Sunday, October 11, 2020

உடையார் ஆறாம் பாகம் சுருக்க விளக்கம் 2 by Vidhya Nivash


 


அனைவருக்கும் வணக்கம் ,

மணல்மேட்டை அகற்ற ஊரில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. உணவிற்கு என்ன பண்ணுவது இன்னும் ஆறு மாதங்களுக்கு கவலையில்லை அதன் பிறகுதான் பாண்டிய நாடு, தொண்டை நாட்டிலிருந்தும் கொண்டு வர சொல்ல வேண்டும். தொண்டை நாட்டு அந்தணர்களே சமையலுக்கும் நியமிக்கப்பட்டார்கள். மறவர்கள் தஞ்சை எல்லைக்குள் மது அருந்த மன்னர் தடை விதித்தார். சேரிலிருந்து மக்கள், யானை ,குதிரையை பராமரிக்க வந்து சேர்ந்தனர் .நாம் அல்லவா?? சென்றிருக்கவேண்டும் அவர்களே வந்து விட்டார்கள் என்று நேரடியாக சென்று அவர்களை வரவேற்றனர். அரண்மனையிலிருந்து ஏதும் உதவி தேவையா?? என்று பஞ்சவன்மாதேவி கேட்க என்னுடன் இருந்தால் போதும் என்று மன்னர் கூறிவிட்டார்.


வயதாகிவிட்டது உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை தேவை என்று பஞ்சவன்மாதேவி கூறினார். அரசு பொறுப்பை ராஜேந்தருக்கு கொடுத்து விட வேண்டியது தானே என்றும் கேட்டார். கண்டிப்பாக கோயில் பணி முடிந்தவுடன் அது தான் முதல் வேலை .ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவன் பதவியேற்றவுடன் நாம் இங்கு இருப்பது நல்லது இல்லை நாம் பழையாறைக்கு செல்லவேண்டும் .ஆனால் அவனும் இங்கு இருக்க விரும்ப மாட்டான். யார் கோவிலை காப்பது. அவன் தலைநகரை மாற்றி, ஜெய கொண்ட சோழபுரத்தை மாற்றி அங்கே கோட்டையும் கோயிலும் கட்ட போகிறான். உங்களுக்கு எப்படி தெரியும், ஒற்றர்கள் மூலம் வந்த செய்தி குணவன் கோயில் கட்ட நிலம் தேடிக் கொண்டிருக்கிறான் என்று.


மருவூர் அந்தணர்கள் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் குடந்தையை அடையப் போகிறார்கள். அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார்.


தொடர்ந்து உலோக சிற்பிகள் தங்களுடைய பொறுப்புக்கள் என்னவென்று கேட்க வந்தார்கள் அரண்மனைக்கு, மன்னருக்கு பிடிக்கும் என்று ரிஷப ரூடர் சிலையும் ,அதோடு மட்டுமல்லாமல் தங்கத்திலான மண்வெட்டியின் கொண்டுவந்தார்கள். அதை வைத்தே நீங்கள் முதலில் மண்ணை எடுத்து துவக்கி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். மன்னர் அதை கண்டு வியந்தார்.


பரசு அந்தணர் போல வேடம் போட்டு மக்களோடு மக்களாக உள்ளே நுழைந்தான். கோயிலை கண்டு உள்ளுக்குள் வெதும்பினான். அங்கேயே படுத்து இரவில் உறங்கி விட்டான். விடியும் நேரத்திற்கு முன்பு மாதேவடிகள் உள்ளுக்குள் எண்ணி கொண்டே நடந்து வர இப்பொழுது புத்தர் எதிரில் வந்தால் அவரை வீட்டில் உபசரித்து, ஆனால் இப்ப இருக்கும் மாதேவடிகள் என்னுள் இருக்கிறார் புத்தர் , எதிரில் வருவது புத்தர் என்றாலும் விலகி செல்ல வேண்டும் . அது தான் உள் நோக்கு பார்வை. ஈழ தேசத்தில் இருக்கும், தங்கத்தாலான புத்த விக்ரகத்தை கண்டு வியந்தே கோயில் கட்டும் ஆசை வந்தது என் தந்தைக்கு அது வெறும் வெளி நோக்குப் பார்வை உள்நோக்கி பார்த்திருந்தால் இந்த கோயிலை கட்டி இருக்க மாட்டார்.


