Monday, October 5, 2020

உடையார் ஐந்தாம் பாகம் சுருக்க விளக்க by Vidhya Nivash


அனைவருக்கும் வணக்கம் ,

தெருக்களிலே பெண்கள் கூடி நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள் .இளைஞர்களும் அவர்களை பார்த்து கேலி பண்ணி சிரித்து கொண்டிருந்தார்கள். யுத்தம் வரப்போகிறது நீங்கள் என்ன பொறுப்பில்லாமல் சிரிப்பாக சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள். பெண்கள் சிரிக்கலாம் ஆனால் ஆண்கள் சிரிப்பது தவறு என்று வயதானவர் கூறிக்கொண்டிருந்தார் .இதில் என்ன இருக்கிறது இந்த சோழ ஆட்சி மகிழ்ச்சிகரமாக இருக்கிறதே என்று கூறி கொண்டிருந்தார்கள். அதை நாங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். ஆம் இங்கே ஆடல், பாடல் ,கூத்து என்று எங்கும் பெருகி போய் கிடைக்கிறது. வீரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் .


யுத்தத்திற்கு சென்று நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால் இப்பொழுது யுத்தம் வருவதற்கு பல அறிகுறிகள் தென்படுகின்றன. பாண்டிய தேசமும் ,கங்கபாடியும் நமது ஆட்சியின் கீழ் தான் இருக்கின்றன .அவற்றுடன் நமக்கு நட்புறவு தான், கீழை சாளுக்கியம் உறவுமுறை தான் நமக்கு. போர் எங்கிருந்து ??மேலை சாளுக்கியத்தில் இருந்துதான் வரப்போகிறது.


அவர்களை எதிர்ப்பது மிக கடினம் நம்முடைய பயணமே பதினைந்து நாட்கள் இருக்கும். அதற்காக பல ஊர்களில் தேர்களும் குதிரை பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் .அதில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியில் மன்னர் படைதிரட்டி வெல்லுவார் என்று அவர் கூறினார்.


இங்கே பாண்டியரை வந்திய தேவர் பார்த்துக்கொள்வார் .தொண்டைநாடு ,நடுநாடு அங்கிருந்து வருபவர்கள் நமக்கு நட்பு அவர்களும் இப்போரில் ஈடுபடுத்தப்பட போகிறார்கள் .காரி, ஓரி ,பாரி அவர்களால் ஆளப்பட்டது நடுநாடு. அவர்கள் பார்ப்பதற்கு மிக குள்ளமாக இருப்பார்கள்.ஆனால் மலை, மரம் ஏற வேலி தாண்ட மிகவும் வேகமானவர்கள்.

கீழை சாளுக்கியத்திலிருந்து விமலாதித்தன் கடல்வழியாக படைதிரட்டி பூம்புகார் வந்து தஞ்சையிலிருந்து படையெடுப்பு ஆரம்பமாகும்.


இதை எப்படி இப்படி தெள்ளத்தெளிவாக சொல்லுகிறீர்கள் என்று இருந்தவர்கள் கேட்டார்கள் .சில தினங்களுக்கு முன்பு தான் இங்கே இருக்கும் கிடங்குகள் சுத்தம் செய்யப்பட்டன .பல படைகள் வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன .அப்பணியில் நானும் ஈடுப்பட்டேன் அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டதில் நான் கேட்டவை.


விமலாதித்தன் உடைய சிறு படை காஞ்சிபுரம் , மேல்பாடி ,மீன்சுருட்டி ,கீழக்கரை ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு. படையெடுப்பு மேலை சாளுக்கியம் நோக்கி செல்லும். அதனால் அனைவரும் சுறுசுறுப்பாக இருங்கள் போர் வருவது நிச்சயம் என்று கூறிவிட்டு .ஆனால் இங்கே தேவையில்லாத போட்டிகள் மக்களிடையே, ஆடல், பாடல் கூத்து என மூழ்கிப் போய் இருக்கின்றனர்.அந்த முதியவர் அங்கிருந்து கிளம்பினார் .அங்காடித் தெருவில் கூடும் கூட்டம் அன்று மிகவும் காரசாரமாக இருந்தது.


இளைஞர்களிடம் வீரம் ததும்ப பேசியவர் ஒரு அந்தண ஒற்றன் பிரம்மராயர் உடைய ஆள். பிறகு அவன் இளவரசனையும் சென்று சந்தித்து காரியம் முடிந்தது என்று கூறினான் . அவனைப் பின் தொடர்ந்தான் இளவரசனின் ஒற்றன் ஒருவன்.


