Monday, April 19, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"வானவில்" by Veena Shankar

 


அன்புள்ள வானவில்லிற்கு உன் தோழி எழுதும் கடிதம்

பெண்மையின் ஏழு பருவங்களை உன் வண்ணங்களாய் கொண்டனையோ

மழை சாரலையும் வெயிலையும் உன்னுள் கொண்டு வெளிப்பட்டனையோ

வானத்தை வளைக்க எண்ணி முடியாமல் வளைந்து நின்றனையோ 

நீ தனியாக வர பயப்பட்டு கூடவே இன்னொரு நிழலையும் அழைத்து வந்தனையோ

என் முன் இரட்டை வானவில்லாய் உருவெடுத்தனையோ

வானவில்லுக்கு வானமே ஆயுதம்

மனித வில்லாய் இருப்பதைக்காட்டிலும் வானத்து வில்லாய் மாற ஆர்வம் கொண்டனையோ

எது எப்படியோ உன்னை வரையாத ஓவியனுமில்லை 

உன்னை பாடாத கவிஞனுமில்லை

மனிதனின் மனதிலிருந்து அழியக்கூடியவனுமில்லை நீ.

இப்படிக்கு உன்னை எதிர்பார்க்கும் தோழி நான்.

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...