அப்பொழுது அங்கு ஒருவன் கனவில் புலம்பிக் கொண்டிருந்தான் .குத்த வேண்டும் என்னுடைய குலத்தை அழித்த உன்னை நான் கண்டிப்பாக கொல்ல வேண்டும் இதோ வருகிறேன் ராஜராஜசோழா??. இறப்பு என்பது இயற்கை கண்டிப்பாக அவருக்கு இறப்பு வரும் நீ கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை அமைதி கொள் !அமைதி கொள்! என்று கூறினாள். பரசு எழுந்து உட்கார்ந்து என்ன என்னுள் மாற்றம் என்று வியந்தான். மீண்டும் கோபப்பட்டான் என்ன இந்த மனிதன் இன்னும் கோபடிக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்த அவள் பிறகுதான் யோசித்தால் அவன் தந்தை கொல்ல வேண்டும் என்றமல்லவா கூறுகிறான். என்னசெய்வதென்று தெரியாமல் நடந்து சென்று விட்டாள்.


மண் எடுக்கும் வேலை மன்னர் ஆரம்பித்து வைக்க ஆரவாரத்துடன் தொடங்கியது. தொண்டை நாடு அந்தணர்கள் சமைக்க தெரியாது என்று கூறி ஆனால் மிக அற்புதமாக அரிசிக் கஞ்சியும் ,பீர்க்கை துவையலும், மிளகு கத்திரிக்காயும் ,புளிச்சோறு விதவிதமாக சமைக்க ஆரம்பித்தனர். பசிக்கு அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டார்கள். அந்தணர்கள் அவர்கள் பங்கிற்கு சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை அன்பளிப்பாக கொடுத்தார்கள். மன்னர் சேனாதிபதி பார்த்து உன்னுடைய ஏற்பாடா !!உன் பங்கு என்ன என்று கேட்டார். அதற்கு அவர் அவர்கள் தனித்து செயல்படுகிறார்கள் .நான் என்று யோசித்தார் ,ஒரு ஆள் உயரத்திற்கு சுற்றுசுவர் எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த அருண்மொழி தந்தை நீங்கள் சுற்றுசுவர் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் .அது மட்டுமில்லாது அங்கே வந்து கோவிலை பார்க்க வரும் மக்கள் தங்குவதற்காக ஒரு கோட்டையும் ஏற்படுத்திக் கொடுப்போம் நம்முடைய சார்பில் என்று கூறினான். அதை கேட்டு பிரம்மராயர் மகிழ்ச்சி அடைந்தார்.


மூன்று யானை அளவு வலுவுள்ள கல் விமானத்தின் மேலேகொண்டு போய் வைக்க, கீழே வெட்டப்பட்டு மேலே கொண்டுபோய் இணைக்கப்பட போகிறது. கவசத்தில் வரகரிசி நிரப்பி ஒவ்வொரு 12 ஆண்டிற்கு ஒரு முறை அதை புதுப்பிக்க வேண்டும். மன்னருடைய உடைய நாடகத்தையும் பஞ்சவன்மாதேவி பார்ப்பதற்காக ராஜாராஜீயும் சீருடையாளும் அழைத்து சென்றனர். நாடகத்தைப் பார்த்த பஞ்சவன்மாதேவி ஏன் என்னுடைய கதையை எல்லாம் சேர்த்தீர்கள், என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார் .இது போதும்! இது போதும் !இந்நேரமே எனக்கு மரணம் வந்தால் போதும் என்று கூறினாள். ஏன் உங்களுக்கு கோயில் கும்பாபிஷேகம் பார்க்க வேண்டிய ஆசை இல்லையா?? இதில் வருவதைப் பார்த்ததுமே எனக்கு பார்த்தது போல் ஆகிவிட்டது.




