam near Vandavasi.

Pic courtesy -  Tarun )

மேகங்களே தூது சென்று கூறுங்கள் .....

என்னவளிடம் நான் 

காத்திருக்கிறேன் உனக்காக இங்கு.😍

Sunday, February 21, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"குழந்தைத்தனம்" by Kanchana

 




அந்தி மாலை வேளை......


அதுவரை சிலையாய் இருந்த இலைகள் அலை அலையாய்.....

அசைந்து கொண்டிருந்தன


மேனியினை மெதுவாய் படரும் குளிர்காற்று......


மெல்ல மெல்ல நாசியினை உணரசெய்யும்

மண்வாசனை....


எனக்குள்.....

ஒரு எதிர்பார்ப்பு 


எனக்கு நெருக்கமானவள் என் அருகில் வருவது போல்....


முகம் உயர்த்தி பார்க்கிறேன்...

இதுவரை உணரமுடிந்தவள் உருவாய் என்னை நோக்கி வருவது தெரிகிறது......


பல ஆயிரம் மைல்களை தாண்டி வந்த என் அன்பு தோழி

(மழைத்துளி).......

முத்தம் எனும் எச்சில்துளிகளாய்..என் மேனியை தழுவிக் கொண்டாள்


அவள்கூடவே வந்த ஆயிரமாயிரம் தோழிகளும்(மழைதுளிகளும்)

குட்டையாக என் முன்னே தேங்கி நின்றனர்.....


மனதளவில் 

குழந்தையாய்....! 

அக்குட்டையிலே

சிறுவயதில் காகித கப்பல்களை விட்ட ஞாபகம்.......


அப்படியே....

கால்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கிணற்றருகில்.....

சென்றன


அங்கேயும் அன்பு தோழிகள் (மழைத்துளிகள்)

ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்து கொண்டிருந்தனர்


மனதளவில் 

மீண்டும் குழந்தையாய்....! சுரைகூடு கட்டி கிணற்றில் குதித்த ஞாபகம்........


மீண்டும் சிறுநடைக்குபின்

வழிநெடுகிழும் மரங்களில் அமர்ந்து கொண்டிருக்கும் இருக்கும் அன்பு தோழிகளை(மழைத்துளிகளை) அசைத்து என்மீது விழசெய்தேன்

குழந்தையாய்.....!



குழந்தையாகவே மாறியிருந்த என் நினைவுகள் சுரீரென்ற சூரிய கதிர்களின் வருடல்களால் என் நினைவுக்கு வந்தேன்.......என் அன்பு தோழியும்(மழைத்துளியும்)சிறிது சிறிதாக பிரியாவிடை கொடுத்தால்..... மனதில் கனத்தோடு வீட்டினுள் வந்தால்..... அடுப்பிதிட்டில்

வெண்டையும்,

தக்காளியும் 

என்னை பார்த்து சிரித்தனர்


ஏனோ மனதளவில் மீண்டும் குழந்தையாய்.....! குண்டு தக்காளியை அப்பா,அம்மாவாகவும் குட்டி தக்காளியை நானும் அக்காவுமாகவும் மாறி குடும்பம் நடத்திய ஞாபகம் 


என் கைகளில் இருந்து நழுவிய தக்காளியினால் மீண்டும் நிகழ்காலம் வந்தேன்


அத்தக்காளியை தேடியபோது என் வீட்டு கண்ணனின் காலடியில் இருந்தது......

எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது 

என் மாயவனின் அழகுமுகம் என்னை மீண்டும் குழந்தையாய்.....!



என் தந்தை கட்டிய பெருமாள் கோவிலில்..... சுவற்றில் கண்ணன், கோபியரின் ஓவியமும் உண்டு


யாதுமறியா வயதில் இறைமையை பற்றி ஒன்றும் தெரியாத வயதில் 

நான் பெரும்பாலும் இருந்த இடம் அதுவே.....

மாயவன் ஓவியமாய் உள்ளான் என்பதையும் மறந்து என்னுடனே இருப்பதாய், 

என்னுடன் விளையாடுவதுப்போல, என்னுடன் உறங்குவதுப்போல, என்னுடன் உணவருந்துவதுப்போல.......

சதா சர்வ

காலமும் அவனுடனே இருப்பதாய்..... ஒரு குழந்தையாய்......

நான் வாழ்ந்த காரணத்தால்தானோ  

இன்றும் இறைசேவையில் என்னை தொடரவைத்திருக்கிறான் என் மாயவன்!


