"ஏன்" என்ற தலைப்பில் பிறந்தேன்,
பிறந்தவுடனே பிரபலமனேன்,
பிரபலமானவுடன் விமர்சிக்கப்பட்டேன்,
விமர்சிக்கப்பட்டவுடன் மறைந்தேன்,
மறைந்தவுடன் பிறப்பேன்,
மீண்டும் வருவேன்,வளர்வேன்..
இருப்பேன், இருக்கமாட்டேன்!!!
வெட்கத்தில் சிவந்தேன்
கோபத்திலும் சிவந்தேன்!!!
அழகில் பிரமித்தேன்
ஆச்சரியத்திலும் பிரமித்தேன்!!!
வலியில் துடித்தேன்
பசியிலும் துடித்தேன்!!!
படித்து மகிழ்ந்தேன்
படிப்பித்தும் மகிழ்ந்தேன்!!!
கேட்டு ரசித்தேன்
ரசித்தும் கேட்டேன்!!!
எழுதி மகிழ்ந்தேன்
மகிழ்ந்தும் எழுதினேன்!!!
தனிமையை ரசித்தேன்
தன்னிலை மறந்தேன்!!!
கேட்டு கேட்டு பார்த்தேன்,
தேடி தேடி பறந்தேன்,
ஓடி ஓடி தேடினேன்,
பாடி பாடி ஆடினேன்,
தூண்ட தூண்ட எழுவேன்,
தோண்ட தோண்ட வளர்வேன்,
காத்து காத்து பூத்தேன்,
கடைசியில் கண்டேன்,
கண்டவுடன் ஓய்ந்தேன்!!!
எல்லோரிலும் இருப்பேன்,
தேவைபடும்போது வருவேன்,
சிலநேரம் புதிராக இருப்பேன்,
பலநேரம் பதிலாக இருப்பேன்,
இளமையில் ஆரம்பிப்பேன்,
இடையில் காத்தியிருந்தேன்,
முதுமையில் முடிப்பேன்,
பிரியத்தான் பிறந்தேன்!!!
சரியான நேரத்தில் கேட்க வேண்டும் ஏன்???
இல்லையென்றால் பலரின் ஏன் ???
நம்மேல் விழுவேன்!!!
சில நேரம் மௌனமே மேல் என உணர்ந்தேன்!!!





Mounamae male
ReplyDeleteArumaiyana,kavithai
ReplyDeleteThank you Amma 🙏
ReplyDelete💝💝💝
ReplyDeleteThank you Kalai 😊
ReplyDeleteஅழகாக இருக்கிறது வித்யா 🧡
ReplyDeleteThank you akka 🙏
ReplyDelete