உலோகர்கள் மன்னர் கொடுத்த சிற்ப வேலைகளை எண்ணி பேசிக்கொண்டிருந்தார்கள்.


மன்னர் மண் எடுக்கும் இடத்தில் ஒவ்வொரு குழுக்களாக முன்னேறி பேசிக்கொண்டிருந்தார். இருட்டிவிட்டது போதும் என்று பஞ்சவன்மாதேவி கூறிக் கொண்டிருந்தாள். பரசு அந்த மக்கள் கூட்டத்தில் முன்னேறி வந்துக்கொண்டிருந்தான். மண் மேட்டின் மீது மாதேவடிகள் நின்று யாரையோ தேடுவதை போல் இருந்தது. பஞ்சவன் மாதேவி அவளிடம் சென்று நலம் விசாரித்தார். ராஜேந்திரன் எங்கே ??மன்னனை கொல்வேன் என்ற ஆள் இங்கே அந்தண வேடம் போட்டு அந்த கூட்டத்தில் இருக்கிறான் என்று கூறினாள். அதைக்கேட்ட பஞ்சவன்மாதேவி விரைந்து சென்றாள். ஏதோ தவறாக நடக்கிறபோது என்று புத்திக்கு எட்டியது. எதிரில் ராஜேந்திரனை கண்டு கூறினாள். மெய்க்காவல் படையினரையும் மன்னரிடம் நெருங்க உத்திரவிடு. இருவரும் விரைந்து செல்ல அங்கே கூட்டம் அதிகமானது.


பரசு மன்னரின் முன் நின்று என்னை யார் என்று தெரிகிறதா? என்று கேட்டான். மன்னர் தெரியவில்லை என்று நகர்ந்து விட்டார். மீண்டும் சென்று என்னைத் தெரியவில்லையா ??என் குலத்தை அழித்த உனக்கு என்னை தெரியவில்லையா என்று கத்தினான். சக்கரத்தை ஒரு கல்லில் தேய்த்து மன்னர் மீது எறிந்தான். இடையே பஞ்சவன் மாதேவி விரைந்து முன் வந்து நின்றாள். அவளை தாக்கியது சுருண்டாள்.அனைவரும் அவனை விரட்டிப்பிடித்து நொறுக்கி அடித்தனர்.பஞ்சவன் மாதேவி வலியில் துடித்தாள். உடனடியாக ஆதுரசாலை கொண்டு செல்லப்பட்டாள். நெடியை பார்த்தால் பாஷா கல் விஷத்தை கொண்டு தாக்கியது போல் தெரிகிறது. கண்டிப்பாக அவனிடம் அந்த கல் இருந்திருக்கும். இந்த விஷத்தை விஷத்தால் தான் முறிக்க முடியும் போய் அதைத் தேடுங்கள் என்று கூறினார் வைத்தியர்.


உயிருக்கு உத்திரவாதம் இல்லை, அவர் வயதானவர் போல் மாறலாம். எது வேணாலும் நடக்கலாம் ஆனால் இளம் வயதாக இருப்பதால் தாக்குப் பிடிப்பார் என்று கூறினார். ராஜேந்திரன் விரைந்து சென்றான் அது விஷம் என்பதால் கையில் படாமல் குச்சியில் குப்பை போலிருந்த அவன் உடலைத் தேடினார்கள். கடைசியில் கிடைத்தது கல். அதை அரைத்து அவளுக்கு கொடுத்தார்கள்.


