Sunday, October 4, 2020

உடையார் நான்காம் பாகம் முடிவு சுருக்க விளக்கம் 4:2 by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம் ,

உமாபதி ஆசாரி அங்கிருந்த சிற்பிகளிடம் கோபப்பட்டு கொண்டிருந்தார். எதற்காக சென்றீர்கள் அக்ரஹாரத்திற்கு மரம் வேறு எங்கும் இல்லையா? குதிரையுடன் அங்கேயே சென்று இந்த விபத்தை ஏற்படுத்தி என்று கோபப்பட்டார். ஏன் வீண் விபரீதம் அவர்கள் கருநாகம் போல, அவர்களுடைய சாபம் உங்களுடைய அடுத்த தலைமுறையும் தொடரும். வாழ்க்கையில் சிறப்பாக இருக்க விருப்பம் இல்லையா? என்று கேட்டார் .


மன்னரின் கோபம் காலையில் இருந்து மாலையில் மறைந்து விடும் .ஆனால் அந்தணர்களுடைய கோபம் அப்படிப்பட்டதல்ல நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் தொடரும் .கிடைக்கும் மரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டு அமைதியாக வாழ வேண்டும். இது சிற்பிகள் காலம். ஏன் பட்டு சால்வையை கடையில் வாங்கிக்கொண்டு எனக்கு அரசர் பரிசளித்தார் என்று அலம்பல் பண்ணுகிறீர்கள் என்றும் கோவப்பட்டார்.கிடைத்த மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் .


சேர அந்தணர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தில் தான் இப்பொழுது அவர்களுடைய குலம் இவ்வளவு இழிவு படுகிறது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் தேவரடியார்களுடன் வீணாக பேசிக்கொண்டு ,அவர்களைக் கொண்டுபோய் கோயில் வரைபடத்தை காட்டுவது மிகப் பெரிய தவறு.


இளைஞர் பட்டாளம் இதை ஏற்கவில்லை .இவர்கள் செய்தால் சரி நாம் செய்தால் தவறு ,என்று வாதாடினார்கள்.

இச்செய்தி பெருந்தச்சர் இடம் சென்றது .அவர் எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமல் எப்பொழுதும் கோயில் நினைப்பாகவே தூக்கத்தை கூட மறந்து பல மனக்கணக்குகள் போட்டுக்கொண்டே இருந்தார். அருண்மொழி பட்டன் 3 அந்தணர்களை அவர்களுக்கு உதவியாக கொண்டு வந்தான். அவர்களுடைய துடிப்பையும் ஆர்வத்தையும் கண்டு பெருந்தச்சர் வியந்தார். இனி வேலை எனக்கு மிக எளிதாகி விட்டது என்று கூறினார்.


தொண்டை நாட்டுஅந்தணர்கள் பல வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். சிலர் அரண்மனைக்கும் ,மருத்துவத்திற்கும் நியமிக்கப்பட்டார்கள்.


மூவேந்தர் வேளாளர் அரண்மனைக்கு வருகை பிரம்மதேசம் வேளாண் நிலமாக மாறியது பற்றி பேசினார்கள் .அதற்கு பிறகுசிறிது நேரம் மன்னர் அமைதியாக இருந்துவிட்டு அந்த நிலம் அங்கிருக்கும் வேளாளர்களுக்கு சொந்தம்.


அந்தணர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வெளிநடப்பு செய்யலாம் என்றும் கூறிவிட்டார். சோழ தேசத்திற்கு எதிராக யாரும் இருக்கக் கூடாது. அதை நானும் ஏற்க மாட்டேன் என்னுடைய மகனும் ஏற்க மாட்டான். அதுமட்டுமில்லாது அக்ரஹாரத்தில் நடந்த கொலைப்பற்றி பேசினார் வேளாளர். எதையும் ஆராயாமல் முடிவு சொல்லாதீர்கள் என்றார் அரசர் கோபப்பட்டார். குதிரையின் சேணயை பிடித்து இழுத்த அந்த முட்டாள் அந்தணன் இறந்தான் ,அது ஒரு விபத்து.


