அனைவருக்கும் வணக்கம்,
ஊரே எதிர்பார்த்த கும்பாபிஷேகம் வந்தது என்ன உயரம் 13 நிலைகள் ,215 அடி உயரம். மன்னர் கங்கை நீர் எடுத்து முன்னே செல்ல, தொடர்ந்தார் இளவரசரும் கங்கை நீருடன், ஆசைப்பட்டது போலவே கட்டி முடித்துவிட்டார் .எப்பேர்பட்ட மனிதர் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே நடந்தார் மகன் .ஈசான சிவ பண்டிதர் கருவறைக்குள் தண்ணீர் கொண்டு செல்ல ,பிரம்மராயர் ,அருண்மொழி ,மற்ற அமைச்சர்கள் மற்ற இடங்களுக்கு கங்கை தண்ணீர் கொண்டு சென்றார்கள். எக்காளம் ஊத,முரசு கொட்ட ஊர் மக்கள் ஆரவாரத்துடன் கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அனைத்து கவசங்களும் நீர் வார்க்கப்பட்டது. வடிந்து வரும் நீர் அனைத்தும் ஒன்றாக சிவகங்கை குளத்தில் கலந்து, கருவறையில் இருந்து வரும் தண்ணீரும் கால்வாய் வழியாக சிவகங்கை குளத்தில் சென்றடைந்தது.
பெருந்தச்சரை மன்னர் தேடினார் .அற்புதமாக எண்ணியபடி முடித்துக் கொடுத்தீர்கள் என்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். ஈசனுடைய செயல் என்னுடைய வாழ்க்கையில் பெரும் துயரங்கள் வந்தாலும் அவருடைய துணையாலும் என்னுடைய மனைவியின் உதவினாலும் மட்டுமே என்னால் இதை முடிக்க முடிந்தது என்று கூறிக்கொண்டு ,ஊர் மக்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தினர் .உங்களுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது நீங்கள் ஓய்வெடுங்கள் என்று மன்னர் கூறினார்
கோயில் கட்டியதை விட அதை பராமரிக்க வேண்டும் .பராமரிப்பு பணிகள் பிரிக்கப்பட்டன ,சிவாச்சாரியார்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். மன்னர் அவருடைய மனைவிகளுடன் சேர்ந்து பொன்னாலான பூக்களால் சிவனை பூஜித்தார். அனைத்துப் பொறுப்புகளையும் மூவேந்த வேளாளர் இடம் கொடுத்துவிட்டு அரண்மனைக்கு கிளம்பிவிட்டார்.
அருமையாக இருந்தது கும்பாபிஷேகம் உங்களுக்கு தான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என்று பஞ்சவன்மாதேவி இடம் கோயிலில் இருந்து வந்தவர்கள் கூறிக்கொண்டிருந்தார். பஞ்சவன்மாதேவி எனக்கு அந்த ஆசை எல்லாம் விட்டுப் போய்விட்டது. போருக்குப் பிறகு என்னுடைய மனம் செயலற்று போனது அமைதியை தேடுகிறது என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர் எப்பொழுது வந்தது உனக்கு இந்த மாற்றம் என்று கேட்டார்.
இங்கு கருவூர்தேவர் வந்தார் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று என்னைக் கேட்டார் .நான் சும்மா இருக்கிறேன் என்றேன். நானும் உன்னுடன் சும்மாவே இருக்கிறேன் என்று இரண்டு முறைகள் அதேமாதிரி என்னுடன் வந்து அமர்ந்திருந்தார் .அப்பொழுதுதான் நான் செயலற்றுப் உள்ளே கிடப்பதை நான் உணர்ந்தேன். மூன்றாவது முறை வந்தபோது நீ உன்னுடையது என பிடித்துக் கொண்டிருப்பதையும் இப்பொழுது விட்டுவிடு என்று கூறினார். நான் உங்களை விட்டேன் ,எப்பொழுதும் அடுத்தடுத்த செயலுக்காக உங்களை தேடி உங்களை உயிராக எண்ணி இருந்தேன் .அதை விட என் மனம் அமைதியாகி விட்டது. இப்பொழுது எனக்கு எந்த விருப்பு ,வெறுப்பு இல்லை அமைதியான நிலையை அடைந்து விட்டேன்.
