துணிச்சல்
அசுவதியாகிய நான் துணிச்சல் இல்லா பெண் தான். அந்த காலத்து கலாச்சாரத்தையும் இக்கால நாகரீகத்தையும் விரும்புபவள். நகரத்தில் படித்து வளர்ந்தவள்; பணிபுரிகிறேன். நகரத்தின் கூட்ட நெரிசல் அனைவரும் அறிந்ததே. அதுவும் நகரப் பேருந்துகளில் சென்று வருவதென்றால் மிகவும் சவாலான விசயம் தான். மேலும் இடி மன்னர்களின் சேஷ்டைகளும் கல்லூரி மாணவர்களின் கிண்டல்களும் நம்மை சூழ்ந்து நிற்கும். இதற்கிடையே மாணவியரும் பெண்களும் பயணிப்பது சொல்லி மாளாது. இப்படியே பேருந்தில் நான் நின்று கொண்டிருக்கும் சமயம் ஒரு கல்லூரி மாணவியை அப்பா வயதுடைய ஒருவன் சீண்டிகொண்டிருப்பதை பார்த்தேன். அம்மாணவி அந்த இடத்தை விட்டு கூட நகர முடியாத வண்ணம் கூட்டம். முன்னே சென்றால் வயதானவர் அமர்ந்திருக்கிறார். பின்னே செல்லலாம் என்று நினைத்தால் ஆடவர் . என்ன செய்வது என முழித்தாள். தர்ம சங்கடத்திலிருந்த அப்பெண்ணை காப்பாற்ற முற்பட்டேன். எங்கிருந்துதான் எனக்கு தைரியம் வந்தது என்றே தெரியவில்லை. மெதுவாக அவன் நின்ற இடத்தை நோட்டமிட்டேன். சற்றே என் காலை கொண்டு அவன் காலை நான் மிதிக்க ஓ! வென்று அவன் அலற , குறு குறு கண்களால் என்னை பார்த்தான். உடனே நான் சாரி, தெரியாம மிதிச்சிட்டேன் என்று சொன்னேன். இதற்கு மேலும் நின்றால் ஆபத்து என்று நினைத்து அவன் வேறு இடம் நகர்ந்தான். அம்மாணவியும் தன் கண்களால் எனக்கு நன்றி சொன்னாள்.
எனக்கு இன்று வந்த தைரியம்
போல் எல்லா நேரத்திலும் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும் கடவுளே என பிரார்த்தித்தேன்.
பயமும் தேவையான நேரங்களில் பாயத்தான் செய்கிறது.

ஆமாம் உண்மை.அருமை👏👏
ReplyDeletethank you vidhya
Delete