அங்கே கருவூர் தேவர் பற்றிய பேச்சு வந்தது .அதற்கு ராஜேந்திரன் கருவூர்தேவரை கண்காணிக்க கூடாதா என்று கேட்டார். மன்னர் அதற்கு எடுத்துக்காட்டாக பல்லவர் வெற்றிகளுக்கு ஒரே காரணம் அங்கு மத ஒற்றுமை மற்றும் மொழி ஒற்றுமை அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் குருக்களை மதித்தனர் .பிரம்மராயர் கருவூர்தேவரை தொடர்ந்து அவமானப்பட்டார் .வேண்டும் என்றாலும் நீயும் தொடர்ந்து பார் ?அவர் ஒரு சித்தர்.


ஈசான சிவ பண்டிதரிடம் அந்தணர்கள் சென்றனர் ,அவர் ஏன் புத்தி இல்லாமல் நடந்து கொண்டீர்கள் .நீங்கள் கூறியது தவறு கோயில் பணிக்கு என்று அழைக்கும் பொழுது உங்களால் முடிந்தவற்றை நீங்கள் செய்திருக்க வேண்டும். அதை விட்டு வீண் விவாதம் செய்தீர் .இப்பொழுது நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள் . வேதம் மட்டும் ஓதுங்கள் இடைவிடாத அதை மட்டுமே ஓதி கொண்டிருந்தால் நல்லது உங்களை தேடி வரும் என்று அறிவுரை கூறினார் .


பலரும் அதை ஏற்க மறுத்தனர் .அங்கே இரு பிரிவினையை உருவானது .பல அந்தணர்கள் மன்னருக்கு சாபம் விட்டு ஊரை விட்டு கிளம்பினார்கள். மீதி இருப்பவரோ வேதத்தில் துணை நிற்போம் என்று உறுதி கொண்டனர் .ஒரு இளைஞன் கேட்டான் தந்தையை எது சரி, தவறு என்று .ஊரை விட்டு கிளம்புவதும் தவறு, அந்த தொண்டைநாட்டவர் போல பிழைக்க வழி இல்லாமல் கூலி வேலைக்கு செல்வதும் தவறு .அவர்களுடைய அடுத்த இரண்டு தலைமுறைகள் வேதத்தை மறந்து விடும். வெறும் பூணூல் அணிந்த அந்தணர் களாகவே இருப்பார்கள் .வேதத்தின் வழி நிற்பதே தர்மம்.


கம்மாளர்கள் மறவர் போல் வாழ ஆசைப்பட்டனர் அவர்கள் நம்மை எதிர்க்க வில்லை. இன்னும் சில காலத்தில் மறவர்களுக்கும் சிற்பிகளுக்கும் சண்டை வரும். இங்கே சரியான யோசனை சொல்ல ஆள் இல்லாமல் தட்டுத் தடுமாறும் மீண்டும் நம் காலம் வரும்.


பஞ்சவன்மாதேவி மீண்டும் அமைதியை நாடி சென்றாள். மீண்டும் பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது .ஏன் நான் மட்டும் இப்படி யோசிக்கிறேன் என்று யோசித்தாள்.


வெள்ளையம்பலம் என்னும் காவல் படை தலைவன் பொறுப்பிலிருந்தது பாறை பணிகள். அவன் ஒரு சிறந்த போர்வீரன் பல போர்களில் வீர செயல்கள் புரிந்து இருக்கிறான். மன்னரிடமும் பாராட்டுகளை பெற்றிருக்கிறான் .தன்னுடைய அத்தை மகளை திருமணம் புரிந்து இனிதாக வாழ்ந்து வந்தான். அவன் போருக்கு சென்றேன் ,அவன் இறந்ததாக தவறான செய்தி வந்ததால் அவனுடைய மனைவி தீக்குளித்து இறந்துவிட்டாரள். அதில் மனது உடைந்து போன அவன் போருக்கு செல்லவில்லை.


சீராளனை தன்னுடைய மகளுக்கு மணம் முடிப்பதாக பெருந்தச்சர் கூறிக்கொண்டிருந்தார். விஸ்வநாத ஆசாரி ஏன் நம் தொழிலே பலர் இருக்கும்பொழுது ஒரு ஓவியனை தேர்ந்தெடுக்கிறீர் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவன் மிகவும் திறமை மிக்கவன் என்னுடைய அடுத்த வாரிசாக நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்த செய்தியை கேட்ட அவருடைய மகளும் மகிழ்ச்சியில் மிதந்தாள்.


