அனைவருக்கும் வணக்கம்,
ஊர் முழுக்க போர் ஆரவாரமாக இருந்தது.மருவூர் அந்தணர்களும் மேலை சாளுக்கியம் செல்வதற்கு தயாரானார்கள் .இதைக்கேட்ட தஞ்சை அந்தணர்கள் நாம் இங்கே சண்டி ஹோமம் வளர்ப்போம் என்று முடிவுசெய்தனர். எப்பொழுது திரும்புவார் என்று தெரியவில்லையே அவர் ஒரு வருடம் ஆனாலும் நாம் அந்த ஹோமத்தை நடத்துவோம்.
தேர்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது .இளவரசன் நான் கருமார் களையும் மேலை சாளுக்கியத்திற்கு அழைத்து செல்ல போகிறேன். எதற்கு என்று பிரம்மராயர் கேட்டார் .அங்கிருக்கும் உலோகப் பொருட்களைக் கொண்டுவந்து உருக்கி நானும் என் தந்தை போல் கோயில் கட்டப்போகிறேன் என்று சொன்னார்.
தஞ்சைக்கு குந்தவை வருகை ,அவளை வரவேற்பதற்காக அரண்மனையில் அவளுடைய அன்னைமார்களும் ,பஞ்சவன் மாதேவியும் ,சக்கரவர்த்தியும் காத்திருந்தார்கள் .தேரில் இருந்து இறங்கிய உடன் தந்தையை கட்டித் தழுவிக் கொண்டாள் .அன்னையர்கள் சூழ தந்தை கேள்வியை கேட்டார் .விமலாதித்தன் உன்னைக் கடிந்து கொண்டானா ??இல்லையப்பா அவர் அமைதியானவர் தான் இதற்கு காரணம் நீங்கள்தான் என்று கூறினாள்.அனைவரும் திடுக்கிட்டனர் ,என்னை ஏன் வேங்கை நாட்டில் கொண்டு சென்று திருமணம் செய்து கொடுத்தீர்கள் .எங்கேயாவது அருகில் செய்து கொடுத்து இருக்கலாம் அல்லவா??? அது மட்டுமில்லாமல் சுற்றிலும் விசாரிக்காமல்!!செய்துவிட்டீர்கள்.
அங்கே மேலை சாளுக்கியத்தின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. விமலாதித்தன் எடுப்பார் கைப்பிள்ளை , அதை சுட்டிக் காட்டினால் கோபம் தான் வருகிறது. வடுகு மொழியில் என்னை திட்டுகிறார். எனக்கு வடுக மொழி புரியும் .ஆனால் தமிழை மட்டுமே பேசுவேன் .அதற்கும் ஏளனம் அங்கிருக்கும் அமைச்சர்களும் ,முனிவர்களும் எள்ளி நகையாடினர் .
எனக்கு எதிராக பெண் பார்க்கும் படலம் வேறு ஒருபுறம் நடைபெறுகிறது .அவருடைய மாமாக்கள் இதை செய்கிறார்கள். ஒற்றன் வைத்தேன் அவரையும் கொண்டு விட்டார்கள். மேலை சாளுக்கிய த்திலிருந்து சத்யாசிரியரிடமிருந்து ஓலை வந்தது. அது எச்சரிக்கை ஓலை அண்ணன், தம்பி இருவரையும் எச்சரித்து இருந்தான் .அதற்கும் இதுமாதிரி பல முறை வந்துவிட்டது என்று கூறிவிட்டார் .ஒன்று அவரை வீட்டோடு மாப்பிள்ளையாக மாற்றுங்கள். கட்டுப்பாட்டுக்குள் உள்ள அரச பதவியை கொடுங்கள் .அண்ணன் இருக்கும் பொழுது எப்படி அம்மா ??அவனை அரசன் ஆக்குவது. அது உங்களுடைய விருப்பம்!! அனைவரும் இன்னும் குழந்தை தனமாகவே இருக்கிறாள் என்று நினைத்தனர் .
அவனைக் கொல்ல சென்றேன் மெய்க்காவலர் படையினர் கீழே தள்ளி விட்டார்கள். உன்னை காதலித்து திருமணம் செய்ததே தவறு என்று கூறினார் .என்ன முட்டாள்தனம் உன்னுடைய தந்தை சக்கரவர்த்தி அவரை நாங்கள் இப்படி செய்தால் இங்கிருந்தவர்கள் சும்மா விடுவார்களா?? வீரம் மிகுந்த சக்கரவர்த்தி உங்கள் கணவர், விமலாதித்தன் மண்ணாங்கட்டி என்று ஆவேசமாக பேசினாள்.