அருண்மொழி விரைந்து வந்தான் அவன் சம்பந்தமாக 6 சேர அந்தணர்களையும் கைது செய்துள்ளோம் என்று கூறினான். இவ்வளவு எளிதாக ஊடுருவி உள்ளான் இனிமேல் என்ன பிரயோஜனம் ஒன்றுமில்லை என்றும் மன்னர் கோபப்பட்டார். அதற்கு உங்களுடைய தவறும் இருக்கு நாங்கள் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும் நீங்கள் மக்களிடையே மிகவும் சகஜமாகப் பழகுரீகள். ஓ!! நான் தான் காரணமா?? என்று கத்தினார். பஞ்சவன்மாதேவிக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் அமைதியாக அரண்மனைக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார் அனைவரையும், மூவேந்தர் வேளாளரை கோயில் பொறுப்பை ஏற்கும்படி கூறிவிட்டார்.


ஆதுர சாலையில் உணவருந்தி அமைதியாக அமர்ந்திருந்தார். மருத்துவர் வந்து அவருடைய நாடி துடிப்பு குறைகிறது என்று வருத்தப்பட்டார். மன்னர் அமைதியாக பஞ்சவன்மாதேவியின் அருகில் அமர்ந்து .நீ இல்லையேல் என்னுடைய மரணம் அமைதியாக இருக்காது என்னை விட்டு நீ எப்படி செல்வாய்?? எனக்கு பல மனைவிகள் இருந்தாலும் நான் உன்னை காதலித்து மணந்தேன். அந்த எமனிடம் போட்டி போடு என் கணவனுக்காக நான் போக வேண்டும் என்று சண்டை போடு. கண்ணீர் மல்க தேவாரப் பாடலைப் பாடினார். பார் !!இங்கிருந்தே கோபுரத்தை விமானத்தின் அழகை பார்!! இதை கண்டுகளிக்க நீ வேண்டாமா?? சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் ,உறங்கினார் . வைத்தியர் வியந்தார் என் சிவனே இவரல்லவா கடவுள், மாதேவி உடைய நாடித் துடிப்பும் சீரானது.இளமையாக இருக்க மாட்டார் முதியவர்போல் இருப்பார் . உயிரோடு இருந்தால் எனக்கு போதும் என்று கூறி விட்டார் மன்னர். இளம் வயதாக இருந்ததனால் தாங்கிக் கொண்டார் என்று கூறினார் வைத்தியர்.


அனைவரும் வைத்தியரை பாராட்ட இதற்கு காரணம் மன்னரே!! என்று அவர் கூறினார். என்னை ஆட்டி பார்க்கிறார்கள் என்னுடைய மகன் ஆட்சி மிக ஆவேசமாக இருக்கும் .அந்த சேரர்கள் எப்படி பாடுபடுகிறார்கள் என்று பாருங்கள் !!பாண்டியர்களாவது மொழியியல் சேர்ந்து இருக்கிறார்கள் இவர்கள் வேற்று மொழியில் இருப்பதால் இத்தனை வருடங்கள் அதை மனதில் வஞ்சம் எண்ணி அலைகிறார்கள். பஞ்சவன்மாதேவி அரண்மனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் சில தினங்கள், மன்னர் அருகிலிருந்து உபசரித்துக் கொள்கிறார். தோல் இல்லையே, பல்,முடியில்லையே என்று வருத்தப்படாதே அது எனக்கு முக்கியம் அல்ல!! நீ தான் முக்கியம் என்று மன்னர் பஞ்சவன்மாதேவியிடம் கூறிவிடுகிறார். வேளாளரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை அங்கு கோயில் வேலை நின்றுவிட்டது. உன்னை பார்த்துக்கொள்ள உன் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு கோயிலுக்கு கிளம்பிவிட்டார்.