அன்றாட வாழ்க்கையில்....

அரிபரியான வாழ்க்கையில்...

சில நிகழ்வுகள்

 நாம் வாழ்ந்த வாழ்க்கையினை... நம்மில் இருக்கும் குழந்தையினை....

பிரசவித்து ஓர் தெவிட்டாத நாட்களை சுவைக்க வைத்து விடுகின்றன......



"இக்கிகய்" புத்தக விளக்கம் by Vidhya Nivash

 



அனைவருக்கும் வணக்கம்,

"இக்கிகய்" புத்தகத்திலிருந்து படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன். காலையில் எழுந்தவுடன் சோம்பலாக இருக்கிறது ,செய்த வேலையை செய்து செய்து வாழ்க்கையில் சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது .இதை அதிகமாக கேட்கிறோம் இந்நாளில் ... வாழ்க்கை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்தப் புத்தகம் கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும்.





ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறது இந்த புத்தகம் .அதைப் பல கதைகள் மூலம் விளக்கி இருக்கிறார்கள் .100 வயதிற்கு மேல் வாழும் ஜப்பானியர்களிடம் உங்கள் வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை கேட்டதற்கு அதைத்தான் நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுகிறோம் .80 வயதில் தான் நாங்கள் புதிதாக பிறக்கிறோம், 90 வயதில் வளர்கிறோம், 100 வயதில் மேலும் கற்றுக் கொண்டு இருக்கிறோம் என்று குழந்தைகள் போல அவர்கள் சொல்வதை கேட்கும் போது நமக்கும் மனதில் ஒரு உற்சாகம் தோன்றுகிறது.





எனக்கு என் உடல் நிலையில் இத்தனை குறைபாடுகள் என்னால் இனிமேல் இந்த வேலைகள் எல்லாம் செய்ய முடியாது எனக்கு வயது முதிர்ந்து விட்டது என்று இல்லாமல் ஆடி,பாடி,மகிழ்கின்றனர். இங்கே வலிக்கிறது, அங்கே வலிக்கிறது இதை நாம் இப்பொழுது முப்பது வயதிலிருந்தே கேட்க தொடங்கிவிட்டோம் .ஐந்து வயது குழந்தைகள் கூட இப்பொழுது இதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் . நவீன வாழ்க்கை நம்மை அதிக அளவில் இயற்கையிடம் இருந்து பிரித்து நன்மை அதிகம் சோர்வாகி விட்டது .



மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையில் முதல் கேள்வியே நீங்கள் ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை ? வாழ்க்கையை நீங்க வாழ்வதற்கு ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.தற்கொலை முயற்சி எடுத்துக் கொண்டவர்களிடம் ஏன் இதை மேற்கொண்டீர்கள் என்றால்? அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களை கூறுகிறார்கள் .அப்பொழுது இரண்டு கதைகள் மூலமாக அழகாக விளக்குகிறார். குழந்தை பெற்றவர்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் துணையை இழந்து,பாடுபட்டு வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது என்றும் ,குழந்தைகளே இல்லாதவர்கள் எங்களுக்கு குழந்தைகள் இருந்தால் எங்களுடைய வாழ்க்கை முழுமையானதாக இருக்கும் என்றும் அதிலிருந்து அதை அழகாக தெளிவு படுத்தி இருக்கிறார்கள் .


தன்னுடைய துணையை இழந்து வருந்திக் கொண்டிருக்கும் ஒருவரிடம் ,உங்களுடைய துணையில்லாமல் அவர்கள் இந்த உலகில் தனியாக வாழ முடியுமா? அதை யோசித்துப் பாருங்கள் .அப்பொழுது உங்களுக்கு புரியும் உங்களுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்று பல சிறு சிறு கதைகள் மூலம் விளக்கியுள்ளனர் . இங்கு, இப்பொழுது ,உங்க வாழ்க்கையில், உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியே நிலையானது ,உங்கள் பாதையை மாற்றாமல் தொடருங்கள்.உலகில் எதும் நிலையற்றது அதை இந்த புத்தகம் தெளிவாக கூறுகிறது.