கும்பாபிஷேகம் முடிந்து விட்டது இப்பொழுது ஒன்றுமில்லை என்று எனக்கும் தோன்றுகிறது .நான் எதை விடவேண்டும் இந்த கோயிலை நான் விட வேண்டுமா ??என்று கேட்டார் மன்னர் .நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்த அரச பதவியை விட வேண்டும். அதை நீங்கள் ராஜேந்திரனுக்கு கொடுக்க வேண்டும் .அப்பொழுதுதான் நீங்கள் அமைதி அடைய முடியும் .நான் பழையாறை செல்ல விரும்புகிறேன் எனக்கு அமைதி தேவைப்படுகிறது என்று பஞ்சவன்மாதேவி கூறினாள். மன்னர் ஆகட்டும் என்று அவ்விடத்தை விட்டு விலக ,அவளோ வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவர்ப் பார்த்து வியந்தார்.
ராஜேந்திரனிடம் சென்று போதும் எனக்கு இந்த அரச பதவி . நீ இதை ஏற்றுக் கொள் .நான் அமைதி கொள்கிறேன் என்று மன்னர் கூறினார். எனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறது தந்தையே !!நான் நேற்று தான் மருவூர் அந்தணர்களை கூப்பிட்டுப் பேசினேன் .அவர்கள் பரதம்,மேரு மலை பற்றி முழு விளக்கம் எனக்குக் கொடுத்தார்கள் .நான் கங்கை தாண்டி ,கடாரம் சென்று ,கீழே சாளுக்கியம் தாண்டி ,ஈழத்தை வெல்ல வேண்டும் .மேலும் புத்த பிட்சுக்கள் தான் பாண்டிய நாட்டு மணிமுடியையும் செங்கோலையும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.நாகப் பட்டணத்திற்கும் ஈழ தேசத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது .நான் அதை முதலில் வெற்றி கொள்ள வேண்டும் நீங்கள் விட்டதை நான் பிடிக்க வேண்டும் என்று கூறினான்.
மன்னர் மிகவும் பெருமைப் பட்டார். என்னால் இருக்க முடியாது , உங்களைப்போல அமைதியாக இருக்க முடியாது. உங்களுடைய கோபத்தை நான் துங்கபத்திரா நதிக்கரையில் தான் பார்த்தேன் .நீங்கள் எப்பொழுது தேவையோ, அப்பொழுது மட்டுமே காட்டுகிறீர்கள் கோபத்தை,ஆனால் எனக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. நான் இங்கே ஆட்சி செய்வது மிக கடினம் இங்கிருக்கும் மக்கள் உங்களுக்கு பழக்கப்பட்டு விட்டனர் .அரசு பதவியேற்று, உங்களை துறத்திவிட்டேன் என்ற மாபெரும் இழுக்கு எனக்கு வந்து விடும்.நீங்கள் என்ன செய்தீர்கள் பழையாறையில் இருந்த சுந்தர சோழர் ஆட்சியை தஞ்சைக்கு மாற்றினீர்கள்.
அதேபோல் நான் ஜெயங்கொண்டத்தில் செய்திருக்கிறேன் .ஏனென்றால் அதுதான் மேடுநிலம் .அது எனக்கு வசதியாக இருக்கிறது எனக்கு பயணப்பட ,ஜெயகொண்டம் அங்கே கோட்டையும் ,கோயில் வேலையும் ஆரம்பமாகிவிட்டது .குணவன் திருவக்கரையில் இருந்து கல் கொண்டு வந்து கோயில் ஆரம்பித்துவிட்டான் .சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது,குளிர்ச்சியாக இருக்கும் என்று கூறினான் .இந்தக் கோயிலில் லிங்கப் பிரதிஷ்டை ஆனதில் குறை இருக்கிறது .முதல் முறையே அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும் .அதில் பெரிய தவறு செய்துவிட்டார் பெருந்தச்சர். அந்த நேரமும் சரியான நேரம் அல்ல. இந்தக் கோயில் குறையோடே தான் இருக்கிறது என்று அவன் கூறினான்.அதுவும் நல்லது எதிரிகளுக்கு திருஷ்டி போல இருக்கட்டும்.