வேங்கி நாட்டில் ஒரே குழப்பம் மேலை சாளுக்கியத்தில் இருந்தும் ,சேர நாட்டில் இருந்தும் பலர் வந்து அங்கு குடியிருக்கின்றனர். வேங்கி நாட்டிற்கு இனி செல்ல முடியாது. என் தங்கை இங்கே வந்து இருக்கலாமே !!அதுபோல் நானும் ஒரு ஓரமாக இருந்து விடுகிறேன் .உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறினாள்.மேலை சாளுக்கியத்தை போரிட தான் வேண்டும் .ஆனால் இவளை காரணம் காட்டிய செல்ல வேண்டும்.
எப்பேர்ப்பட்ட மன்னர் ஆனாலும் பெண்ணைப் பெற்றால் தொந்தரவு இருக்கத்தான் செய்யும் என்று மக்கள் புலம்பினார்.
விமலாதித்தன் காஞ்சிக்கு வருகை. வந்திய தேவர் சென்று வரவேற்றார் .அவனுக்கு வியப்பு தான் ஏதாவது ஒருவர் வந்து வரவேற்பார் என்று தான் எண்ணியிருந்தான். இராஜேந்திரன் தான் செல்ல வேண்டும். ஆனால் இங்கே சூழ்நிலை சரியில்லை. அதனால் நீங்கள் தான் செல்ல வேண்டும் என்று குந்தவை பிராட்டி கேட்டார்.நான் இங்கே தான் இருக்க வேண்டும். அவளை அடக்க ஒருத்தர் வேண்டாமா?? எதற்கு விளக்கம் கூறுகிறாய் போங்கள் என்று கூறினால் போதும் என்றார் வந்தியதேவன் .எந்த ஜென்மத்திலும் வாணர் மகன் ,நீங்கள் வேண்டும் இந்த சோழ தேசத்திற்கு உங்களுடைய உதவி அளப்பெரியது.
என்னுடைய பெற்றோரும் பயந்தனர் மேல் குடிமகள் என்று உன்னை .ஆனால் உன்னிடம் எள்ளளவும் அந்த கர்வம் இல்லை .இன்று உன்னுடைய மருமகள் அதை காட்டி அவளுடைய கணவனை இழிவு படுத்துகிறாள். அவனை உற்சாக படுத்தி இருந்தால் அவன் எங்கேயோ போய் இருப்பான் என்று கூறினார் வந்தியதேவன்.
விமலாதித்தன் வேகமாக அவன் கொண்டுவந்திருக்கும் போருக்கான தற்காப்பு கவசத்தை விளக்கிக் கொண்டிருந்தான். அதற்கு வந்திய தேவர் துணிச்சலாக எதிர்த்து நிற்காமல் இது கொஞ்சம் கேவலமாக இல்லையா என்று கேட்டார் .அப்பொழுது அவன் கேடயமும் கேவலம் தான் என்று கூறினான்.
மெதுவாகக் கேட்டார் என்ன பிரச்சனை என்று .யார் ??என்று கேளுங்கள் மன்னர் தான் இதற்கு காரணம் ஒரு பெண்ணை வளர்க்காமல் ஆண் பிள்ளையை வளர்த்து திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார். நானும் நட்புக்காக தான் அவளை மணந்து கொண்டேன் .அவளுடைய அழகில் மயங்கி அல்ல. உங்களுடைய மனைவி குந்தவை பிராட்டி போல் இருப்பாள் என்று எண்ணினேன். அவளோ பேய் இங்கே பாருங்கள் என்று துணியை விலக்கி காட்டினான் மிக ஆழமான காயம் அவன் தோள்பட்டையில் ,தூங்கும்போது கத்தியை வைத்து குத்தி விட்டாள்.
மேலை சாளுக்கிய தூதுவரை அரச பதவி கொடுத்து ரகசியமாக அரசாங்கத்திற்காக வைத்திருந்தோம் .அவரிடம் சென்று காசு கொடுத்து அங்கே நடக்கும் வேலைகளை சொல்ல சொல்லியிருக்கிறாள் .அவன் என்னிடம் வந்து முறையிட்டான் .அவமானம் வெளியே தெரியாமல் இருக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் .உடனடியாக தஞ்சைக்கு போகிறேன் என்று கிளம்பி விட்டாள் .மரியாதையாக நானே கொண்டு வந்து விடுகிறேன் என்று வந்தேன். எல்லை வந்தவுடன் மீண்டும் ஆரம்பித்துவிட்டது சண்டை தனியாகப் பிரிந்து முன்னேறி சென்று விட்டாள்.
