Saturday, April 17, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"வானவில்" by Jaya

 


சூரிய ஓளியும்

மழைத்துளியும் 

தாய் தந்தையராய்

வானில் ஜனித்து

வர்ணங்களை அள்ளித்தெளித்து


மனதிற்கு இதமாய்

பெரியயோரையும் மழலையாய் 

மகிழ்விக்கச்செய்யும் 

மாயவித்தைக்காரி இவள்


வில்லாய் வானில் 

அழகாய் தோன்றுபவள்

இந்த வர்ணவில்😊


மழைத்துளி மீது 

தான் கொண்ட அபரிமிதமான 

காதலை 

தூரிகை கொண்டு வானில் 

தீட்டிய பகலோனின்

காதல் ஓவியம் 

"வானவில்"

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...