சீராளன் உமையாளிடம் விளக்கி கொண்டிருந்தான், நீ திரிபுரம் எரித்த சிவனைப் பார்த்து இருக்கிறாயா என்று .அந்தக் காட்சியில் சிவன் நெற்றிக்கண் திறந்து கோபமும் ஏளனமான சிரிப்பையும் காட்டியிருப்பார். அந்த ஓவியத்தை வரைய போகிறேன் .அதற்கு ஏற்றார்போல் அபிநயம் காட்டு என்று கூறினான் .அவனிடம் கோபத்தை காட்ட முடியவில்லை அவளால், கடைசியில் அவளை அந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தினான் .




அப்படியே கதறினான் என் ஈசா, இறைவனே!! வந்து உன் ரூபத்தில் இருப்பது போல் இருக்கிறது என்று புகழ்ந்தான் . உமையாள் தன்னுடைய ஆசையை அவனிடம் வெளிப்படுத்த, நீ எல்லோர் முன் நடனமாட வில்லை என்றால் என்னுடைய தாயார் உன்னை மருமகனாக ஏற்றுக்கொள்வார் என்று கூறினான் .அவளும் எனக்கு ஆடல்கலையில் நாட்டமே தவிர எனக்கு பலர் முன் ஆட விருப்பமில்லை .


அவனுடைய மோதிரத்தை அவளுக்கு அணிவித்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறான்.

விஸ்வநாத ஆசாரி வருகிறார் உமையாள் கையில் இருக்கும் மோதிரத்தை பார்த்து புரிந்து கொள்கிறார். சீராளன் நான் இவளை மணக்க விரும்புகிறேன் என்று கூறி இருவரும் ஆசீர்வாதம் பெறுகின்றனர். இறைவனுடைய செயல் என்று மனதில் எண்ணிக் கொள்கிறார் விஸ்வநாத ஆசாரி.


அன்றிரவு பெருந்தச்சர் இடம் சென்று விஷயத்தை கூறுகிறார் .ஜோசியரை பார்த்து வேறு நல்ல பையனை பார்ப்போம் என்று அறிவுரை கூறுகிறார்.பெருந்தச்சர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கோவில் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். விஸ்வநாத ஆசாரிக்கு ஆச்சரியம் இந்த மனிதன் குடும்பத்தை மறந்து கோவிலிலே முழுவதும் மூழ்கி உள்ளார்.


இந்த விஷயம் கேட்டதும் பெருந்தச்சர் மகள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள் .அங்கே வந்த ஏழை காவலன் அவளை காப்பாற்றுகிறான். கண்விழித்த அவளோ எனக்கு சீராளன் இல்லை என்றால் என்ன வேறு ஒருத்தன் கிடைக்க மாட்டானா என்று புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்த காவலனை பார்த்து உனக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டாள் . வசதியை எதிர்பார்க்கிறார்கள் என்னிடத்தில் பணம் இல்லை வீரம் தான் இருக்கிறது என்று கூறினான்.


உடனடியாக முடிவெடுத்துவிட்டாள் இவனை தான் மணக்க வேண்டும் .வீட்டிலிருந்து செலவுக்குத் தேவையான அளவு பொருள்களை கொண்டு வருகிறேன். நாளை நாம் இங்கிருந்து எங்காவது சென்று திருமணம் செய்து நல்லபடியாக வாழ்வோம் என்று அவனிடம் கூறுகிறாள் .அவனோ என்ன செய்வது என்று தெரியவில்லை .யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை ,உயர்குடியில் சேர்ந்தவள் சிறிது பயம் இருந்தாலும் அவளுடைய ஆசைக்கு இணங்கினான்.


இதைக்கேட்ட பெருந்தச்சர் ஆடிப்போனார் நிலைகுலைந்தார். அவருடைய நாடி துடிப்பும் குறைந்ததாக மன்னருக்கு செய்தி வந்தது .மன்னரும் கலங்கினார் ஏன் இறைவா !!இது என்ன சோதனை என்று வருந்தினார். அவர் இருப்பிடத்திற்குச் சென்றார் அங்கிருந்த வைத்தியரோ மனம் பேதலித்துப் போய் விட்டது ,மகளால் அல்ல .மனைவியாள் மனைவியுடைய பேச்சால் !!அங்கிருக்கும் அனைவரையும் அவர் விலக்கிவிட்டு பெருந்தச்சர் இடம் அமைதியாக அமர்ந்தார்.