ஒவ்வொருவருடைய பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது .ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பமான காரியம் ஒன்று இருக்கும். அதை உங்கள் மனதில் ஆராயுங்கள், தேடிக் கண்டுபிடியுங்கள், அதிகமாக உங்களை அதில் செலுத்துங்கள் .எப்படி தேர்ந்தெடுப்பது என்று மிக எளிய முறையில் ,எந்த செயலில் இயற்கையுடன் இணைந்து உணவருந்தாமல்,காலம் கடந்து மூழ்க்கி இருக்கிறோ அதுவே உங்கள் "இக்கிகய்".கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதையே எண்ணி வருத்தப்பட தேவையில்லை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பெற்றோராக இருப்பதும் , அண்டை வீட்டாருக்கு அன்பானவராக இருப்பதுமே, அர்த்தமுள்ள, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் வாழ்க்கை .





வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு அவர்கள் பல வழிமுறைகளை கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .உங்களுக்குப் பிடித்த காரியத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அழகாக சொல்லியிருக்கிறார்கள் எளிமையான தாகவும் இருக்கக்கூடாது, மிக கடினமாக இருக்கக் கூடாது .எளிமையானதாக இருந்தால் அலுப்பு ஏற்படும், அதே மிக கடினமாக இருந்தால் உங்களுக்கு பதட்டம் ஏற்பட்டு விடும். உங்களுக்கு பிடித்த ,உங்களால் முடிந்த, சிறது கடினமான ,சவாலான ஒரு செயலை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.அதில் திளைத்திருங்கள், அதற்கு நாம் அன்றாடம்

கடைப்பிடிக்கும் சடங்குகளும்,ஆன்மீகமும் துணைபுரியும் என்று இந்த புத்தகத்தில் அழகாக விளங்கி இருக்கிறார்கள் .


அந்த அறிவுரைகள் என்னவென்றால்

1.80 சதவீதம் மட்டுமே உணவருந்துங்கள்

,உணவில் அதிகளவில் உப்பு இல்லாமல்,இயற்கையில் விளைந்த பொருட்களாக இருக்க வேண்டும்.

2. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருங்கள்.

3.ஒவ்வொரு நாளும் நம்முடைய மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும்.

4. நம்மை எது பலவீனப்படுத்துகிறதோ அதை விட்டு விலகி இருங்கள், அனைத்திற்கும் நன்றி உணர்வோடு இருங்கள்.

5.இறந்தகாலம்,எதிர்காலத்தையும் எண்ணாமல் நிகழ்காலத்தில், இந்த ஒருநாள் மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை நீங்கள் மிகவும் சந்தோஷமாக செலவழியுங்கள்.

6.உங்களுடைய உடல் நிலையில் அக்கறை செலுத்துங்கள் தினமும் காலை சிறிது நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள்.

7.எந்த ஒரு காரியத்திலும் அவசரப்படாதீர்கள் ,நிதானமாக வேலை செய்யுங்கள்.

8. உங்களை சுற்றிலும் எப்பொழுதும் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள்.

9. எதை எண்ணியும் கவலைப்படாதீர்கள்.

10. இயற்கையோடு இணைந்த உங்களுக்கு விருப்பமான செயல்களில் நிலைத்திருங்கள், தொடருங்கள்...





உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு உங்களை சுற்றி இருக்கும் அன்பானவர்கள் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

Friday, February 19, 2021

சிந்தனைக்குரிய பகுதி _"காலம்" by Kanchana

 



பச்சைப்பட்டு புடவைக்கு கார்மையினால்.... திருஷ்டி பொட்டு வைப்பதுப்போல....பரந்து விரிந்த பசுமையான விவசாய நிலங்களுக்கு நடுவில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் குடிசைவீடுகள்....

அப்பசுங்குடிலில் இருந்து என் முதல் பள்ளி பயணம்..... மஜ்ரூன் கான்வென்ட் மற்றும் தும்பல் கான்வென்ட்.....


யாதும் அறியா வயதில் என் பழக்க வழக்கத்தினை தாண்டி..... பிறிதொரு மதத்தின்

அமைதியான சூழ்நிலை...... மன்னிக்கவும்,

மறக்கவும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை கன்னத்தை காட்டும் அளவிற்கு 

அன்பினை

உணர்த்திய காலம்...... 

என் மூன்றாம் வகுப்பு வரை......


அதன்பின் என் தந்தையின் பணி நிமித்தம் காரணமாக தமிழ் மீடியம் சேரும் சூழல்......

தலைமை ஆசிரியரின் முன் என் கைகளால் காதை தொட்டவுடன்

தொடங்கியது எலிமென்டரி ஸ்கூல் பயணம்....

முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை...... அப்பாவிடம் நாலணா,எட்டணா வாங்கி கொண்டு பலகிலோ மீட்டர்களை தாண்டி..... சுற்றிலும் காகித பூச்செடிகளுக்கு நடுவில் மகாத்மா காந்தியின் உருவசிலையினை சுற்றியும் மாணவ மாணவிகளின்

நீராரும் கடலுடுத்த எனும் இறை

வணக்கத்தோடு ஆரம்பிக்கும் இனிய நாள்.....

தமிழ் வாத்தியாரிடம் வாங்கிய பிரம்படியின் வலியினை முழுதாக அனுபவிப்பதற்க்குள்.....

இடைவேளை ஆரம்பித்திடும்......

பட்டியில் இருக்கும் மந்தைஆடுகள் அவிழ்த்துவிடுவதைப்போல......

வகுப்பறைக்குள் இருந்து வெளியே ஓடிவரும் தோழிகளோடு விளையாட்டு திடலில் கீழே கொட்டிக் கிடக்கும் பஞ்சு காய்களை உடைத்து தாத்தா..தாத்தா பற பற பற என்று விளையாடி பாலநட்பினை உணர்த்திய காலம்......


வகுப்பறையில்

ஜன்னலில் இருந்து வீசும் இளந்தென்றலை

உணரும் வேளையில்

தான் செய்த சிறு தவறுகாக

முதுகின்பின்னால்

வெள்ளை காகிதத்தை ஒட்டி

மூச்சிரைக்க ஐம்பதாவது ரவுண்ட் அடிக்கும் பையன்.....

தான் செய்த பெரும் தவறுகாக

தாங்கமுடியாத வலியின் வேதனையோடு 

உப்பின்மீது மண்டியிட்டிருக்கும்

பையன்.......

செய்த தவறுக்கு கடுமையான தண்டனை விதிக்க படும் என்று பயந்து குற்றங்கள் செய்ய துணியான்........

(கடுமையான தண்டனைகள் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்ய துணியான் ஆண்மகன் )

செய்யும் தவறுக்கு தண்டனை விதிக்க படும் என்று உணர்ந்த காலம்......


மாலை வீடு திரும்பும் போது வழிநெடுகும் இருக்கும் கட்டில் கடைகளில்......

மிளகாய்பொடி தூவிய

பிஞ்சு மாங்காயும்..... கலாக்காய்களும்....

ஆரஞ்சு மிட்டாய்களும்.......

பஞ்சு மிட்டாய்களும்.......

தேன் மிட்டாய்களும்......

குச்சி ஐஸும்........

நாவில் உமிழ்நீரினை சுரக்க வைக்கும்

நாலனாவிற்க்கே கைநிறைய

 வாங்கிய திண்பண்டங்களை சாப்பிட்டு முடிக்கும்போது வீடு வந்து சேர்ந்து விடும்......

எப்படா வருவேன் என்று காத்திருக்கும் நாய்குட்டிகளும், பூனை குட்டிகளும்,பசு, எருமை மாடுகளும் வெளிப்படுத்தும் அன்பு அபரிதமானது, மரிச்சியில் எருமை மாட்டின் மீது அமர்ந்து ஒருநெடு பயணம் .......

வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான,

பாகுபாடில்லா அன்பினை உணர்ந்த காலம்.......


ஏர்பூட்டிய மாடுகளை 

சுட்டெரிக்கும் வெயிலிலும் வயலினை உழுதும்.....

வியர்வை துளிகளை சிந்தி கிணறு வெட்டியும்...... 

ஒரு படி கடலையை உரிப்பதற்க்கு ஐந்து காசு வாங்கியதும்...... 

ஒரு ஒரு நெல்மணியும்.....

உழவினின் ஆயிரம் வியர்வை துளிகளில் பிரசவித்தது என்று உணர்ந்த காலம்.....


இன்று இன்னும்

யாரும் அறியா காலம்!   


கிராம வாழ்க்கை 

இப்புவியிலேயே நாம் அனுபவிக்க வேண்டிய சொர்க்கம்



சிந்தனைக்குரிய பகுதி -"உள்ளுணர்வு" by Kanchana

 


*உள்ளுணர்வு*


கருவாகி.....

உருவாகி....

ஈர்ஐந்து மாதங்கள் கருவறையில் உளன்றுகொண்டிருந்த நான்.....

இன்னும் சிலநொடிகளில் இப்புவியில் பிரசவிக்கப்போகிறேன்......

