Thursday, October 8, 2020

உடையார் ஆறாம் பாகம் சுருக்க விளக்கம் 1 by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

போர் முடிந்து ஒவ்வொரு படையாக தஞ்சைக்கு வருகை.முதலில் இராஜேந்திரனுடைய படை வந்தது. மிகப் பெரிய ஆரவாரம் எழுந்தது .அதனை தொடர்ந்து ஒவ்வொரு படையாக உள்ளே வர கடைசியாக ,ஒரு யானையில் வேல் தலைகீழாக பிடிக்கப்பட்டு அஸ்தி கவசம் வந்தது .அனைவரும் அதை கண்டு அது யாராக இருக்கும் என்று வருந்தினர். அது வைஷ்ணவ தாசன் என்ற செய்தி பரவியது. அவனுடைய மனைவிக்கும் அந்த செய்தி சென்றது.அதை கேட்டு அவள் சுருண்டு விழுந்தாள் .


இவ்வளவு பேர் இருக்கும்பொழுது ஒற்றர் படைத் தலைவன் மட்டும் ஏன் என்று கதறினாள்.வைணவ தாசனின் வீட்டு வாசலில் அவருடைய அஸ்தி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அங்கு கருவூர்தேவர் விரைந்து சென்றார் .அவளை சமாதானப்படுத்தினார் .அவன் புத்திசாலி தனியாக சென்று இருந்தால் வென்றிருப்பான். கூட்டமாக சேர்ந்ததால் வேறு வழியில்லாமல் அவனும் மாட்டிக்கொண்டான். நீ விரும்பினால் அவனுடன் இப்பொழுது பேசு என்றும் கூறினார் .


அவள் கண்களை மூட அவனுடைய ஆத்மா வந்தது. அவளுடைய உடலில் இருந்து அவளை வெளியே கொண்டு வந்து. நீ என்னை இப்பொழுது தழுவுகிறாய் இது உன்னுடைய எண்ணம். உயிரற்ற வெறும் எண்ணம் மட்டுமே இருக்கிறது. உயிரோடு சேர்ந்து இருந்தால் அதுதான் வாழ்க்கை. இங்கிருந்து கிளம்பி நீ தஞ்சைக்கு செல். கோயில் கட்டும் இடத்திற்கு அருகில் , தினமும் பூஜை செய்ய நானும் உன்னோடு இருக்கிறேன் என்று கூறி மறைந்தான். பின்னர் மன்னர் வந்தார் அவரும் தன்னுடைய வருத்தத்தைதெரியப்படுத்திக் கொண்டார் .அவள் நான் இங்கிருந்து தஞ்சை செல்ல விரும்புகிறேன். எனக்கு ஒரு வீடு ஏற்படுத்திக் கொடுங்கள் என்று வேண்டிக்கொண்டாள்.


மக்கள் ஆசைப்பட்டதால் மன்னர் ஊர் முழுவதும் உலா வந்தார். அப்பொழுது ஒருவன் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் என்று நவகண்டம் கொடுத்தான். அதை கண்டு மன்னர் மயங்கி, போதும் !போதும்! என்று போதும் ஐயா!! என்று கலங்கினார். அவர் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


பஞ்சவன்மாதேவி நேராக காளி கோயிலுக்கு சென்று. அங்கே நாங்கள் சிறிய இழப்புடன் வெற்றி அடைந்து வந்துள்ளோம். அங்கே இறந்தவர்களின் ஆத்மாவுக்கு ஆக நான் மூன்று நாள் உபவாசம் இருக்க போகிறேன். என்று அங்கேயே படுத்து உறங்கினாள்.


சில சேர அந்தணர்கள் காட்டில் புலம்பிக் கொண்டிருந்தனர் .அப்போது அங்கே ஒரு குதிரையில் மயங்கிய வண்ணம் ஒருவன் வந்தான் .யார் என்று புரட்டிப் பார்த்தபோது வலதுகை இல்லாமல் இருந்தான்.இவன் பரசு அல்லவா ?என்ற அனைவரும் கத்தினர் .கங்கதேசம் மட்டும் சேர தேசத்தின் எல்லைக்கு இடையில் பரசு பயிற்சி கூடம் அமைத்து வீரர்களுக்கு தேர்ச்சி கொடுத்து கொண்டிருந்தான்.காந்தளூர் போரின் பொழுது அவன் அங்கிருந்து மேலை  சாளுக்கியத்தை நோக்கி சென்று விட்டான்.


