Thursday, October 1, 2020

உடையார் பாகம் நான்கு சுருக்க விளக்கம் by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

மன்னர் உறங்கியவுடன் பஞ்சவன்மாதேவிக்கு சிறிது அமைதியும் தனிமையும் தேவைப்பட்டது .அரண்மனையை விட்டு தன்னுடைய குதிரையில் கிளம்பினாள்.அப்பொழுது மெய் காவல்படையினர் கூடவே வர, நான் தனிமையில் செல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு ,தஞ்சையின் எல்லையை கடந்து பஞ்சவன்மாதேவி வயல்வெளியில் அதனுள் சென்றுசிந்திக்கிறாள்.








கடைசியாக அமைதியாக வயல்வெளியில் அமர்ந்து அவளுடைய ஆன்மா வெளியே போவதை கவனித்து. அங்கிருக்கும் அனைத்து உயிர்களையும் ரசித்துவிட்டு போதும் என்ற மனம் வந்தவுடன் மீண்டும் தன்னுள் வருகிறாள். அங்கே ஒரு பல்லக்கு வரும் சத்தம் கேட்கிறது அப்பொழுதுதான் உணர்கிறாள் தான் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டோம் என்று. அந்த புத்துணர்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.


வந்தது ஈசான சிவ பண்டிதர் அவரை கண்டவுடன் வணங்கினார் .பஞ்சவன்தேவியை கண்டவுடனேயே அவர் புரிந்துகொண்டார். இந்த நேரத்தில் ஏனம்மா இப்படி வித்தைகளை கையாளுகிறாய்.அரசன் கோயில் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீ தான் அவருக்கு முழு பாதுகாப்பும், ஆதாரமும் இந்த நேரத்தில் நீ இப்படி விளையாடுவது தவறு என்று வருத்தப்பட்டார். நீ உன்னுடைய மார்பு பகுதியில் இருந்து வெளியே சென்று உள்ளே வந்து இருக்கிறாய். அதனால் போதுமென்ற மனம் வந்துவிட்டது .இதே போல் நெஞ்சுக்குழி, கண் ,மூக்கு ,வாய் ,தொப்புள் என்ற பல வழிகளில் வெளியே சென்று உள்ளே வரலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உண்டு. ஒரு முறை அந்த ருசி கண்டுவிட்டால் மறுமுறையும் அதை ருசிக்கத் தூண்டும் .இப்பொழுது இதற்கான நேரமில்லை. இதைவிட்டு நீ அமைதியாக இரு என்று கூறினார் .ஏனென்றால் உன்னுடைய உடலை எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்தில் போய் முடியும்.


அப்பொழுது அவருடைய கைலாயமலை அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் .கங்கை ஆற்றில் இருந்து நடைபயணமாக அம்மலையை சென்றடைந்தோம். அங்கே வெள்ளி மலையில் சிவன் தகதக என்று மின்னியது கண்கொள்ளாக்காட்சி . அது மிகப் பெரிய ஆசீர்வாதம். அண்ண பறவைகளைப் பார்க்கும் பொழுது மனம் அவ்வளவு அமைதியாக, அதிலே பல விண்மீன்கள் வானில் இருந்து கீழே விழுவதும் மேலே செல்வதாக இருந்தது .அங்கிருந்த சாதுக்கள் ரிசிகள் மற்றும் காந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினார்கள்.


மேலே சென்று பொன்னார் மேனியனே பார்க்கும்பொழுது போதும் இந்த வாழ்க்கையே போதும் எதற்காக இப்படி போராடிக் கொண்டிருக்கிறோம். அமைதி கண்டு உலகமே அமைதியாக இருப்பது போல் தெரிந்தது .ஒரு பேரானந்தம் அதை சொல்வதைவிட அனுபவிக்கும் போது தான் அதை உணரமுடியும் . மேலும் சில தினங்களுக்கு எனக்கு தங்கும் வாய்ப்பு கிடைத்தது . மிகப் பெரிய ஆசீர்வாதம் .


அங்கிருந்து கீழே வரும் பொழுது அந்த சாது என்னை வணங்கினார் .நீங்கள் எங்கே செல்வீர்கள் மீண்டும். இதே பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினார் .அவருடைய பெயர் கூட அவருக்கு தெரியவில்லை தன்னை மறந்த நிலையில் அங்கு அமைதியாக இருந்தார் .சிவனையே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு பெயர் எதற்கு .


