Sunday, December 20, 2020

சிந்தனைக்குரிய பகுதி "முகமூடி" by Kiruthika

 


*முகமூடி *


சில நேரங்களில்...


*சில உறவுகள் உதிர்த்த

வார்த்தைகளை...

ஜீரணிக்கவோ மறக்கவோ-

முடியாதபோது..!!..

*இலவசம் தானே என..

வாய்க்கு வந்த விமர்சனங்கள்..

அழையா விருந்தாளியாய் 

நம்முள் நுழையும்போது...!!..

*கேட்காமலே நம்மை 

தராசில் நிறுத்தி-

கீழே தள்ளும்போது...!!...

கோபம்.. மனஉளைச்சல்..

எரிச்சல்.. என எந்த -

உணர்ச்சிகளையும்..

வெளிக் கொட்டாமல்...

மண்ணுக்குள் விழும்-

மழைத் துளிப்போல்..

குளியலில் கரையும்

கண்ணீர் துளியாய்..

மன பாரம்- இறக்கி வைத்து விட்டு !!..

மௌனம் எனும் * முகமூடி* அணிந்து ..

புன்னகை எனும் பூநகை

அணிந்தால் தான்..

சில உறவுகளில்-

விரிசல் விழாது...

வாழ்க்கை யதார்த்தமாய்..

பயணிக்க எத்தனிக்கிறது...!!...

சாந்தியோடு...!!!...



3 comments:

  1. அருமையான முகமூடி👌ஆழமான, அழகான மேற்கோள்கள்👏👏

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தைகள் கிருத்திகா, மௌனமே பல நேரங்களில் நம் காவல்....

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...