அரண்மனையில் அரசர் நான் ராஜேந்திரனை வெண்ணாற்றங்கரை அரண்மனையில் போய் சந்திக்க விரும்புகிறேன்.வந்திய தேவன் நீங்கள் தனியாகவா ??செல்லப் போகிறீர்கள்.அவன் என்னுடைய மகன் அவனிடம் நான் மனம் விட்டுப் பேச வேண்டும் .அப்பனும் மகனும் நன்றாக என்னை ஓரம் கட்டுகிறீர்கள் .எனக்கு வயதாகிவிட்டது என்று என்னுடைய படைக்கும், படை சேனாதிபதிக்கு ,உபசேனாதிபதிக்கு வயதாகிவிட்டது தான். எப்பொழுது அவனிடம் பொறுப்பை கொடுக்கப் போகிறீர்கள் என்று ஆரம்பித்தார் வந்தியதேவன் .இன்னும் ஆறு வருடங்களில் கோயில் பணி முடியும் அதற்குப் பிறகுதான் நான் பதவியிருந்து விலகி கொள்வேன்.அதுவரை அவனுடை படைகள் தாக்கு பிடிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை .


வந்தியதேவன் உடனடியாக அவனுக்கு அதிகாரம் கொடுத்து அதாவது வடக்கு திசையை அவன் ஆட்சிக்கு கீழ் விடுங்கள். சோழ தேசத்தில் பிரிவினையா ??கேவலமான அறிவுரை. நீங்கள் முடிவெடுக்க வேண்டும் அதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள் இருக்கின்றது .ஒன்று கங்கபாடி, நுளம்பாடி பாதுகாப்பு இல்லை, சரியான பழக்கமும் இல்லை அவர்களை மேலை சாளுக்கியம் எளிதில் மடக்கும். இரண்டாவது காரணம் அவர்கள் முன்னேறுவதற்கு முன் நாம் அவர்களை தாக்க வேண்டும். மூன்றாவது கோவில் பணி முடிக்க நிறைய ஆடு மாடுகள் ஆட்கள் தேவை அது ஒரு போரின் மூலம் வெற்றிகரமாக நிறைவடையும் என்று கூறினார் .


இளவரசன் தலைமையில் நீங்கள் பின்னாடி நின்று வழிநடத்த மேலை சாளுக்கியத்தை நாம் போரிட வேண்டும் .இளைய படை முன்னே செல்ல நான் பின்னாடி நிற்க வேண்டும் என்ன யோசனை என்று சலித்துக் கொண்டார். நான் தான் தலைமைப் பொறுப்பை ஏற்பேன் .மாதண்ட நாயகனாக இளவரசன் பதவியேற்று படையெடுப்பு நடைபெறும் .


என்னுடைய படையில் இருக்கும் பழுவேட்டரையர்கள் அவனுக்கு அடங்க மாட்டார்கள் . அவன் தலைமையில் நீங்கள் மேற்பார்வை இட்டால் போதும் என்று கூறினார் வந்தியதேவன் .கோயில் வேலையில் நீங்கள் இருப்பதால் போர் பற்றி எங்கே யோசித்திற்க போகிறார்கள் என்று நினைத்தேன் .நான் இதை பல நாட்கள் யோசித்தேன் நீங்கள் நொடிப்பொழுதில் இதைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். சிவன் மீதும் இல்லை ,மகன் மீதும் இல்லை , எனக்கு காதல் இந்த சோழ தேசத்தின் நாகரிகத்தின் மேலேதான் காதல் .திருத்தொண்டர் புராணம் அதிலிருக்கும் நாயன்மார் கதைகளை கேட்டு தான் என்னுடைய மனம் மிகமிகப் பெரிதாக விரிந்தது .


என்னுடைய தமக்கைக்கு நீங்கள் துணையாக அமைந்தது மிகப்பெரிய கொடுப்பினை .இந்தக் கோயில் பணி, போர் பணி இதெல்லாம் முடிந்த உடன் உங்களுடைய துணை எனக்கு மிகவும் தேவை .ராஜேந்திரனிடம் பல குறைகள் இருக்கிறது .அதை தனிமையில் சென்று அவனிடம் பேச நான் செல்கிறேன் என்று கிளம்பி விட்டார்.


மாதண்ட நாயகனாக இருந்தாலும் நான் இறக்கும் வரை தஞ்சையை விட்டு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப் போகிறேன். அவன் இதை கண்டிப்பாக ஏற்க மாட்டான் என்று வந்தியதேவன் மனதிற்குள் நினைத்தார்.