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது .ஆனால் என்னால் இனிமேல் ஆட்சி பார்க்க முடியாது .நீங்கள் அமைதியாக கோயிலைப் பராமரித்து கொண்டிருங்கள்.நான் பார்த்துக் கொள்கிறேன் ,சிறிது காலம் பிறகு நான் அரசு பொறுப்பு ஏற்கிறேன் என்று ராஜேந்திரன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.
கோயிலில் கணக்கு சரிபார்க்கப்பட்டது .கல்வெட்டுகளை மன்னர் தடவித் தடவி பார்த்தார். காலத்திற்கும் இது நிற்கும் என்று பெருமைப் பட்டார் .அனைவருடைய பெயரும் அங்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்டது .ஒவ்வொரு இடமாக சென்று மன்னர் பார்த்து பார்த்து வியந்தார் . பிரம்மராயர் கண்டு வியந்தார் போரில் மன்னனை பார்த்திருக்கிறேன் .இவர் முற்றிலும் மாறுபட்டவர் என்று எண்ணினார் மனதிற்குள். பொறுப்புக்களை மூவேந்தர் இடம் கொடுத்து விட்டார் மன்னர். கோயிலுக்கு தங்கத்தகடு கொண்டு ,தங்கமுலாம் பூசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது .பெருந்தச்சர் இதுவே அருமையாக இருக்கிறது .இதற்கு எதற்கு தங்கப் பூச்சு ??ஈசான சிவ பண்டிதர் கூறியது போல கைலாயமலை போல இது காலத்திற்கும் பெயர் செல்லப் போகிறது என்று கூறினர்.
ஜெயம் கொண்ட சோழபுரத்தில் கோட்டை ,கோயில், வேலை முடிந்தது .அங்கே ஈஸ்வரனுக்கு உங்களுடைய பெயரை வைத்திருக்கிறார் ராஜேந்திரர் அதைக் கேட்ட மன்னர் சிரித்தார். மன்னர் இளவரசர் அழைத்து ஊர் முழங்க முடிசூட்டினார். சக்கரவர்த்தி இராஜேந்திரன் வாழ்க! வாழ்க! என்று முழங்க!!! சிம்மாசனத்தில் மகன் அமர்ந்திருப்பதை பார்த்து ரசித்து. இதுவும் கோயில்தான் என்று கண்குளிர கண்டு அவரை வாழ்த்திவிட்டு , பழையாறைக்கு மனைவிகளுடன் சென்றார்.
அங்கு தனிமையில் பஞ்சவன்மாதேவி உடன் அமர்ந்து நாயன்மார் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தார் .அதில் சுந்தரர் கதை வர, அவர் ஐராவரத்துடன் கைலாயம் சென்றதுடன், கூட இருந்த அரசனும், குதிரையும் கைலாயம் சென்றதை எண்ணி வியந்தார்.சுந்தரரால் தானே அந்த வாய்ப்பு அரசருக்கு கிடைத்தது. எப்பேர்பட்ட குரு ,குரு செல்வதற்குமுன் அரசர் சென்று அங்கே அடைந்து விட்டார் என்றும் பெருமைப் பட்டார். என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் ??அது மாதிரி குரு கிடைக்கவில்லை என்று புலம்பினார். அதை கேட்ட பஞ்சவன்மாதேவி சிரித்தாள் .
அங்கே கருவூர் தேவர் வந்தார் .சிறப்பாக கும்பாபிஷேகம் செய்தியாமே என்று கேள்விப்பட்டேன் என்றார். உனக்கு என்ன வேண்டும் கேள்?? மன்னர் சேரமான், சுந்தரர் போல எனக்கும் குரு வேண்டும் அப்பொழுது நான் யார் நீ என்னை குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் .மன்னர் இல்லை !இல்லை! என்று அவர் காலில் விழுந்து வணங்கினார்.நான் அதுமாதிரி கூறவில்லை கைலாயம் செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறினார் .நீ உடலோடு செல்ல நினைக்கிறாய்.உடல் பூமிக்கு சொந்தம் .உயிர் வெறும் காற்று பையே !இந்த உடலை இழந்து மீண்டும் உருவெடுக்க, கருவை தேடி அலைவதே மறுபிறவி .இதற்கிடையில் தற்கொலை செய்து இறப்பவர்கள். அவர்களுடைய காலம் முடியும் வரை செய்த தவறுக்கு இங்கே உரு இல்லாமல் பேயாக அலைந்து அவர்கள் காலம் வந்தவுடன் மறுபிறவி எடுப்பார்.
