Tuesday, April 6, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"பிரியாணி" by Kamatchi

 


பிரியாணி


விதமாய் வித்தியாசமாய் நீ இருப்பாய் விருந்து என்றால் நீ இருப்பாய் !மணமணக்கும் சுவையோடு நீ இருப்பாய் மணக்கோலத்தை காண வரும் கண்களை கவர்ந்து இருப்பாய்!

நாவில் உன் சுவை ஏறிவிட்டால்

நல்லது கெட்டது என்று பார்க்க மாட்டார்கள் எம்மக்கள்!

உன்னை விட சுவை உண்டா இவ்வுலகில் உறவை மேம்படுத்த , உள்ளத்தை கவர்ந்து இழுக்க!

உன்னை பக்குவமாய் பதம் போட்டு பத்திரமாய் பரிமாறினால் அன்றைய நாளே மகிழ்ச்சி கட்டும்! துள்ளாத மனமும் துள்ளும்!

உன்னால் ஜாதி ,மதங்கள் ,மொழிகள் தடை தாண்டி அனைத்தையும் அரவணைக்க முடியும்

இல்லாய பின்ன! பாகிஸ்தான் பிரியாணி , அரபி பிரியாணி,தம் பிரியாணி, தலப்பாக்கட்டு பிரியாணி, முகலாய் பிரியாணி, மலையாளி பிரியாணி ,ஹைதராபாத் பிரியாணி , இவற்றால் ஒன்றிணைந்து உலகை காப்போம் மக்களே!

3 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...