அதே மாதிரியான கோயிலை கட்ட வேண்டும் விமானத்தை மேரு மலை போல் தங்கத்தால் வேய வேண்டும் என்பதை வேண்டிக் கொள்வதற்காகவே நான் இங்கே வந்தேன் .சில தினங்களில் மன்னரை சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பஞ்சவன் மாதேவியும் தெளிவு அடைந்து அங்கிருந்த அரண்மனை நோக்கி சென்றாள்.


திருவாரூரில் இருந்து வந்த தேவரடியார் உமையாள் உடைய சித்தி அங்கிருந்த பரஞ்சோதி இடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். எங்களை எதற்காக இங்கே அழைத்தீர்கள். அப்பொழுது பரஞ்சோதி அமைதியாக இருங்கள் உங்களுக்கு வரும் பணி மிக அரிது என்று சமாதானப்படுத்தினார். உமையாளை சீராளன் அவளுடைய வீட்டில் சென்று சந்திக்கிறான்.சிலைகள் செய்ய இளவயது பெண் தேவை என்று கூறினேன் அதற்கு பெருந்தச்சர் உங்களுடைய பெயரை கூறினார் .அவர் யார் என்று தெரியாமல் அவர்கள் அப்பொழுதும் சண்டை போட்டனர்.


பிறகு தான் தெரிந்தது அவர் ஒரு ஓவியன் திறமை வாய்ந்தவன் . தத்ரூபமாக ஓவியம் வரைந்து கொடுத்தை கண்டு அனைவரும் வியந்தனர். அப்பொழுதுதான் அவருடைய அருமை புரிந்தது.


ஈசான சிவ பண்டிதர் தஞ்சை அந்தணர்களை காண சென்றார். அங்கு அவர்கள் மரியாதை கொடுத்தனர். மன்னர் வேதம் ஓதுவது மட்டுமில்லாமல் கோயில் கணக்கு வேலைகளை பார்க்க சொல்கிறார் என்று குறை. அதற்கு ஈசான பண்டிதர் கோயில் பணிக்காக தானே அழைக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினார் .அப்பொழுது தான் தெரிந்தது அவர்கள் தொண்டை நாட்டு அந்தணர்களை சரியாக உபசரிக்கவில்லை என்று. அதைக் கண்டு மிகவும் கோபம் கொண்டு முட்டாள் கூட்டங்கள் என்று கூறிவிட்டு .அங்கிருந்து கோயிலுக்கு ,தொண்டை நாட்டு அந்தணர்கள் உடன் சென்றார் .


அரண்மனையில் தஞ்சை அந்தணர்கள் எங்களுக்கு வேதம் ஓதுவது மட்டும்தான் தெரியும் .வேறு ஏதும் எங்களால் செய்ய முடியாது என்று மன்னரிடம் கூறினார் .இதைக்கேட்ட மன்னர் நீங்கள் செல்லலாம் என்று கூறிவிட்டார் .


அப்பொழுது அங்கே ஈசான சிவ பண்டிதர் , தொண்டை நாட்டு அந்தணர்கள் உடன் கோயில் கட்டும் இடத்தில் வேதம் ஓதிக் கொண்டு இருப்பதாக செய்தி வந்தது. இதை பஞ்சவன்மாதேவி மகிழ்ச்சியுடன் அரசனிடம் கூறினாள் .


கோயில் கட்டும் இடத்தில் மன்னர் ,பஞ்சவன்மாதேவி ,பெருந்தச்சர் ,குணவன், வந்தியதேவர் ,இளவரசன் சேனாதிபதி , மற்றும் அருண் மொழியுடன் சந்தித்தார் .அப்பொழுது பெருந்தச்சர் முக்கியமானவற்றை பேசவேண்டும் என்று மன்னரை அழைத்திருந்தார் .உமையாளும்

அங்கே அழைக்கப்பட்டிருந்தாள்.ஆனால் உள்ளே அனுமதிக்க வில்லை .சீராளன் காவலர்களை அவமதித்து , அருண்மொழி பட்டனையும் மதிக்காமல் உள்ளே அழைத்துச்சென்றான் .


அப்பொழுது அருண்மொழி எல்லாரும் இப்படி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டால் .நாம் என்ன செய்வது என்று தந்தையிடம் வருந்திகொண்டான். சீராளனை பெருந்தச்சர் அறிமுகப்படுத்தினார். அவனுடைய திறமையை கண்டு அனைவரும் வியந்தனர் .


அப்பொழுது அங்கே பெருந்தச்சர் மெமுகு மாதிரியைக் கொண்டு வந்தார் .அதிலே அழகான தங்கம் வேயப்பட்ட கோபுர வடிவம். அதை ஒரு ஒவ்வொரு தளமாக விளக்கிக் காட்டினார்கள் .அதன் சுற்றுப்பாதை சுருள் வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது .அதைப்பற்றி குணவன் விளக்கினான்.ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டு வியந்தனர், பிரமித்தனர் பாராட்டினார்கள்.