சிறுது காலம் தாய்வீடு சென்று வா என்று கூறி இருக்கலாம் அல்லவா என்று வந்தியதேவன் கேட்டார். என்னுடைய பேச்சை எங்கு கேட்கிறாள் .குத்திக் காட்டுகிறாள் உங்களைப்போல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சொல்கிறாள் .அடித்தாயா??? என்று கேட்டார் மனைவி அடித்தால் வாங்கிக் கொள்வதுதான் புருஷ லட்சணம் என்றால் நான் என்ன செய்வது.
உன்னுடைய அண்ணன் காசிக்கு போவதாக ,அமைதியாக வாழ போவதாக செய்தி வந்ததே!! அதனால் இனி விரைவில் அரசனாக பொறுப்பேற்பாய் .அவளுடன் அமைதியாக இருக்க பல வழிமுறைகளை உனக்குச் சொல்லுகிறேன் என்று கூறினார் .அதற்கு அவள் இல்லையே வேங்கி நாட்டில் நீ அரச பதவி ஏற்றால் பட்டமகிஷி என்று ஓடி வர மாட்டாளா ??இருவரும் சிரித்தனர்.
பிறகு மேலைச் சாளுக்கிய போர் திட்டகளைப் பற்றி கூறிக்கொண்டிருந்தான். அவர்கள் தர்ம முறையில் போரிடப் போவதில்லை. விஷம் வைத்தும், மறைந்தும் , நம்மைத் தாக்கப் போகிறார்கள் என்று கூறினான். இவன் நல்லவன் தான். இவனை நல்வழிப் படுத்தினால் போதும். உடனடியாக விமலாதித்தன் கூறிய அனைத்து செய்திகளையும் ஓலையில் எழுதி மன்னருக்கு அனுப்பி வைத்தார் வந்தியதேவன்.
அரசவை கூட்டப்பட்டது ,மன்னர் ஓலையில் வந்திருக்கும் மேலைச்சாளுக்கிய குறிப்புகளை பேசினார். எப்படி தந்திரமாக நடந்தாலும் நாம் இதில் வெற்றி கொள்ளவேண்டும் என்று கூறினார். முதலில் போர் படைகள் வரிசைப்பற்றி ராஜேந்திரன் பேசத் துவங்கினார் .பல எதிர்ப்புகள் வந்தது, பல விளக்கங்களும் வந்தன .பிறகு அருண்மொழி கூறினான். பிரம்மராயர் பேச ,பழுவேட்டரையர் பேச ஆளாளுக்கு அவர்களுடைய கருத்துக்களை பரிமாறினார்கள்.
கடைசியாக மன்னர் ராஜேந்திரனும், அருண் மொழியையும் பாண்டிய தேசத்திற்கு செல்லச் சொன்னார்.
மன்னர் பொறுப்பேற்ற படை முன்னே செல்லவும், அதைத்தொடர்ந்து விமலாதித்தன் உடைய படையும் ,பின்னர் ஈராயிரத்து பல்லவரும் ,பழுவேட்டரையரும் தொடர, பிரம்மராயர் பின்வர கடைசியாக உன்னுடைய படை வரும் என்று கூறினார் ராஜேந்திரனிடம். நல்லா இருக்கிறதே தந்தை!! நீங்கள் படையெடுத்து முன்பு சென்று வென்று வருவீர்கள் !!என்னுடைய இளைய படை பின்னே நின்று வெதும்பி சாக வேண்டுமா ???என்று கூறினான்.
இதற்கு பிரம்மராயர் அப்படியில்லை நீங்கள் முதலில் பாண்டிய தேசம் சென்று .அங்கு வைகை ஆற்றில் உன் படை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் அது போரிற்கு மிக உதவியாக இருக்கும். துங்கபத்ரா ஆற்றங்கரையில் அனைவரும் ஒன்றாகத்தான் நிற்போம். வரிசை சிதறிப்போகும் கடைசியாக ராஜேந்திரன் ஒத்துக்கொண்டு இன்று மாலையே நான் பாண்டிய தேசம் செல்கிறேன் என்று கூறினான்.
நல்ல நேரம் பார்த்து இளவரசனும் ,அருண்மொழியும் மன்னரின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினார்கள். வழியெங்கும் மக்களின் ஆரவாரம் .அந்தணர்களும் நாங்களும் போருக்கு வருகிறோம் என்று கூற ,உங்களால் அங்கு வர முடியாது. நீங்கள் இங்கே நிர்வாகத்தை பொறுப்பாக நடத்துங்கள் என்று கூறிவிட்டு சென்றனர் .அதை எண்ணி அவர்களும் பெருமைப் பட்டனர். மருவூர் அந்தணர்களும் அவர்களுடைய பயணத்தை ஆரம்பித்தார்கள்.