அங்கே தந்தை,தமையன் உடன் சிறப்பாக வாழ்ந்து வந்தான். அங்கிருக்கும் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வாழ்க்கை இனிதாக இருந்தது . அப்பொழுது திடீரென்று சோழ தேசத்தில் இருந்து 7 லட்சம் பேர் துங்கபத்ரா நதிக்கரையில் வந்து போரிட , அவன் குடும்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை .சோழப்படை அவன் குடும்பத்தை சீரழித்தது .அவனுடைய கையையும் வெட்டி விட்டனர். அவனை இறந்ததாக எண்ணி விட்டு சென்றனர் .எப்படியாவது ராஜராஜ சோழனை அழிக்க வேண்டும் என்று அங்கிருந்த குதிரையிலே பயணப்பட்டு வந்தான்.


முதலில் உருவத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு கட்டினான் . மூச்சுக்காற்று அனைத்தையும் பயன்படுத்தி ஊது குழலில் உள்ள விஷ அம்பு வெளியே வர ராஜராஜனை கொல்ல வேண்டும் .கண்டிப்பாக கொல்லுவேன் என்று திட்டம் தீட்டினான்.


கோயில் கட்டும் இடத்தில் பெருந்தச்சர் ஒரு நூல் இழை கூட விலகக்கூடாது. விலகினால் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று கோபப்பட்டு கொண்டிருந்தார் .மன்னரும் ஆர்வமாக பாறையை உடைத்தார். அவருடையது மிகத் துல்லியமாக இருந்தது .அனைவருடைய நலம் விசாரித்தார் . தொண்டைநாட்டு அந்தணர்களையும் கூப்பிட்டு உங்களுக்கு ஏதும் வேண்டுமா பணம் உயர்வு வேண்டுமா என்று கேட்டார்.சில அதிகாரங்கள் தான் வேண்டும். நாங்கள் எங்களுடைய சொந்த வீட்டிற்கு சென்று வர வேண்டும் என்றும் கேட்டனர் .உடனே அவர்களை நோட்டமிட ஒரு ஒற்றனை நியமித்து விட்டு மன்னர் அங்கிருந்து கிளம்பினார்.


காளி கோயிலில் சென்று பஞ்சவன்மாதேவி இடம் கடுமையாக பேசினார். ஏன் சிறிது ஓய்வு எடுத்த பின்பும் இதை மேற்கொள்ள வேண்டியது தானே இப்படி உடனே செய்ய வேண்டுமா?? என்று கோபப்பட்டார். மனதில் அவளுடைய கருணையை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.


மாதேவடிகள் உடனடியாக நாகப்பட்டினம் அவசரமாக வர வேண்டுமென்று ஓலை வந்தது .காவலர்கள் தாங்களும் கூட வர ,வேண்டாம் என்று மீண்டும் வருவேன் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் .புத்த பிச்சுவை கண்டு வணங்கினாள் .அப்பொழுது அவர் சில தினங்களுக்கு முன் இங்கே பத்து பேர்கள்.ஈழதேசத்திலிருந்து பார்க்க புத்தபிட்சு போல் இங்கே வந்து இருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் புத்தபிட்சு அல்ல சோழ மன்னனை அழிக்க திட்டம் தீட்டுவது ஆகவும் சக்கரம் ,ஊதுகுழல் என்று பேசுவதாகவும் செய்தி வந்தது .அவர்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு விஷ குப்பியும் கிடைத்தது. அது பாஸாணகல்லில் இருந்து எடுக்கப்பட்ட விஷம் . சேர தேசத்தில் தான் இதைப் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .


வேதாரண்யத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சரியான பாதுகாப்பு இல்லை .யார் வேண்டுமானாலும் வந்து விடுகிறார்கள் .இதைப் பற்றி ஓலை இராஜேந்திரனுக்கு பஞ்சவன்மாதேவிக்கும் அனுப்பப்பட்டது. எனக்கு ஒரு கனவு வந்தது நீ சைவத்தில் இருந்து புத்த மதம் மாறியது போல ,மீண்டும் சைவ மதத்திற்கு மாறுவதாக கனவு. உன்னை வேண்டிக் கொள்கிறேன் எக்காரணம் கொண்டும் மீண்டும் புத்த மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறாதே .அது புத்த மதத்தை இழிவு படுத்தியது போல் இருக்கும் என்று வேண்டிக்கொண்டார் . உன் தந்தை உடனே நீ அமைதியாக இரு அதுதான் நல்லது என்று கூறினார்.