பக்கத்தில் இருக்கும் ஆற்றில் இருந்து மண் எடுத்து வந்து மேலே கொண்டு சென்று .பிறகு அம்மண் அங்கேயே அந்த ஆற்றில் கொட்டப்பட்டு, சரி செய்யப்படும் என்று கூறினார்கள். மன்னர் கருவூர்தேவர் எங்கே என்று கேட்டார் அவர் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது என்று சேனாதிபதி கூறினார் .


இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது கருவூர்தேவர் ஈசான சிவ பண்டிதரை அங்கே சென்று சந்திக்கிறார் .பெரிய மனிதர் பெரிய மனிதர் தான் என்று பெருமைப் பட்டார். பண்டிதர் வருகை அப்பொழுது அங்கே இருந்த உமையாள்

நான் வரவேற்கிறேன் என்று மிகவும் அழகாக ஆடினாள். சிவ பண்டிதர் உடன் சேர்ந்து அந்த இளைஞர் கூட்டமும் உள்ளே வர அங்கே ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டது .


எப்படி உள்ளே அனுப்புவது என்று தெரியாமல், அருண்மொழி என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரையும் உள்ளே அனுப்பி விடுகிறார் .பண்டிதர் இவர்களை நான் தான் இங்கே அழைத்து வந்தேன். இவர்கள் இங்கு சரியான உபசரிப்பும் உறைவிடமும் இல்லாமல் தவிக்கிறார்கள் என்று கூறினார் .இதைக் கேட்ட மன்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இளைஞர்களும் வாழ்க நீங்கள் நீடூழி வாழ்க என்று வாழ்த்தினார்கள் .


அப்பொழுது அங்கே சிவ பண்டிதர் தன்னுடைய ஆசையை கூறுகிறார் மேரு மலைபோல் விமானத்திலிருந்து வழிகின்ற நீர் ஒரு குளத்திலேயே சேரவேண்டும் மேலும் தங்கத்தால் விமானம் வேயப் பட வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பெருந்தச்சர் ஒரு வழி இருக்கிறது கும்பப் பஞ்சரம் அமைத்துவிடலாம். கோபுரத்தில் இருந்து வடியும் தண்ணீர் ஒரு தளம் வழியாக கால்வாயில் சென்று கடந்து கடைசியில் அந்த குளத்தைப் சென்றடையும். உடனடியாக சீராளன் அதை வரைந்து காட்டினான்.


அதுமட்டுமல்லாது இராஜேந்திரனுடைய வரைபடத்தையும் கொடுத்தான். இது எப்போது வரைந்தாய் என்று ஆச்சரியப்பட்டனர் . கருவூர்தேவர் உடைய வரைபடத்தை வரைந்து கொடுத்தான்.மன்னருக்கு அதை பரிசாக கருவூர்தேவர் கொடுத்தார். என்னுடைய ஞாபகம் வைத்துக்கொள் என்று.


பெருச்தச்சர் மொத்த வடிவமும் ஒரு சிவலிங்கத்தை போல் அமைக்கப் போகிறோம். உலகம் பிரம்மா ,அதை சுற்றியுள்ள பிரபஞ்சம் திருமால் .இடையே உள்ள இடைவெளி தான் சிவன் . சிதம்பர ரகசியம் எங்கும் நிறைந்திருக்கும் இடைவெளியில்தான் சிவன் இருக்கிறான். மூன்று சேர்ந்த நிலையிலேயே இங்கு விமானம் உருவாக்கப் போகிறோம் .அந்த இடைவெளியை உமக்கும் எமக்கும் இருக்கும் இடைவெளி நீயும் ஒரு சிவன் நானும் ஒரு சிவன் .இந்த இரண்டும் இடையில் இருக்கும் சிவன் என்ற பல விளக்கங்களை கூற. அங்கிருந்த கருவூர்தேவர் அற்புதம் அற்புதம் கோயில் கட்டுவதை மட்டும் தான், இங்கு பல புதுமைகள் பிறக்கின்றன.




ராஜராஜ சோழ இங்கு இருக்கும் அனைவரும் இதில் இந்த கல்வெட்டுகளில் பொறிக்கப்படவேண்டும். நடனமாடிய உமையாள் பெயர் கூட இதில் பொறிக்கப்படவேண்டும் .ஒவ்வொருவரையும் நீ கண்டிப்பாக பாராட்டித்தான் ஆகவேண்டும் .உன்னுடைய பொறுப்பில் மட்டும் நடைபெறவில்லை. அந்த ஈசனின் ஆசிர்வாதத்தால் வேலை நடைபெறுகிறது .என்று பெருமை பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார் .