போகும் வழியில் இருக்கும் கிராம மக்கள் மன்னரை சந்திக்க விரும்பினார்கள். ஆனால் மன்னருக்கு அதில் விருப்பமில்லை .ஆனாலும் சென்றார் அங்கிருந்த மக்கள் இங்கே இருக்கும் புற்றுமண் வேண்டும். அதனால் எங்களை ஊரை விட்டு கிளம்ப சொல்லிவிட்டார்கள் .நாங்கள் சென்று விடுவோம் ஆனால் இதில் இருக்கும் எங்களுடைய தெய்வமான நாகத்தை எப்படி வெளியேற்றுவார்கள். மன்னர் பாம்புப் புற்றின் அருகில் சென்று அமைதியாக மனதில் வேண்டிக்கொண்டார். நாக தேவதையே இந்த இம்மண் கோயில் கட்டுவதற்கு தேவைப்படுகிறது. நீ இங்கிருந்து அமைதியாக சென்று எனக்கு வழி விடுவாய் என்று வேண்டிக்கொண்டார் .அதில் இருந்து ஒரு நாகம் வெளியே வந்தது .அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னுடைய சால்வையை அந்தப் புற்றுக்கு சாத்தினார் .


நீங்களும் இந்த கிராமத்தில் இருந்து கிளம்பி விடுவீர்கள் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டு. அதற்கு தேவையான பண உதவியும் கொடுத்து விட்டு சென்றார்.


இளவரசன் உடைய மெய்க்காவலர்கள் மன்னரை வரவேற்றனர் போருக்கான ஆயத்தங்கள் எப்படி இருக்கிறது என்ற மகனிடம் கேட்டார் .அங்கே அருண்மொழி கூடவே இருந்தான். நான் உன்னிடம் தனிமையில் பேச விரும்புகிறேன் என்று கூறினார். இளவரசன் பேசுங்கள் என்னுடைய உபசேனாதிபதி அருண்மொழி இல்லாமல் நான் எதுவுமே நடத்துவதில்லை. இங்கே போர் பற்றி மட்டும் பேசப்போவதில்லை குடும்ப விஷயம் பேசப்போகிறேன். இரண்டாவதாக அவன் ஒரு உபசேனாதிபதி, சேனாதிபதி அல்ல என்றும் கூறினார்.


போர் ஏன் என்று மகனை கேட்டார் கங்கபாடியை சேரநாடு மற்றும் மேலைச் சாளுக்கியத்தில் இருப்பவர்கள் மறைந்திருந்து தாக்குகிறார்கள் .நாம் அந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு முன் நாம் அவர்களை தாக்குதல் வேண்டும் விமலாத்தர்

தேவையா?? அவரை ஏன் அழைத்தீர்கள் என்று தந்தையிடம் கேட்டான். நான் ஒன்னும் அவனை அழைக்க வில்லை அவன் ஆகவும் வரவில்லை .இங்க இருந்து செல்வதற்கு 15 நாள் ஆகும் .ஆனால் அங்கே ஒரு நாள் போர் தான் .மன்னர் வீரர்கள் சோர்வு அடைந்து விட மாட்டாரா என கேட்டார் .


ஒரு யோசனை வைத்திருக்கிறேன் இங்கிருந்து நடைபயணம் அவர்களை கங்கபாடிக்கு அழைத்து சென்று அங்கே நிறுத்தி அங்கிருக்கும் வீரர்களுடன் யானைப்படை ,குதிரைப்படை மூலம் நாம் மேலைச் சாளுக்கியத்தை எதிர்க்க வேண்டும் .ஆனால் கங்கபாடி வீரர்கள் விமலாதித்தனின் இருந்தால் நம்மை மதிக்க மாட்டார்கள்.


அருண்மொழியை கேட்டார் போருக்கான காரணங்களை ,ஆரம்பத்தில் சிலர் பலியாகத்தான் வேண்டும் பல பருவநிலை மாறுதல் வரும் அதனால் கண்டிப்பாக பாதிப்பு உண்டு.ஆனாலும் வெற்றியே !!மேலை சாளுக்கியத்திற்கு வடக்கு எதிர்ப்பு இருக்கிறது அங்கே மிகவும் செழிப்பான இடத்தை அவர்கள் பறிக்க ஆசைப்படுகிறார்கள் .அரபி குதிரைகளையும் ஆட்களையும் வைத்து பயிற்சி செய்கிறார்கள் .துங்கபத்ரா நதி வரை போய்விட முடியுமா?? என்று கேட்கிறார் மன்னர்.


அவர்களுடைய படை மிகவும் பலவீனமானது .அங்கிருக்கும் வேளாளர்கள் கூட பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் .அதுமட்டுமில்லாது சேரதேசத்தை சேர்ந்த வயதானவர்களும் அதில் இருக்கிறார்கள் .அவர்களைக் கொல்லுதல் அவமானம் அதற்காக மூலிகை தண்ணீரை பயன்படுத்தி அவர்களை மயக்கி வைத்தால் மூன்று நாட்களில் அவர்கள் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவார்கள்.


