அனைவருக்கும் வணக்கம்,
Dr.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று.அவருடைய பொன்மொழிகளுடன்.. 🙏🙏எஸ் .ராமகிருஷ்ணன் ,அவர்களின் "இன்றில்லை எனினும் "புத்தகத்தின் மேலும் சில பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு அரசு பள்ளியை எடுத்துக்காட்டாக கூறியிருப்பார். மேட்டுப்பாளையத்தில் உள்ள இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி .இந்தப் பள்ளியை அங்கிருப்பவர்கள் உடைய சுயமுயற்சியால் பல அரசுப் பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்று வருகிறது. பல புதுமையுடன் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படுகிறது.
இன்னொரு இடத்தில்" கேட்பார் இல்லாத கல்வி" தலைப்பில்...அரசு பள்ளிகளை நான்கு விதமாக கூறியிருக்கிறார் பெரு நகரங்கள் ,சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் மற்றும் மலைவாழ் நகரங்களில் உள்ள அரசு பள்ளிகள் என. கல்விமுறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். பல தனியார் பள்ளிகளை விட சில அரசுப் பள்ளிகளும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் கூறியிருக்கிறார் .மாணவர்களை விட மாணவிகள் அதிக அக்கறையுடன் படிகிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார். அவர்களுக்கு படிப்பு இல்லை என்றால் வாழ்க்கையே அர்த்தமற்றுப் போய்விடும் என எண்ணுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அந்த எண்ணம் இல்லை.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளிக்கூடங்கள் சிறப்பாக இருப்பதாக மேற்கோள் காட்டிருப்பார்.
கல்விக்கூடங்கள் மாணவர்களுக்கு தண்டனைக் கூடகமே தெரிகிறது. படி படி என்று அவர்களுடைய மன அழுத்தமும் அதிகரித்து தான் போகிறது .தென்கொரியாவில் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்று விளக்கிக் கூறியுள்ளார்.
கல்வியில் ஏதாவது மாற்றம் உருவாக வேண்டுமென்றால் அது தனித்துச் சாத்தியமாகாது .சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாகவே அது சாத்தியப்படும் .ஆனால் கல்வியில் ஏற்படும் மாற்றங்களை சமூக மாற்றத்திற்கான முக்கியமான தூண்டுதல் ஆகும். ஆகவே கல்வியின் தரத்தை உயர்த்துவதும் பள்ளிக் கல்வி குறித்து சிந்திப்பதும் ஆசிரியர்களின் வேலை மட்டுமல்ல .நாம் அத்தனைபேரின் பொறுப்புணர்வு என்றே சொல்லுவேன்.
இன்னொரு தலைப்பில் "இதுதானா கல்வி". ஒரு தனியார் பள்ளியில் அங்கிருக்கும் மாணவர்களிடம் நமது மாநில பூ, விலங்கு மற்றும் பறவையின் பெயரை கேட்கிறார். சில குழந்தைகள் மற்றும் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே கூறினார்கள். செங்காந்தள் மலர்,வரையாடு , மரகதப்புறா ,யாரேனும் இவற்றை பார்த்திருக்கிறீர்களா ??என்று கேட்டதற்கு இல்லை என்ற பதிலே!!(எனக்கும் தெரியாது)
ஒரு மாநிலத்தில் வாழும் நாம் அதன் அடையாளங்களை ,வரலாற்றை, இயற்கை வளத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறில்லையா ??இதுதான் கல்வியின் தரம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா?? உங்களுக்கு சூழலியல் பாடமாக கற்றுத் தரப்படுகிறதா?? என கேட்டேன். ஆரம்பப் பள்ளி முதல் சூழலியல் கற்றுத்தரப்படுகிறது.
பிளஸ்-2 சின்ட்ரோம் என்ற நோய் ஆட்டிப்படைத்து வருகிறது எந்த ஊரில் எந்த பள்ளியில் படித்தாலும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் முகம் ஒன்று போல் இறுகிப் போயிருக்கிறது .பிராய்லர் கோழிகளை வளர்ப்பது போல் மாணவர்கள் இரவு பகலாக படிக்க வற்புறுத்தப்படுகிறார்கள் .அவர்கள் இயல்பாக சாப்பிடுவதில்லை ,உறங்குவதில்லை ,வீட்டாருடன் பேசுவதில்லை, சிரிப்பதில்லை ,தீவிரமான மன சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் .இதன் விளைவு மன சிதைவும், மீளமுடியாத போதைப் பழக்கமும், தற்கொலைகளும் என்பதை பல்வேறு நாளிதழ் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
பள்ளியில் மாணவர்கள் புரிந்து கொள்ள தவறும் போதுதான் வீட்டிலும் வெளியிலும் சிறப்பு கவனம் கொடுக்க நேரிடுகிறது .கற்றுத் தருதலில் உள்ள கோளாறு தான் வீட்டுப்பாடம் எழுதுதல் என்ற கொடுமை உருவாக்குகிறது. ஜான் ஹோல்ட் அவரது "எப்படி குழந்தைகள் தோற்றுப் போகிறார்கள்" என்ற புத்தகம் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என்னதான் பள்ளிக்கு சென்றாலும் பெற்றோருடைய பங்கு மிகப் பெரிய பங்கு குழந்தைகளின் கல்வியில்..
கண்டிப்பாக இவை சிந்திக்க கூடியவை கல்வி என்பது கட்டாயப்படுத்தி குழந்தைகளிடம் திணிக்கப்படுகிறது .வாழ்க்கைக்கு படிப்பு முக்கியம் அவை இருந்தால் ஒழுக்கம் கண்டிப்பாக வரும்,அது தவிர பல வழிமுறைகளும் இருக்கின்றன. கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றங்கள் வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் மனநிலை ஆலோசனை மருத்துவர்களும் , குழந்தைகளின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் விளக்குவதற்கும் சரியான ஆசிரியர்கள் தேவை. சில பள்ளிகளில் அதிக குறும்புத்தனம் செய்யும் பிள்ளைகளை (ஹைபர் ஆக்டிவிட்டி ஹிட்ஸ்) அனுமதிப்பதில்லை. அது பெற்றோர்களிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் ஆடிப்பாடி விளையாட இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் எப்பொழுதும் தொலைக்காட்சியிலே மூழ்கிப் போய் ரோபோக்கள் போல தான் இருக்கிறார்கள்.
ஆனால் குழந்தைகளின் உணர்வுகளுக்கும் பெற்றோர்கள் தற்போது மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். பல குழந்தைகள் இப்பொழுது ஆர்வமாக புத்தகம் படிக்கிறார்கள். பல படித்த பெற்றோர்களும் தற்போது பள்ளிக்கூடங்களை தவிர்த்து குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியதத்துவம் கொடுத்து வீட்டிலேயே கல்வி கற்கும் முறையும் பெருகி வருகிறது. பல இயற்கை சூழ்நிலையில் ,செயல்முறை கல்விக் கூடங்களும் பெருகி வருகின்றன. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி.
புவிதம், தர்மபுரி
செம்மை வனம்,அச்சம் பட்டி ,தஞ்சாவூர்





No comments:
Post a Comment