புத்தகம்
எழுத்துக்களின் கோர்வை சொல்
சொற்களின் கோர்வை வாக்கியம்
வாக்கியங்களின் கோர்வை பக்கம்
பக்கங்களின் கோர்வை புத்தகம்
புத்தகங்களின் கோர்வை புத்தக நிலையம்
எழுத்துக்களால் பக்கத்தை நிரம்பவிட்டாய் நீ
என் இருளையும் போக்கிவிட்டாய்
பல புலவர்களால் உருமாறினாய் நீ
பல நல்ல செய்யுளை ஏந்தி வந்தாய்
பல கவிஞர்களால் பாடப்பட்டாய் நீ
பல இசையால் எங்களை ஈர்த்தாய்
இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டாய் நீ
பழைய புத்தகக் கடையில் உன்னை நான் வாங்கும் போது
உன்னையன்றி உலகமில்லை
கணினி உனக்கு நிகரில்லை
இடத்திற்கு தகுந்தாற் போல் உன் உருவத்தை
மாற்றிகொண்டாய் நூல் நிலையமாய்
உன்னால் அறிவை வளர்த்தேன்
உன்னை நான் ஸ்பரிசித்ததால்
வகுப்பறையில் மாணவர்களை பிரிப்பதுபோல் உன்னை பாடவாரியாக பிரித்தோம்
பிரித்தாலும் சேவையாற்றுகிறாய்
அடுக்குத்தொடர் போல
மொழி பேதம் கிடையாது உனக்கு
பல எழுத்தாளர்களை நீ உருவாக்கியதால்
அறிவை பெருக்குகிறாய் படிப்பதால்
ஆற்றலை கொடுக்கிறாய் பின்பற்றுவதால்
இரவலாய் மாறுகிறாய் ஆசையிருப்பதால்
(புத்தகமானாய்) ஈன்ற தாயான ஓலைச்
சுவடிகளின் மாற்றத்தைப் பெற்றதால்
உற்றாருக்கு பரிசாகிறாய் நீ தூண்டுவதால்
ஊருக்கு ஒன்றாய் பிறக்கிறாய் குடும்பமாய்
எதிர்ப்பார்ப்பாய் இருக்கிறாய் எங்களுக்கு
மலராய் மலர்வதால்
ஏந்த காத்திருக்கிறோம் உன்னை
ஐயத்தையும் போக்குவதால்
ஒளிவு இல்லை உன்னிடம் ஒளியைத் தவிர
ஓரமாய் நீ இருந்தாலும் உன்னை
தீண்டுவோர் உண்டு
ஔடதமே நீ எங்களுக்கு எங்களின்
மனதை ஆற்றுவதால்
அஃதே எனக்கு தெரிந்த மொழியாம்

அருமை,ஆத்திச்சூடி👌
ReplyDeleteThank you
ReplyDelete