அப்போது அங்கு வந்தியதேவர் எனக்கு வயதாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். உனக்கு என்ன அப்படி வயது ஆகிவிட்டது. நீடுழி வாழ்வாய் இந்த கோவில் கட்டி முடித்து நீ இருப்பாய் என்று கூறினார் .அருண்மொழியிடம் உன்னை காதலிப்பவள் வந்து சேருவாள் என்று கூறினார்.அவன் திகைத்துப் போனான். சிற்பிகளுக்கு கர்வம் வந்துவிட்டது .அவர்களையும் கட்டுக்குள் கொண்டு வரும்படி உன் தந்தையிடம் கூறு என்று கூறிவிட்டு கருவூர்தேவர் கிளம்பினார்.


அங்கே தங்கி இருந்த தொண்டைநாட்டு அந்தணர்களை தஞ்சையிலிருந்து அந்தணர்கள் சென்று மிரட்டியடித்தனர் .சண்டை பெரிதாகி அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. தொண்டை நாட்டு அந்தணர்கள் எங்களுக்கு வேதம் தெரியும் ஏன் இப்படி நீங்கள் மிருகம் போல் நடந்து கொள்வீர்கள் என்று பேச்சு பெரிதாகிக் கொண்டிருக்கிறது . அருண்மொழி பட்டன் அங்கே வர தட்டுத்தடுமாறி எழுந்து ஓடி விடுகிறார்கள் .இதில் பேச்சுவார்த்தையில் தஞ்சை அந்தணர் சேரஆட்சி காலத்தில் வசதியாக இருந்தோம். எங்களுடைய நிலை இப்படி ஆகிவிட்டது என்று கூற அருண்மொழி பட்டன் கேட்டு விடுகிறான் .அதை அறிந்ததும் மன்னரும் கோபமடைகிறார்.


உடனடியாக பிரம்மதேசம் வேளாண் பூமியாக மாற்றப்படுகிறது.அதில் விளையும் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு மன்னருக்கு. வேளாளர்களுக்கு அந்த நிலம் சொந்தம். வீடு ,தண்ணீர் அனைத்து வரிகளும் விதிக்கப்படுகிறது அந்தணர்கள் புலம்புகின்றனர் .பிழைப்புக்கு என்ன செய்வது அங்கிருந்த காவல்படையினர் சேர தேசம் நோக்கி செல்லுங்கள் நீங்கள் தானே கூறியது .அவர்கள் ஆட்சியில் நாங்கள் வசதியாக இருந்தோம் என்று கோபமாக கூறிவிட்டு சென்றார்கள்.


நிலம் தங்களுக்கு சொந்தம் என்று கேள்விப்பட்ட வேளாளர்களும் என்ன செய்வது என்று திகைத்தார்கள் .அப்பொழுது வைணவதாசன் இடம் சென்று அறிவுரை கேட்போம் என்று கிளம்புகிறார்கள் .அங்கே தன்னுடைய குலம்படும் அவமானத்தை கண்டுவருத்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது வேளாளர்களுக்கு நீங்கள் மௌனமாக இருங்கள் உங்களுடைய வேலையை நீங்கள் பாருங்கள் உங்களுக்கு பரிசாக நிலம் வழங்கப்பட்டது. நீங்கள் கோயிலுக்காக என்ன செய்ய வேண்டும் என்று மன்னரிடம் கேளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தான்.


இந்நிலையில் அங்கே கருவூர் தேவர் வந்து நிற்கிறார். எங்கு நல்லவர்கள் இருக்கிறார்களோ அங்கு வருவேன். எல்லாம் கிரகக் கோளாறு.தொழில் என்று கூறியதன் அடிப்படையில் தான் மக்கள் பிரிந்து இருந்தனர். ஆனால் இப்போது மாறி உயர்வு தாழ்வு என்று ஒவ்வொருவருக்கும் கர்வம் வந்தது.உன்னுடைய நல்ல மனதிற்கு எல்லாமே நன்மையாக நடைபெறும் .கவனமாக இரு என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார் கருவூர்தேவர்.

நன்றி.

மீண்டும் சந்திப்போம் நான்காம் பாகத் தொடர்ச்சியில்..

Click here for Udayar audio book part 4:1👇

Udayar audio book part 4:1



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...