இறையே நினைத்து செயலற்று, அதையே நினைத்து எந்நேரமும் உணவும், தண்ணீரும் இல்லாமல் தன்னிலை மறந்து சுந்தர ரூபம் எடுப்பார்கள் .சுந்தரரும் அந்த மன்னரும் சுந்தர ரூபம் எடுத்தனர் .நீயும் அது போல் நோன்பு இருந்தால் போதும் ,நீ கண்டிப்பாக அந்த சுந்தர ரூபத்தை அடைவாய் என்று கருவூர்தேவர் ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றார்.
ராஜேந்திரன் பிள்ளையை, பேரப் பிள்ளையை கண்டவுடன், அவர் மனம் மிகவும் குளிர்ந்தது .போதும் இந்த வாழ்க்கை போதும் என்ற எண்ணம் வந்தது .அரண்மனை தோட்டத்திற்கு சென்றார் .அங்கிருக்கும் தூணில் சாய்ந்தார் அனைவரும் உறங்க ஊரே அடங்கிவிட்டது .ஏதோ அடைக்கிறது இறைவா! எனக்கு சுந்தர ரூபத்தை கொடு! எப்பொழுதும் உன்னோடு இருக்கும் பாக்கியத்தை கொடு என்று வேண்டினார்.இது தான் மரணமா ??அவருடைய ஆத்மா வெளியே வந்தது உடலைவிட்டு, இங்கே தான் நான் வாழ்ந்தேனா??இது தான் என் சொந்த ஊரா??.இது எதுவும் எனக்கு தெரியவில்லையே .என்னுடையது இல்லையே !!பஞ்சவன்மாதேவி இடம் சென்றார் அவளும் அவரை உணர்ந்தாள் .தஞ்சையை சுற்றி வந்தார்.
கருவூரை சென்றடைந்தார் போதும் என்று சென்று விட்டாயா?? எங்கே போகிறாய் என்று கேட்டார் கருவூரார் .நான் கைலாயம் போகப்போகிறேன் என்றார் மன்னர்.எங்கே ??கோயிலுக்குத்தான் நான் கட்டிய கோயில்தான் எனக்கு கைலாயம். நான் கூறியது உனக்கு புரிந்து விட்டு என்றே நினைக்கிறேன். நீயே நீ கட்டிய கோயிலை ஏற்கவில்லை என்றால் தவறாகப் போகும் .அதுதான் கையிலாயம். கோயில் சென்று ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தார் .கடைசியில் கோபுரத்தில் சென்று தங்கினார் . ஊரே கலங்கியது!! எங்கும் கண்ணீர் !!ராஜேந்திரன் வந்து குலுங்கி அழுதான் .அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை முறைப்படி செய்தான்.
பஞ்சவன்மாதேவிடம் சென்று, இனி நீ தான் குடும்பத்திற்கு தலைமைப் பொறுப்பு என்று அவனை கூறி ஆசீர்வாதம் செய்தாள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.நான் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் .எனக்கு எதுவும் வேண்டாம் ..கடைசியாக நீ எனக்கு கொல்லி வைத்தாலே போதும் என்று ஆசீர்வாதம் செய்தாள். சிறிது காலங்களுக்குப் பிறகு அவளும் உயிரை பிரிந்தாள், மன்னர் வந்து அவள் கரம் பிடித்தார் .இங்கே தான் இருக்கிறீர்களா ??நீங்கள் எங்கேயோ சென்று இருப்பீர்கள் என்றல்லவா ??நினைத்தேன் என்றாள் .கோயில்! எதற்கு இங்கு ?வருவோரை நாம் வரவேற்று வழியனுப்பி வைக்க வேண்டாமா ??அதுதான் நமக்கு வேலை .சதாரண மக்கள் வந்து சந்தோஷமடைந்து செல்வார்கள் .கர்வம் இருப்போர்களுக்கு அவர்களுடைய கர்வம் இங்கே அழியும். சிவ பக்தர்கள் பக்தி அடைவார்கள்.
உடையார் முற்றும்.
நன்றி.
Click here for Udayar audio book part 6:3👇



No comments:
Post a Comment