Sunday, April 4, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"பிரியாணி" by Vidhya Nivash

 


பெயரைக் கேட்டவுடன் முகம் மலரும் வேண்டாம் என்னும் வாய் ,

கண்கள் எங்கே நீ என்று தேடும்...

பார்த்த உடன் மதியை மயக்கும்,

உடனே வரும் யானை பசி,


மணத்தால் இழுப்பாய் காந்தமாய் ஊரை

வெளியே வெற்று கௌரவம்

உள்ளே பதறும் எவரும் பறிப்பார் என்று....


ஊர் பெயர்தெரியாதவர் கூட பங்குக்கு வந்தால்

சொத்தை கூட கொடுக்கத் தோன்றும்!!!


பல ஊர் பெயரை அடைமொழியாய் கொண்டாய்!!!

தயிர் சாதம் தெரியாத பிள்ளைகள் கூட அறியும் உன் பெயர்...


உன்னில் பல பரிமாணங்கள் ஏற்பட்டாலும் என்றும் உனக்கு பலரின் ஆதரவு உண்டு!!

காபிக்குப் போட்டியாக வந்த stress பஸ்டர் நீயே!!!


சிப்பாய்களுக்கு உணவாக வந்த நீ இன்று செலிபிரிட்டி எங்களுக்கு..

வாழ்க பல்லாண்டு!!!

வளர்க மேன்மேலும் .....

இப்படிக்கு உன்னுடைய அடிமைகள் நாங்கள்😁

4 comments:

  1. இதற்கு மேலும் பிரியாணியை பெருமைப்படுத்த முடியாது

    ReplyDelete
  2. Super super....Especially Coffee comparison as a stressbuster ...Semma Vidhya

    ReplyDelete
  3. செம்ம வித்யா...

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...