அருண்மொழியும் கேட்டான் ஏன் விமலாதித்த வருகிறார். நீதான் கூறினாயே முதலில் களப்பலி விழும் என்று. இளவரசரும் ,அருண்மொழியும் திடுக்கிட்டனர் .கீழை சாளுக்கிய படைதான்முதலில் இறங்கப் போகிறது . விமலாத்தரை நான் கூப்பிடவில்லை அவனே விடாப்படியாக வருகிறான். எனக்கும் விருப்பமில்லை என்னுடைய மகள் குந்தவையை எதிர்த்து உன் தந்தையை நான் எதிர்ப்பேன் என்று வருகிறான். ஏன் தந்தை நீங்கள் அவனை அடக்க முடியாதா என்று ராஜேந்திரன் கோபப்பட்டான். அவன் மருமகன் !!


அவன் முதலில் செல்ல விரும்பவில்லை என்றால் மீண்டும் கீழை சாளுக்கியம் அனுப்புவேன் .அங்கேயிருந்து குந்தவையும் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று வரவைத்து. அவன் கதையை அறுத்து விட வேண்டியது தான் ஒரு செருப்பு சரியில்லை என்றால் தூக்கி எறிவது போல தான் என்று மிகக் கோபமாக பேசினார்.


அதுமட்டுமில்லாமல் மேலை சாளுக்கியத்திலிருந்து அவனுக்கு பெண் பேசியிருக்கிறார்கள் .சேர தேசத்தார் உடைய சூழ்ச்சி. ஈராயிரத்து பல்லவர்கள் அவனை எச்சரித்து உள்ளனர் ,அமைதியாக இருக்கிறான். பிரம்மராயர் இருக்கு தெரியுமா அவருடைய ஒற்றர் படை மூலம் தான் இந்த செய்தி எனக்கே தெரிந்தது.


உன்னுடைய படைக்கு நீ தலைமைப் பொறுப்பு, என்னுடைய படைக்க அருண்மொழி பொறுப்பு எங்களை ஏன் பிரித்தீர்கள் என்று கேட்டார் இளவரசன். ஒரே இடத்தில் இரண்டு திறமை வாய்ந்தவர் இருக்கக்கூடாது .நான்கு புறத்தில் இருந்தும் அவர்களை தாக்குதல் வேண்டும் .மன்னர் பாண்டியரை மறந்து விட்டார் என அருண்மொழி மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான் .


ஆற்றகரையிலிருந்து அரண்மனைக்கு உள்ளே சென்றார்கள் .அருண்மொழி வருவதற்குள் தந்தையும், மகனும் கதவை சாத்திக் கொண்டார்கள். ஏன் இப்படி செய்தீர்கள் அவன் வருத்தப்பட மாட்டானா என கேட்டார். நான் எல்லோரையும் சந்தேகபட்டுத்தானாக வேண்டும் நான் ஒரு மன்னன் நீயும் அப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் அவன் உண்மையான சேனாதிபதியாக இருந்தால் அவன் தந்தையிடம் கூற மாட்டான் அதற்கு பதில் உன்னிடம் இருப்பான் .போருக்கு அழைத்து செல்லாமல் பாண்டிய தேசம் அல்லது கீழை சாளுக்கியத்திற்கு அனுப்பலாம் என்றும் கேள்வி இருந்தது.


இப்போது கதவைத் திற என்று கூறினார் .அருண்மொழி நேரடியாக அவர்களை கேட்க நாங்கள் உன்னை பாண்டிய தேசம் அல்லது கீழே சாளுக்கியம் அனுப்பலாமா ??என்று பேசிக் கொண்டிருந்தோம் என்று மன்னர் கூறினார் . அருண்மொழி மனதிற்குள் மிக வருத்தப்பட்டாலும் கேட்பது மன்னர் கீழை சாளுக்கியத்தில் விமலாதித்தன் இல்லாத பொழுது நான் அங்கே செல்ல தேவையில்லை .பாண்டிய நாடும் அமைதியாக தான் இருக்கிறது. நான் மேலை சாளுக்கியம் சென்று நோட்டம் இடுகிறேன் . அது போருக்கு மிக உதவியாக இருக்கும் என்று கூறினான். மன்னர் கெட்டிக்காரன் தான் என்று மனதிற்குள் நினைத்தார் .அதற்கு நீ செல்ல வேண்டிய அவசியம் இல்லை வைணவதாசனே போதும் இரு தினங்களில் யோசித்துக் கூறுங்கள் என்று அங்கிருந்து அருண்மொழி கிளம்பிவிட்டான்.


கவலையுடன் அவனுடைய வீட்டில் இருந்தான்.

நன்றி.மீண்டும் ஐந்தாம் பாகத்தில் சந்திப்போம்...







நன்றி.மீண்டும் ஐந்தாம் பாகத்தில் சந்திப்போம்...

Click here for Udayar audio book part 5:1👇

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...