ஆயிரமாயிரம் கனவுகளை சுமந்து வெளியே வந்த என்னை வாரி அரவணைத்த என் தாயின் கண்களில் கண்ணீர் துளிகள்...... இதுவும் பொட்டப்புள்ளையா? என்ற

சுற்றத்தாரின் வசவை சொற்களால்...... தாயின் கண்ணீர் துளிகளை துடைக்கவும் முடியாமல்.....

வசுவுசொற்களுக்கு பதிலடி கொடுக்கவும் முடியாமல்......

என்னுடைய உள்ளுணர்வுகளுக்கு உருகொடுக்கமுடியாமல்.....

என்னை நானே வெறுக்க ஆரம்பித்த சனம்.....

வாஞ்சையயோடு உச்சி முகர்ந்த என் தந்தையின் ஸ்பரிசம் ஏனோ எனக்குள் ஒரு புது தெம்பினை கொடுத்தது.......

இப்புவியில் உதித்த என் பெண்நிலவே!

என் தேவதையே!

நீ எதற்காகவும் கலங்காதே.....

உன்னுள் எத்தனை உள்ளுணர்வுகள் உன்னில் அடங்கியிருக்கின்றன என்பதை அறியாமல்

உன்னை நீ தாழ்த்திக்கொள்ளாத கண்ணே!


நாளை நீ யாராக போகிறாய் என நீ முடிவெடு.....


மானுட பிறவி எடுத்தாலும்..... ராணியாக வாழ்ந்தாலும்....

இவை எல்லாவற்றிற்க்கும் அப்பாற்பட்ட கண்ணனின் அன்பினால்.... அவனுள்ளே ஐக்கியமாகி..... பக்தியினை உணர்த்திய.....

மீரா போல.....



ஈர்நூறாண்டுகளுக்கு முன்னே...

சூழ்ச்சியால் மாண்டு போன தன் பதியிற்க்கு சிதைமூட்டி.....

கைம்பெண்ணால் என்ன செய்ய முடியும் எனும் பேச்சுக்கு வாய்ப்பு தராமல்

பெணிணியத்தை வளர்த்த வீர மங்கை வேலுநாச்சியார் போல.....

 


ஒரு ஒரு நெல்மணிகளிலும் ஒளிந்திருக்கும் விவசாயின் வியர்வை துளிகள் அறிந்ததால்தான்...வள்ளுவர் எடுத்து வைத்த ஊசிக்கும், கொடடாங்குச்சிக்கும் வாய்ப்பு தராத..... 

வாசுகி அம்மாள் போல.....



இரத்த பந்தத்தையே மறந்து போன உலகில்..... சீல்வடியும் ஜீவன்களையும், கருவில் உதித்ததற்க்கு காரணம் தேடும் ஜீவன்களையும் கருணை கொலை செய்ய வாய்ப்பு தராமல் ....

பல கருணை இல்லங்களை உருவாக்கிய

அன்னை தெரசா போல.....


நாளை இவர்களைப் போல நீ யாராக போகிறாய் என நீ முடிவெடுக்கும் சக்தி உனக்குள் கொட்டிக்கடக்கின்றன


இப்பிரபஞ்சத்தினை படைத்த இறைவனால்..... இன்னோர் உயிரினை படைக்கப் போகும் இறைவி நீ......


என் பெண் தேவதையே!


உனக்குள் இருக்கும் உன் உள்ளுணர்வோடு பேசு.....

நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வாய்...

இவ்வுலகையும் அறியசெய்வாய்!



Monday, February 15, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"காதல்" by Ramya Karthik

 


Let me say a kutti story


கொரோனாவுக்கு முன்னாடியே கொரோனா வந்த மாதிரி தான் வாழ்க்கை போயிட்ருந்தது எங்களுக்கு..

சோசியல் டிஸ்டன்சிங் உம்,(பல மைல் டிஸ்டன்ஸ்)

தொடாம பேசுறதும்,(botim la)

மாஸ்க் போட்டு பேசுறதும்,(சந்தோஷமா இருக்கிற மாதிரி)

எங்களுக்கு புதுசில்ல...

ஆனா சேர்ந்து வாழ வருஷத்துல ரெண்டு மூணு டைம் ஆவது வாய்ப்பு கிடைக்கும்.. அது வெறும் வாய்ப்பு இல்ல.. அது தான் வாழ்க்கையே எனக்கு.