மண் அப்புறப்படுத்தும் வேலையை நின்றுபோய் மக்கள் யாரும் இல்லை.பாண்டிய வீரன் மட்டும் மண்ணள்ளி கொண்டிருந்தான் ஏன் ஊருக்கு செல்ல வில்லையா என்று கேட்டார் மன்னர். நான் ஒரு கருவறை சிற்பி என்னுடைய வேலை இதுதான் .இங்கு கோயில் கட்டும் இடத்தில் வேலை செய்வேன் .அடுத்து ராஜேந்திரன் கட்டும் கோயிலில் ஈடுபடப் போகிறேன் சாகும்வரை எனக்கு இது மட்டும் தான் தெரியும் என்று கூறினான். மன்னர் அதைக் கண்டு வியந்து . நான் கோயில் கட்டியும் எனக்கு அமைதி இல்லை மனதில்,கருவறையில் சென்று புலம்பினார். மூவேந்தர் வேளாளர் மன்னரிடம் சென்று நீங்கள் இப்படி புலம்ப தேவையில்லை உங்களுடைய அடுத்த தலைமுறைகள் மிக சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறிய வார்த்தைகளில் உற்சாகப்பட்ட மன்னர் நன்றி சொல்லிவிட்டு ராஜாராஜீ இயற்றிய நாடகத்தை இங்கே நடத்த ஏற்பாடு செய்தார். மக்கள் ஊரங்கும் இருந்து அதை பார்க்க குவிந்தனர் மண் எடுக்கும் வேலையும் எளிதில் முடிந்தது.


கும்பாபிஷேகத்திற்கு நாள் பார்க்கப்பட்டது .அதற்காக ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. வேதம் தவிர்த்து, கணக்கு வேலை பார்த்து, இப்பொழுது உணவு தொழிலும் ஆரம்பித்து விட்டீர்களா?? என்று தஞ்சை அந்தணர்கள் கேவலப் படுத்தினர்.


மருவூர் அந்தணர்கள் மன்னரைப் பார்க்க வந்தனர் மீண்டும் கங்கை அதை தாண்டி செல்ல போகிறோம் என்று கூறினார்கள். மீண்டும் அவ்வளவு தொலைவு பயணப்பட போகிறீர்களா?? என்று மன்னர் ஆச்சரியத்துடன் கேட்டார். நீங்கள் அழைக்காமல் பயத்துடன் வந்தோம். அந்தப் பயணம் எங்களுக்கு துணிவையும் தெளிவையும் கொடுத்தது .இப்பொழுது 40 பேர் எங்களுடன் வர இருக்கிறார்கள் அதில் வணிகர்கள், வேளாளர்கள் பெண்களும் உள்ளனர் . மன்னர் பெண்களுமா??ஆண்களால் முடியும் என்றால் பெண்களால் முடியாதா?? நடந்துவர ஆர்வமாக உள்ளார்கள். முதல் பயணம் ராமேஸ்வரம் வரை அது வெற்றி அடைந்தால், இதுவும் வெற்றி அடையும் .கங்கை நீர் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்யப் போகிறோம் .அதுமட்டுமில்லாமல் கங்கை புகழ் போல், காவிரி புகழையையும் அங்கே போய் பரப்பப் போகிறோம்.


ராஜேந்திரரும் எங்களை அழைத்து மீண்டும் மேலை சாளுக்கியம் வரை செல்வீர்களா?? என்று கேட்டார். மறவர்களையும் எங்களுடன் அனுப்பி வைக்கப் போகிறார். அவருக்குப் பின்பு படை எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று கூறினார் .கங்கை தாண்டி காமாக்யாவை, சக்தி பீடம் பார்க்கப்போகிறோம் .இன்னும் ஐந்நூறு வருடங்கள் பிறகு சக்தியின் அதிகாரம்தான் வரப்போகிறது. மன்னர் அவர்களே ஆச்சரியத்தோடு பார்த்தார் ஏன் என்று கேட்டார் .இங்கே பெண்களை மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் கண்டிப்பாக சக்தியின் ஆட்சி வரும். அதனால் எங்களுக்கு வழிப் பயணத்திற்கு வண்டிகளும் சிலர் உதவிகளும் வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மன்னர் அவர்களைப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்.




நன்றி.

மீண்டும் உடையார் ஆறாம் பாகத்தில் சந்திப்போம்...


Click here for Udayar audio book part 6:2👇


Udayar audio book part 6:2




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...