ஓலைச்சுவடி
கூலிக்கு வேலை பார்ப்பவன் செல்வம். மழைக்குக் கூட பள்ளி பக்கம் ஒதிங்கியதில்லை. படிப்பறிவு அறவே கிடையாது. அவனுக்கு தெரிந்தது எல்லாம் மண்வெட்டியும் அதில் கிடைக்கும் கூலியும் தான். ரூபாய் நோட்டில் காந்தி படம் தெரியும். நம்மில் பலருக்கே கள்ள நோட்டு எது என்று கண்டுபிடிக்க தெரிவதில்லை..
ஒருநாள் அவன் ஊருக்கு அகழ்வாராய்ச்சி குழு ஒன்று வந்திருந்தது. ஒரு சில இடங்களை தெரிவு செய்து செல்வத்திடமும் மற்றும் சில கூலியாட்களிடமும் அந்த இடங்களை தோண்டச் சொன்னார் குழுத் தலைவர். அதன் படியே பணி ஆரம்பமானது.
எப்போதும் நேர்மையாக இருக்கும் செல்வம் அன்று என்னவோ புத்தி மாறி தோண்டும் போது தனக்கு கிடைத்த ஓலைச் சுவடிகளை தன் இடுப்பு துண்டில் மறைத்து வைத்தான். மற்றவர்கள் தோண்டிய குழியிலிருந்து முன்னோர்களின் பானை, காசு இன்னது பிற கிடைக்க, இவன் தோண்டியயிடத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை என நினைத்தனர் குழுவினர் இவன் மறைத்து வைத்தது தெரியாமல்.
செல்வம் வீட்டிற்கு வந்து அந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, தன் மனதை மாற்றிக்கொண்டு, மறுநாள் அதை அகழ்வாராய்ச்சித் தலைவரிடம் ஒப்படைத்தான். தன் செயலுக்கு வருந்தி மன்னிக்குமாறு வேண்டினான். குழுத்தலைவரும் அவனை மன்னித்து, எதற்காக இதை மறைத்து வைத்தாய் எனக் கேட்க, பதில் தெரியாமல் விழித்தான். மேலும் அவனே, 'ஐயா!, இது என்னது என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்கள மாதிரி பெரிய தலைவர் என்னை சென்னையில இருக்கிற வள்ளுவர் கோட்டம் என்ற இடத்திற்கு வேலை விசயமா கூட்டிட்டுப் போனார். அங்க ஒரு சாமி எழுதினத பார்த்தேன். அதுவும் இதுவும் ஒண்ணுபோல இருக்கிறதால உங்களுக்கு முக்கியமானதா இருக்கும்ன்னு நினைச்சி கொண்டாந்தேன் ' என்றான். அவன் சொன்ன சாமி திருவள்ளுவர் தான் என யூகித்த தலைவர் இது என்னடா புது குழப்பம். இத்தனை நாள் 1330 குறள் தான் இருக்குன்னு நினைத்தோம். இதுவும் திருக்குறள் தானோ என தன் தலையை சொரிந்தார்,
ஆராய்ச்சிகள் தொடரும் அறியாமை உள்ளவரை.

புதிய வடிவம் ,ஓலைச்சுவடி👏
ReplyDeleteThank you
DeleteSuper
ReplyDeleteநன்று
ReplyDelete