டிசைன் டிசைன்னா காரணங்கள் டிக்கெட் postpone பண்ண.அத்தனைக்கும் மூல காரணம் கொரோனா.ஒரு டைம் ரெண்டு டைம் இல்ல மொத்தம் அஞ்சு டைம் ticket postpone (அது தனி குட்டி ஸ்டோரி )பண்ணி கடைசியா மனுஷன நாளைக்கு ஒரு வருஷம் ஒரு மாசம் அப்புறம், ரெண்டு பேருக்கும் இடையில எந்த screen உம் இல்லாம கண்ணுல பார்க்க போறேன்..

இது எவ்ளோ பெரிய விஷயம்னா...

அவ்வ்வ்வ்வ்ளோ பெரிய விஷயம்.


ஒரு வருஷ வாழ்க்கைய இருபது நாள்ல வாழப்போறோம் .

இந்த லீவ் எங்களுக்கு எவ்ளோ முக்கியம்னா..

அவ்வ்வ்வ்வ்வ்ளோ முக்கியம்..


இன்னும் சரியா நாலர மணி நேரம் தான் இருக்கு ..

அவர பாக்குறதுக்கும்,நான் தூங்குறதுக்கும்.

இரண்டாவது நடக்க வாய்ப்பே இல்ல..

ஏன்னா, லைட் எல்லாம் off பண்ணாலும்..

1000 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி முகத்துல லைட் எரியுதே😬அது தூங்கவிடாது.


How was my kutti story? ன்லாம் கேக்கமாட்டேன்.. ரொம்ப மோசம் னு எனக்கே தெரியுது.


Always be Happy makkale♥️🙂



சிந்தனைக்குரிய பகுதி -"காதல்" by Akhiladevi Kumaran

 




Sunday, February 14, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"காதல்" by Valarmathy

 


❣LOVING SELF❣

When I started saying the magical word.I LOVE MYSELF I LOVE THE WAY I AM💖

.....

I Started appreciating🤝 the self,I fall in love💕 with self.

I Love the time ,I give for myself.

I found the happiness😀 within me,when I fall in love💕 with me.

I love myself,I can't describe even to me.

Self love is a greatest gift🎁

On this day we can offer to ourselves. 

Now really I am feeling crazy about myself 🥰



Saturday, February 13, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"காதல்" by Vidhya Nivash



காதல் எது காதல்..


பல வருடங்களுக்கு முன் திருமணமானவுடன் உருவான கருவிலே கலைந்த முதல் காதலை ...

மறதி எனும் மருந்தால் மறந்தேன்..

மீண்டும் நினைவூட்டியது இந்த கொடிய கொரோனா இந்நாளில்!!!


வாழ்ந்த இடத்தை விட்டு பிரிந்த ஏக்கம் மண்ணின் மீதுள்ள நேசம்..சில தினங்களுக்கு முன் இறந்த பெரியம்மா கொடுத்த சோறு அவருடைய இழப்பை மறக்க முடியாமல் நிமிர்வதற்குள்!!!


கொரோனா கொடுத்த அடுத்த அடி மற்றொரு பெரியப்பா நேற்று..

வேதவல்லி அம்மா கேட்ட அதே கேள்வியை கேட்ட பெரியப்பாவை இழந்த பெரியம்மாவின் தவிப்பு!!!

உடன் பிறந்தவரின் கடைசி நொடிகளில் கூட கலந்துக்கொள்ள முடியாமல் கொரோனாவால் கைகள் கட்டிப்போடப்பட்ட அப்பாவின் தவிப்பு!!!

சிறு வயதில் ஓடி ,ஆடிய சகோதரி ,சகோதரன் சிறு பிள்ளை போல் அழுவுகிறார்கள் !!!தொட்டு அழ முடியவில்லை ,அவர்களுடைய தவிக்கும் பாசம்!!!

தோழனை போலிருந்த தாத்தாவை தேடும் பேரப்பிள்ளைகளின் தேடல்!!!


ஆலமரமாக இருந்த குடும்பத்தில் இரண்டு விழுதுகள் விழ!!!

தோள்களில்க்கூட சாய்ந்து அழ முடியாமல், சொந்தங்களைக்கூட அன்னியமாக்கிய சூழல் !!!அவர்களின் தீர்க்க முடியாத வருத்தம்...


அழுதது போக மீதி எழுத செய்தது இந்த பாசங்கள் ,நேசங்கள்..


உயிரற்ற, உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் இடையே தோன்றும் அன்பின் வெளிப்பாடே காதல்..

ஆறு மற்றும் அறுபதில் வரும் எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பின் வெளிப்பாடு,

காமத்தை கடந்த அன்பின் வெளிப்பாடே

காலத்தை வென்ற காதல்...







இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...