உங்களுடைய உடல் திடமாக தான் இருக்கிறது மனம் தான் வேதனைப்படுகிறது .அப்பொழுது தன்னுடைய மகள் கதையை, நானும் உலகத்தையே வெறுத்தேன் .அச்சமயத்தில், பிறகுதான் யோசித்துப் பார்த்தேன் நம்முடைய அடக்குமுறையில் சுதந்திரம் என்ற பெயரில் நம்முடைய வழிகாட்டுதலில் அவர்கள் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். என்னை யோசித்துப் பார்த்தேன் நான் ஒரு மிகப்பெரிய அயோக்கியன் நான் யாருக்கு அடங்கினேனா?இல்லை. பிள்ளைகளை அடக்குவதற்கு . . .. அவர்கள் தங்களுடைய நன்மையை கருதி முடிவெடுக்கிறார்கள் .அதில் சென்று நன்மை தீமையை புரிந்து கொள்வார்கள் கவலை தேவையில்லை. நீங்கள் இல்லை என்றால் இங்கே கோயில் பணி நடைபெறாது! கோயில் பணி நடைபெறவில்லை என்றால்! நான் வருந்துவேன்! நான் வருத்தப்பட்டால் சோழ தேசமே வருத்தப்படும்.



உலோக சிற்பிகள் தங்களுடைய பணி என்ன கோயிலுக்கு என்று பேசிக் கொண்டிருந்தார்கள் .நிச்சயம் அதற்கு வேலை உண்டு அமைதியாக இருப்போம் .அங்கே தலைமை வகிப்பவர் மகன் கணபதிக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. மனைவியும் அவனும் யாருக்கும் தெரியாமல் மருவூர் மருத்துவரை காண சென்றார்கள். வழி எங்கும் உள்ள பல சிவன் கோயில்களில் பராமரிப்பு வேலைகளை செய்தனர்.


கடைசியாக மருத்துவரை கண்டனர் .அவரோ பல அறிவுரைகளைக் கூறி, உடல்சூடு வேறு ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார். அங்கே மருத்துவரிடம் ஊர் நிலவரம் பலவற்றை பற்றி விவாதித்தார்கள். மருவூரிலிருக்கும் அந்தணர்கள் அமைதியானவர்கள் அவர்கள் ஒற்றர்களில் முக்கியமானவர்களாக வேலை செய்கிறார்கள். வேதம் மட்டுமே தொழில் என ஏன் வைக்கப்பட்டது என்றால், பல தொழில்களை புரிந்தால் ,பல ஆசைகள் வரும் அதனால் மனம் கெட்டுவிடும் .குயவர்களும் வேளாளர்களும் தான் உண்மையை அறிந்து தங்களுக்கு ஏதும் வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறார்கள்.


அவனும் மனைவியும் தஞ்சைக்கு சென்று கோயில் கட்டும் இடத்தைப் பார்த்தார்கள் .கணபதியோ கை நீட்டிய கிருஷ்ணர் உலோக பொம்மை செய்தான் .இது என்ன புதிதாக இருக்கு வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணரை தான் பார்த்திருக்கிறோம் .கிருஷ்ணர் வெண்ணெயை நீட்டி அதற்கு இரண்டு பொருள் இருக்கிறது.ஒன்றுக்கொடுத்தல் மற்றொன்று வாங்குதல் அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர் .


பஞ்சவன்மாதேவி ,பிரம்மராயர் உடன் வந்திருந்தார். உலோக சிலைகள் பல செய்வதற்கு உத்தரவிட்டனர். அங்கே கணபதி அந்த உலோக கிருஷ்ணர் பொம்மையை பஞ்சவன்மாதேவிக்கு பரிசளித்து இருவரும் ஆசிர்வாதம் பெற்றனர் .பஞ்சவன் மாதேவியும் கண் கலங்கியவாறு அதை பெற்றுக்கொண்டு அரண்மனையில் வந்து பூஜை அறையில் வைத்து பூஜித்தாள்.அங்கிருக்கும் அதிகாரச்சி அவளை கேள்வியுடன் பார்க்க ..என்னுடைய மகன் ராஜேந்திரன் அவனுடைய அடுத்த தலைமுறை செழிப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார். எதேர்ச்சியாக வந்த ராஜேந்திரன் அதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து ,இவர் சோழ தேசத்தின் தாய் என்று அவனுக்குள் புகழ்ந்து தடுமாறி சென்றான்.


நன்றி. நான்காம் பாகம் முடிவு பெற்றது .


மீண்டும் ஐந்தாம் பாகத்தில் சந்திப்போம்..


Click here for Udayar audio book part 4:2👇

Udayar audio book part 4:2


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...