மன்னர் பஞ்சவன் மாதேவியும் உடன் அழைத்து செல்ல விருப்பப்பட்டார். இது மற்றவருக்கு கோபத்தை உண்டாக்கியது. கடைசியில் அவர்களும் புரிந்து கொண்டனர் .பஞ்சவன் மாதேவியும் நான் உங்களுடைய வேகத்திற்கு ஈடு கொடுப்பேனா என்று கேட்டாள். நாம் அமைதியாக தான் செல்லப் போகிறோம் .மன்னரும் அவருடைய படைகளுடன் போருக்கு கிளம்பினார் . ஊர் எங்கும் ஆரவாரம் தொடங்கியது. மன்னருடைய தேருக்கு முன் நின்று ஒருவன், வெற்றிக்காக தன்னை பலி கொடுத்தான் மன்னர் வருத்தப்பட்டார்.
அனைத்து படைகளும் முன்னேறி துங்கபத்திரா நதிக்கரையை அடைந்தது .யாரை ஒற்றர் ஆக அனுப்புவது என்று வாதம் வந்தது .கடைசியில் வைஷ்ணவ தாசன் பெயர் வந்தது. அங்கே ஒரு செய்தி வந்தது .மருவூரிலிருந்து 14 அந்தணர்கள் வந்திருப்பதாக தெரிந்தது. அரசர் அவர்களை அழைத்து தனிமையில் பேசினார் .எனக்கு இப்பொழுது உங்களுடைய உதவி தேவைப்படுகிறது .நீங்கள் இங்கிருந்து அங்கே ஒற்றாக சென்று நிலவரம் அறிந்து வர வேண்டும் .அது மிகப் பெரிய உதவி இந்தப் போருக்கு என்று கூறினார் .கண்டிப்பாக நாங்கள் உங்கள் அடிமைகள் என்று கூறினார்கள்.
வைணவதாசனுடன் சேர்ந்து அவர்கள் கரை கடந்தனர் .அங்கிருப்பவர்கள் விசாரித்தனர் நாங்கள் இங்கே கோயில் பார்க்க வந்தோம் .பாதயாத்திரையர்கள் என்று கூறினார்கள். ஒருவாறு நம்பி அவர்களை விட்டார்கள் மேலை சாளுக்கியர்கள். கடைசியில் மாற்றிக்கொண்டார்கள் .ஒருவர் மட்டும் எப்படியோ தப்பித்து மறுகரையை அடைகிறார் .அங்கே இருப்பது வைக்கோல் பொம்மைகள் அவர்கள் அதை ஆட்கள் போல் காண்பிக்கிறார்கள். எப்படியும் மொத்தம் 90 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள் .வைணவ தாசன் எங்கே என்று கேட்க அவர் தயங்கி அவர் மாற்றிக் கொண்டார் .
அவர்களை துன்புறுத்துகிறார்கள் ,நான் எப்படியோ இந்த செய்தியை சொல்ல தப்பித்து வந்து விட்டேன் என்று அழுதார் .மற்றவர்கள் இந்த அந்தணருடைய பேச்சைக் கேட்டு எப்படி செல்வது என்று எதிர்த்தனர்.
மன்னர் அவர் பேச்சைக் கேட்டு திடம் ஆனார் .இனிமேல் தாமதம் தேவை இல்லை துணிச்சலுடன் இறங்குவோம். ஆற்றங்கரையில், ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து படைகளும் ஆற்றில் இறங்கியது. மன்னருக்கு எங்கிருந்து வீரம் வந்ததோ தெரியவில்லை வேகமாக செல்ல படைகள் முன்னேறியது. அங்கே அந்தணர்களையும் மிகவும் துன்புறுத்தி இருந்தார்கள் அதைக் கண்டு வெறி பிடித்தது போல் ராஜேந்திரன் போரிட்டான் .படைகள் வேகமாக முன்னேறி சென்று அங்கிருப்பவர்களை அழித்தது. வைணவ தாசனை பார்த்து அனைவரும் மனம் கலங்கினர். சந்தன மரக்கட்டையில் அவருடைய உடல் எடுத்து வரப்பட்டது.
தஞ்சையில் கருமார்கள் பலர் போருக்கு சென்றிருந்ததால், அவர்களுக்கு வேண்டிய வீட்டை தொண்டை நாட்டு அந்தணர்கள் கட்டிக்கொடுக்க முடிவெடுத்தனர்.
நன்றி.
ஐந்தாம் பாகம் முடிவு பெற்றது .மீண்டும் ஆறாம் பாகத்தில் சந்திப்போம்....
Click here for Udayar audio book part 5:2👇










Hi,Vidhya super
ReplyDeleteThank you Amma 😊
ReplyDelete