மாதேவடிகள் உடனடியாக தஞ்சைக்கு கிளம்பினாள் .போகும் வழியில் ஒரு இடத்தில் ஓய்வெடுக்கும் பொழுது ஒருவன் அவளை கேலி செய்ய. யார் என்று பார்த்து அவனுக்கு வலது கை இல்லை. அவனை பார்த்தால் நல்லதாக படவில்லை அங்கிருந்து விலகிச் சென்றாள்.


மன்னரிடம் பெருந்தச்சர் 14 நிலைகளில் விமானம் தயாராக போகிறது .இதுவரை பதினோரு நிலைகள் தயாராகிய உள்ளன.

கருவறை பற்றி அருண்மொழி சில கேள்விகளை கேட்க, கருவூர்தேவர் போல் கேட்கப் போகிறாய் .ஆவுடையாரை எட்டு துண்டுகளாக செய்து, ஒரு பாணம் தயாராக உள்ளது. ஏன் ஒரே கல்லில் முடியாதா ??லிங்கம் என்பது வெறும் அடையாளம் தான் .அங்கே ஒருவன் இன்று நவகண்டம் புரிந்தான். அவனுடைய சார்பாக அங்கே ஒரு சதுரக்கல் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது .அதுபோல லிங்கம் சிவனுடைய அடையாளம்தான் ,அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். இப்படி தான் செய்வது என் று விதி அல்ல . எப்படி ஆவுடையாருடன் பாணலிங்கம் இணைக்க படுகிறதோ ,அது அசைக்காமல் இருக்கிறதோ அதில் தான் இருக்கிறது விஷயம் .ஆகும் என்றால் எதுவும் நடக்கும் என்று கூறினார் பெருந்தச்சர்.


மன்னர் மற்றும் அருண்மொழி பட்டண் அதை பார்க்க ஆசைப்பட்டார்கள். இப்பொழுதே பார்க்கவேண்டும் ,முழுவதும் முடித்தபின் பார்க்கலாமே என்று பெருந்தச்சர் கூற இல்லை .இருந்தாலும் அவர்கள் பார்க்க ஆசைப்பட்டார்கள் .இவ்வளவு மழமழப்பாக இருக்கிறது லிங்கம் ஆம் இதெல்லாம் ஒரு ரகசியம் சிற்பிகள் ரகசியம். எப்படி இதை இப்படி ஆக்கினீர்கள் .ஒவ்வொரு புறமாக புரட்டிப் போட்டுப் புரட்டிப் போட்டு நாங்கள் அதை இவ்வளவு அழகாக செதிக்கி இருக்கிறோம் என்று வியந்து கூறிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே கருவூர் தேவர் வருகை. பெருந்தச்சர் விரும்பவில்லை, ஏன்?? ஏதேனும் குறை சொன்னால் என்னால் ஏற்க முடியாது, அதற்காக மீண்டும் கற்களை தேட முடியாது.



மன்னரால் அதை ஏற்க முடியவில்லை ஏன் கருவூர்த் தேவரை வரவேண்டாம் என்று சொல்கிறார் என்று யோசித்தார் .அனைத்தும் தானே செய்வதாக கூறுகிறாரோ என்று மனதில் ஒரு எண்ணம் வந்தது. கருவூர்தேவர் வந்து குணவனை ஆசீர்வதித்து பல கோயில்கள் கட்டுவாய் என்று கூறினார். அப்பொழுது அங்கே மண் வழியில் யானைப்பாகன் சண்டை நடந்தது .அவன் அவர்களை எச்சரிக்க அந்த இடம் ஆபத்தானது என்பதற்காக ஒரு மரக்கட்டையை எடுத்து வீசினான் இலத்தி கத்த.அதைக்கண்ட யானைக்கு மதம் பிடித்து அவனை தூக்கி எறிந்தது அவன் இறந்து விட்டான். இலத்தி அதற்கு பொறுப்பேற்று கைது செய்யப்பட்டான் .அரசவை வரை இந்த பிரச்சனை சென்றது. அங்கே சென்று இது தற்செயலாக நடந்தது .எதுவும் திட்டமிட்ட கொலை இல்லை என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ஆனாலும் மறவர்கள் சிற்பிகளை சும்மா விடவில்லை பிரச்சனை பண்ணிக் கொண்டே இருந்தார்கள். குணவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னால் அவனுக்கு அவமானம், சிற்பிகளுக்கு அவமானம் என்று புலம்பினான் .சீருடையாள் சமாதானப் படுத்தினாள்.


