Wednesday, February 3, 2021

சிந்தனைக்குரிய பகுதி-"குழந்தைத்தனம்" by Akhiladevi Kumaran

 







நேத்ரா புரண்டு புரண்டு படுத்தாள். 

அவள் கண்களை இறுக்கமாக மூடி மூடி திறந்தாள்...எங்கோ ஒரு whatsapp பதிவில் படித்தது ஞாபகம் வந்தது - கண்களை ஒரு நிமிடம் தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருந்தால் கண்கள் அயர்ந்து தூக்கம் வருமென்று...!


ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை!

படுத்ததும் உறங்கும் வரம் -- வெகு சிலருக்கே இருக்கும் - அதில் ஒருத்தி தான் நம்ம நேத்ரா!

இருந்தாலும்...

இன்று நித்திரை தோற்க காரணம் ஒரு சின்ன குச்சியும், மணியோசையும்!

ஆமாம்... இப்போ தான் office- இருந்து PROJECT SUCCESSகாக TREATமுடிஞ்சு வந்தாள்.


காரிலிருந்து இறங்கும் போது ஐஸ் வண்டியின் மணியோசை மனதின் ஓரம் லேசாக நெருடியது


Sincere சிகாமணியாக, பின் மண்டையை தட்டிக் கொண்டாள் ..

"கஷ்டப்பட்டு மூணு மாசமா டயட் ராணியா, Office full கெத்தா வலம் வர்றதை நினைச்சுக்கோ ...நிமிஷத்துல உடைச்சிடாதே! Treat கூட எவளோ பல்லை கடிச்சிகிட்டு, dessert சாப்பிடாம சமர்த்தா, "சமந்தா" மாதிரி இருந்தே...போய் படு. காலையில ஏழு மணிக்கு புது project ஓட conference call இருக்கு!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டே வேகமாக வந்தவளுக்கு காத்திருந்தது - இரண்டு Speed breakers - Liftஇன் உள்ளே!


குல்லா போட்ட குட்டியும், குச்சியும்! 

19ஆம் மாடியில் இருக்கும் Unicorn குல்லா போட்ட குஷ்பு குட்டி, குச்சிக்கு குல்லா போட்ட மாதிரி இருந்த Kulfi ஐஸ் ஒன்றை, மெதுவா பதமா ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டதை ஒரக் கண்களால் பார்த்ததும் நேத்ராவின் நெருடல் - 

நயன்தாராவை பார்த்த நித்யானந்தா கணக்கா மாறியது!! படுக்கையில் தன் வேலையை காட்டியது!!


அப்புறம் என்ன ?


நம்ம நித்தியும் தோற்றார்...நேத்ராவின் நித்திரையும் தோற்றது! 


தோல்வியை ஈடு கட்ட வெற்றி தானே ஒரே வழி?. விரைந்தாள்- தெரு முனையில் நின்ற ஐஸ் வண்டிக்காரனிடம்...

வெற்றிப் புன்னகையோடு "நாயகன் கமல்"rangeக்கு 

"நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை" என டயலாக் சொல்லிகொண்டே,

வீட்டுக்குள் நுழைந்து கதவைப் பூட்டினாள்!


அந்த நாலு பேர் - இரு கண்கள், ஒரு நாக்கு, கையளவு மனசு! 



***




2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...