*முகமூடி *
சில நேரங்களில்...
*சில உறவுகள் உதிர்த்த
வார்த்தைகளை...
ஜீரணிக்கவோ மறக்கவோ-
முடியாதபோது..!!..
*இலவசம் தானே என..
வாய்க்கு வந்த விமர்சனங்கள்..
அழையா விருந்தாளியாய்
நம்முள் நுழையும்போது...!!..
*கேட்காமலே நம்மை
தராசில் நிறுத்தி-
கீழே தள்ளும்போது...!!...
கோபம்.. மனஉளைச்சல்..
எரிச்சல்.. என எந்த -
உணர்ச்சிகளையும்..
வெளிக் கொட்டாமல்...
மண்ணுக்குள் விழும்-
மழைத் துளிப்போல்..
குளியலில் கரையும்
கண்ணீர் துளியாய்..
மன பாரம்- இறக்கி வைத்து விட்டு !!..
மௌனம் எனும் * முகமூடி* அணிந்து ..
புன்னகை எனும் பூநகை
அணிந்தால் தான்..
சில உறவுகளில்-
விரிசல் விழாது...
வாழ்க்கை யதார்த்தமாய்..
பயணிக்க எத்தனிக்கிறது...!!...
சாந்தியோடு...!!!...


அருமையான முகமூடி👌ஆழமான, அழகான மேற்கோள்கள்👏👏
ReplyDeleteThanks dear
Deleteஉண்மையான வார்த்தைகள் கிருத்திகா, மௌனமே பல நேரங்களில் நம் காவல்....
ReplyDelete