ஒருவழியாக சமாதானமாகி லிங்கப் பிரதிஷ்டை பற்றி பேசினான். அது மிக மிக கவனமாக செய்ய வேண்டும். ஒன்றை ஆள் அளவுக்கு மருந்தை சுடசுட ஊற்றி பாணத்தை இறக்கிய கால் நொடிகளில் எல்லாம் இறுக்க வேண்டும் .பாணம் இறங்கியவுடன் அந்த இடம் தளர்வாகவும் ஆனால் தஞ்சை மண் இறுக்கமானது. இடம் தளர்வாகவும் அதை சுற்றியுள்ள இடம் இறுக்கமாக இருந்தால் .அது மிகக் கடினம் என்ன செய்ய வேண்டுமோ??. அதுக்கு இறைவனுடைய உதவி வேண்டும் என்று கூறினான் சீருடையாளும் அதைக்கேட்டு வியப்படைந்தாள்.


பிரம்மராயர் உடன் குந்தவை பேசி அருண்மொழி ராஜாராஜீ பற்றியும் பேசி ,சேர்த்து வைத்தார் .பிரம்மராயர் அருண்மொழி உடைய மனைவி எதிர்க்கவில்லை என்றால் இருக்கட்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.அவளுக்கு ஒரு தனி மாளிகை அமைக்கப்பட்டது .அவள் ராஜராஜ சோழனுடைய வாழ்க்கையை நடன நாடகமாக இயற்ற போறேன் என்று கூறினாள். அதைக் கேட்டு அருமையான யோசனை இதற்கு நானே உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறினான் அருண்மொழி.மன்னர் போல் யார் வேடம் போடுவது ?நீயே சரி. அவள் அருமையாக அவரைப் போல் நடித்துக் காட்டினாள். உடனடியாக 40 பேர் துணையுடன் நாடக ஒத்திகை ஆரம்பமானது .தினமும் அங்கே பல பெண்கள் கூட ஆனால் சரியான பாதுகாப்பு இல்லை.


போரில் வென்றதிலிருந்து மறவர்கள் கர்வத்தில் அலைந்தனர் .ஆட்டம் பாட்டத்தை கேட்ட மறவர்கள் அங்கே இருப்பவர்களை கேலி செய்ய ஆரம்பித்தனர். அங்கே சீருடையாளை ஒருவன் கேலி செய்ய அதை தாங்கிக்கொள்ள முடியாமல் ராஜாராஜீ அவனை உதைத்து விட்டாள்.இதனால் கோபம் கொண்ட அவன் ஈட்டியால் சீருடையாளை தாக்கினன்.அங்கே பெரிய கலவரமாகி விட்டது.


இந்த செய்தி பரஞ்சோதிக்கு மற்றும் அருண்மொழிக்கு சென்றது .பரஞ்சோதி அங்கே விரைந்து சென்று அவனை கட்டி வைக்க ஆத்திரத்தோடு வந்த குணவன் அவனை அடித்து விட்டான்.பின்பு வந்த அருண்மொழி பட்டன் ஒரு வீரனை இவ்வாறு கட்டிவைத்து அடிப்பது முறையா ?என்று பரஞ்சோதிக்கும் அவனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்தது. உங்களுக்கு தண்டனை கொடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினான் .தவறு ,இவ்வளவு பெண்கள் கூடி இருக்கும் இடத்தில் சரியான பாதுகாப்பு இல்லாதது உன்னுடைய தவறு என்று கூற பரஞ்சோதிக்கு மிகவும் வருத்தம்,இச்செய்தி எனக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டான்.


பின்பு அருண்மொழி பட்டண் ராஜாராஜீயை கடிந்து கொண்டான். அசிங்கமாகப் பேசினான்.அதனால் கோபம் வந்துவிட்டது. கவனம் தேவை என்று கூறினான் இங்கிருந்த அதிகாரிச்சிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்றும் திட்டினான் .பிரச்சனை பெரிதாகி அரசவை கூடியது ஒரு வீரனை கட்டி வைத்திருக்கும் பொழுது அடித்தது மிகப் பெரிய தவறு .உன்னுடைய குடும்பத்தார் ஆக இருந்தால் நீ இப்படி பேசுவியா ?,வாளெடுத்து இருவரும் சண்டை போட்டால் தவறல்ல .ஆனால் ஒருவர் கைகட்டி இருக்கும் பொழுது இப்படி அடிப்பது தவறு .குணவன் கைதி உறுதியானது .அவனும் அவமானத்தில் வெதும்பினான் என்னால் சிற்பிகள் அவமான படுகிறார்கள் என்று சொல்லி. வேலையிலும் ஈடுபடாமல் கொண்டிருந்தான் ,சீருடையாள் அவனை சமாதானப் படுத்தினாள்.


