Monday, February 1, 2021

சிந்தனைக்குரிய பகுதி - "குழந்தைத்தனம்" by Vidhya Nivash

 


காலம் மாறலாம்...

கோலம் மாறலாம்...

ஆனால் மனதில் இருக்கும் அழியா குழந்தைத்தனம் என்று மாறும் யாரும் இல்லாதபோது பூனைபோல் எட்டிப்பார்க்கும் வெளியே..


நிழல்களை நிஜம் என்று எண்ணி ஏங்கும் காலம் போய்,நினைவுகளே நிஜமாகிறது ஒழிந்திருக்கும் குழந்தைத்தனம்..


மழையை பார்த்தவுடன் மனம் துள்ளும் மரத்திலிருக்கும் நீர்த்துளிகளை ஆட்டி பார்க்க வேண்டுமென்று,

பூவை அள்ளி தலை நிறைய வைக்கும் போதும்,

கண்ணாடி வளையலை போட்டவுடன் குலுக்கிப் பார்ப்பதும்,

பாவாடை கட்டியுடன் ஒருமுறை சுற்றி வருவதும் ,

இன்றும் யாராவது புது ஆடை உடுத்தியுடன் அழகாய் இருக்கு என்று சொல்ல மாட்டார்களா???என்று ஏங்கும் குழந்தைதனம் !!!


முகம் கழுவியவுடன் எத்தனை கைத்துண்டு இருந்தாலும் பாவாடையில் துடைப்பதும், குழந்தைகளிடம் என்னுடையதை யார் தொட்டது என்று சண்டை போடும் போதும்..

இன்றும் யாராவது திட்டினாலும் தேடும் அம்மா முகம்,

பிள்ளைகளை திட்டி விட்டு ஒளித்து எடுத்து சாப்பிடும் நொறுக்குத்தீனியும் மறைந்திருக்கும் குழந்தைத்தனம் பல சொல்லும்..




அன்ன நடை நடந்து

குள்ள குடைபிடித்து

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி

வண்டி வண்டியா அழுது

நொண்டி நொண்டி ஆடி

கிள்ளி கிள்ளி உண்டு

அள்ளி அள்ளி குளித்து

பம்மி பள்ளி சென்று

சொட்ட சொட்ட நனைந்து

முட்ட முட்ட தண்ணி குடித்து

கலகல சிரித்து

விரட்ட விரட்ட ஓடி

வரி வரியாய் அடி வாங்கி

யாரும் அறியா தூங்கி

இன்னும் என்னில் தூங்கும் குழந்தைத்தனம்!!!


5 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...