சேரர், பாண்டியரை பற்றி அறிந்துகொள்ள வலைத்தளத்தில் கிடைத்த நா.பார்த்தசாரதி அவர்களின் புத்தகங்களே உதவியது." பாண்டிமாதேவி" புத்தகம் பாண்டியர்களைப் பற்றிய வரலாற்றையும், கணவனை இழந்து மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் பாண்டிய நாட்டு அரசியின் நிலைமையை படிக்கும்பொழுது நம் மனமே கலங்கும் .அழகாக வர்ணித்து இருப்பார் படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும், கடைசியில் எல்லாத்தையும் இழந்து அரசி தவம் மேற்கொள்ள , தவமே அனைத்திற்கும் விடை போல முடித்திருப்பார் ஆசிரியர்.
"கபடபுரம்" நாவல் கடலில் மூழ்கிப்போன தமிழகத்தின் தென் பகுதியை பற்றி அறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. முத்துக்குளிக்கும் விழாவைப் பற்றியும் ,பண்டைய தமிழர்களின் பழக்கவழக்கங்களை படிப்பதற்கும் உற்சாகமாக இருந்தது. "வஞ்சிமாநகரம்" எனும் நாவல் சேரர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி அறிந்து கொள்வதற்கும் ஒரு ஆரம்பமாக இருந்தது.
சேரர்களுக்கும்,பாண்டியர்களுக்கும் ஆயுதமாக இருந்த காந்தளூர் சாலையை பற்றி அறிந்து கொள்வதற்கு இவருடைய நாவல்கள் பெரும் உதவி புரிந்தது.இலங்கை,கொற்கை,தமிழ் சங்கம் பற்றி அழகாக வர்ணித்திருந்தார் .
இதைத்தொடர்ந்து "மணிபல்லவம்" என்னும் இவருடைய நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் எளிமையான நடையில், கலைநயம் நிறைந்த ஒரு நாவல். ஐந்து தொகுதிகளாக பிரித்து இருந்தார். இது முழுக்க காவிரிப்பூம்பட்டினத்தில் அன்றைய வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தது. இன்றைய சினிமா கதை போல இருந்தாலும் அதில் அன்றைய தமிழர்களுடைய பழக்கங்கள் உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருந்தது .எப்படி ஒரு சாதாரண இளைஞன் முரடனாக வளர்ந்து, வீரம் மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்று கல்வி கற்று, ஞானம் பெற்று வாழ்க்கைக்கு கல்வியா? வீரமா? என்ற கேள்விக்கு ஆசிரியர் விடை கூறியிருக்கிறார் .
இதில் வரும் புத்தத் துறவியான ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை மறக்க முடியாத கதாபாத்திரம் .வாழ்க்கைக்கு தேவையான பல கருத்துக்கள் அடங்கிய புத்தகம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஒரு ஞானியும் ஒரு பெண்ணின் தவத்தில் தோல்வி அடைவது போல ஆசிரியர் முடித்திருப்பார்.




Hi,Vidhya,l,like very useful your rest time,super
ReplyDeleteThank you Amma
ReplyDelete