கருவூர் தேவர் இங்கே எதுவும் சரி இல்லை என்று கூறி தனிமையில் சென்றார் .குணவன் இல்லை என்றால் கோயில் வேலை ஆகாதா?? என்று பெருந்தச்சர் வேலையை ஆரம்பித்தார் .லிங்கப் பிரதிஷ்டைக்கு மன்னருக்கு அறிக்கை சென்றது .முதலில் கருவூர்தேவரை அல்லவா அழைக்க வேண்டும் என்று மன்னர் .அவருக்கு ஆளனுப்பி உடனடியாக வரும்படி கேட்டுக் கொண்டார் . ஜோசியரிடம் நாள் பார்க்கப்பட்டது அனைவரும் கூட கருவூர்தேவர் வருவதற்குமுன் மருந்து அரைக்க ஆரம்பித்தது. மன்னருக்கு வருத்தமாக இருந்தது ,மருந்து காச்சி பாண லிங்கத்தை இறக்க, மறவர்கள் லிங்கத்தை இறுக்க சூடாக மருந்து உள்ளே கொட்ட கொட்ட இறங்கியது .பெருந்தச்சன் அதன் உச்சியில் தட்ட முதலில் எதுவுமில்லை பிறகு ஒரு பக்கமாக சரிந்தது லிங்கம் .அனைவரும் கத்தினர் மருந்து முழுவதுமாக சுரண்டி எடுக்கப்பட்டு மீண்டும் இறக்க வேண்டுமென்று பெருந்தச்சர் கூறினார். அனைவருக்கும் வருத்தம் இந்த செய்தி குணவனையும் சென்றடைந்தது அவன் அமைதியாக சென்றான் .


அதே போல், இம்முறை சூடு தணிக்க லிங்கத்தை ஈரத்துணியால் குளிரூட்ட .இம்முறை முன்பக்கமாக லிங்கம் சரிந்தது. எல்லோரும் கத்த மன்னரும் துவண்டார். என் ஈசனே!! ஏன் கருவூர்தேவர் ,அருண்மொழி இன்னும் வரவில்லை .இப்பொழுது குணவன் வந்து நான் செய்கிறேன் என்று கூற ,நான் இறந்தால்தான் நீ வந்து செய்ய வேண்டுமென்று பெருந்தச்சர் கூறிவிட்டார்.


கருவூர்தேவர்,அருண்மொழிவுடன் சில மூட்டை மூலிகை உடன் வந்தார் .கருவறையை சென்று வணங்கினார் .அங்கே இருந்த குணவனை கண்டு தனியாக கோயில் கட்ட போகிறாயா என்று சிரித்தார் .கொண்டுவந்த மூலிகைகள் அரைக்கப்பட்டன .மறவர் தான் இங்கே இருக்கிறார்கள் ,எங்களை மட்டும்தான் அழைத்தனர்.ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் அறிக்கை விடப்பட்டது .அனைவரும் ஒன்று கூடினர் ,அரண்மனையில் இருந்து வந்த பெண்கள் வேலையில் ஈடுபட்டனர் . அங்கே இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்தனர் .மருந்து காச்சிய சட்டியைத் தூக்கி செல்லும் பொழுது மன்னரும் ஒரு சட்டியை தூக்கி செல்ல அதுதான் முதலில் சென்று கொட்டப்பட்டது. எல்லோரும் அதில் ஒன்றாக இணைந்து லிங்கத்தை இறக்க மருந்து சுடசுட கொட்ட உள்ளே, இறுக்கிப்பிடிக்க அது மெதுவாக உள்ளே இறங்கியது. இறங்கிவிட்டது என்று பெருந்தச்சர் கத்தினார் .பின்பு இறுக்கமாக அனைவருடைய கைகளால் கயிறு இழுக்கக்கப்பட்டது ,அது நன்றாக இறுகியது . சிவனே !!சிவனே!! என்று ஆரவாரம் .கடைசியில் கருவூரர் அதன் உச்சியில் தட்டி பார்த்தார் .யானை அசைத்தால் கூட இனிமேல் இது அசையாது என்று கூறினார். பூஜை செய்ய வேண்டும் அதனால் இங்கிருக்கும் மண் மேட்டை முதலில் அகற்ற வேண்டும் என்று கூறினார் .அங்கு அனைவரும் குணவனை குத்திக் காட்ட ,அவன் மிகுந்த கோபத்துடன் அந்த ஊரை விட்டு சென்றான் .

நன்றி.


மீண்டும் ஆறாம் பாகத்தில் சந்திப்போம்...

Click here for Udayar audio book part 6:1👇


Udayar audio book part 6:1




No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...