Sunday, April 18, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"வானவில்" by Vidhya Nivash

 


வண்ண வண்ண வானவிலே கண்சிமிட்டும் 

நேரத்திலேயே வட்டமிட்டு போவதென்ன!

சொர்க்கம் என்று சொல்வோர் உண்டு நீ தான் 

அதன் வாயில் கதவோ!

யார் வந்து வண்ணம் தீட்டினார்

சொல்லி செல்லு நானும் தீட்ட!

எட்டி எட்டி உன்னை தொட எந்த ஏணி 

கொண்டுவர?

வேண்டாம்! வேண்டாம்! ஓடிடாதே...

அண்ணாந்து பார்ப்பதே எனக்கு போதும்

வந்த சேதி சொல்லி போவேன்!

வேண்டாம் !வேண்டாம்! நில்லு தாயே..

ஒரே ஒரு புகைப்படம் எடுப்பேன்...

நன்றி! நன்றி! வாய்ப்பு தந்ததற்கு

மீண்டும் மீண்டும் அந்த வாய்ப்பை தாவேன்!!!


( 2014 ல் ஜகார்த்தாவில் எடுத்தது)


7 comments:

  1. அருமை. அள்ளி அள்ளி தந்த வானம் வானவில்

    ReplyDelete
  2. இது நல்ல பாட்டு போல் இருக்கு.... சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. உண்மை,மிக்க நன்றி😊

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...