Monday, April 19, 2021

மிதிவண்டி by Vidhya Nivash

 


                            மிதிவண்டி


உன்னை மிதிக்க மிதிக்க மிதக்கும் மனம் காற்றில்...

ஏழைகளின் நண்பன் நீ!

இன்று நீ இல்லா செல்வர் வீடும் உண்டோ??

சாலையில் ஓடத்தான் பிறந்தாய் !

உன்னை யாரப்பா ஓடாமல் நின்ற இடத்தில் ஓட்ட வைத்தது!

முதல் நாள் உன்னை மிதித்தேன் பின்பக்கமாக ...

பயிற்சி எடுத்து மிதித்தேன் முன்பக்கமாக கவனக்குறைவால் விழுந்தேன் தொப்பென்று!!!

பல நினைவுச் சுவடுகள் கொடுப்பவன் நீ!

பல வாழ்க்கை பாடங்கள் கற்றுத் தருபவன் நீ !

எப்பேர்பட்ட நெரிசலிலும் சுலபமாகக் கடந்து செல்ல உதவுபவன் நீ!

உனக்கு எத்தனை போட்டிகள் வந்தாலும் நீயே என்றும் காதல் மன்னன்!

மாமா, அப்பா சைக்கிளில் முன் கூடையில் அமர்ந்து அறியாத வயதில் உலகை ரசித்த நாட்களை ,உன்னுடைய அனுபவங்களை மறக்க முடியுமா??

வானூர்தியில் சென்றாலும் வானத்தில் பறந்த அந்த அனுபவத்தைத் தர முடியுமா ???

உன்னை ஓட்டுபவரை அடுத்த கணமே

மறந்து ,பறக்க செய்யும் மாயக் கள்வன் நீயே!!!

இன்றும்,என்றும் பலரின் கனவு நீ!!!



5 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...