Tuesday, February 9, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"ஏன்" by Vedavalli Ramani

 


நான் ஏன் பிறந்தேன் என்று நினைக்கவில்லை.பிறந்த பயன் அடைந்தேன்.ஆனால் நல்லவரை கைபிடித்தும் கடைசி வரை கூட இருப்பேன்.தீர்க்கசுமங்கலி சினிமா போல் கூட போவோம் என்று சொல்லி இருபது ஆண்டுகளாக என்னை தனியாக விட்டு போனது ஏன் வின் மீன் குழந்தைகளே விடை தெரிந்தால் சொல்லுங்களேன்.ஏன் ஏன் ஏன்???


வணக்கம் அம்மா,

அவர் காண வேண்டிய கனவுகளை ,மிச்சமிருக்கும் கடமைகளை உங்கள் விழிகளில் கண்டு மகிழ்வதற்காக என்று நினைக்கிறேன்.

                                                                              - Vidhya Nivash 

வருத்தம் வேண்டாம் அம்மா. எத்தனை ராமானுஜம் தோன்றினாலும் இறைவனின் கணக்குக்கு நம்மால் பதில் தேட முடிவதில்லை. ஆனாலும் தங்கள் குழந்தைகளுக்கு தாங்கள் என்றுமே அன்னையாகிய கடவுள்தான். இருவரின் (தாய், தந்தை)பாசத்தை ஒரு சேர அனுபவித்தவர்கள் தங்களின் குழந்தைகள். மே லும் இவர்களால் மட்டுமே ஒரு செயலை செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு கடவுள் தங்களை நியமித்து இருக்கிறார். 👍🏻👍🏻👍🏻👍🏻

                                                                                 -Veena Shankar 

அம்மா அவர் அன்றும் இன்றும் என்றும் உங்கள் அழகான இதயத்துடனே எங்களுடன் இருக்கிறார்❤️❤️❤️🙏🙏🙏

                                                                        - Akhiladevi Kumaran



 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...