Friday, August 29, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 வயிற்று பசியாற்ற தலையில் ஓர் கனம் 

கனம் மிகுந்ததால் இடப்பட்ட ஓட்டை

அல்ல மூட்டையில்

பறவைகளும் பசியாறவே


தேடி தேடி உழைத்ததில் கிடைத்தது

தானியம் கூலியாக

அதை சமைத்து சாப்பிடும் முன்

முந்தியது பறவைகள்

கிடைத்ததை விட

கொடுப்பதில் ஊர் சுகம் உண்டு

- Veena 

சித்திரமாக அன்பை பரிமாற

 நினைத்த ஒவியருக்கு முதல்

 வணக்கம்!

வீட்டிற்கு செல்லும் முன் என்ன

 அவசரம்,அதற்குள் எங்கு

 விதைக்க போகிறீர், பசி

 ஆற்றிய பின் நல்ல விளை

 நிலத்தில் போடுங்க,

 இல்லையேல் கருகிவிடும்.

- Vidhya 

Thursday, August 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 உழைப்பின் அடையாளம்

தற்போது வெறுமையாய்

இயந்திரத்தின் வரவால்

மண் மேவிய குளம்புகள் 

இளைப்பாறுகிறது 

கொட்டகையில்

மனிதனுக்கு மனிதன் எதிரியல்ல

அவன் சிந்தனையும் தான்


 மனைவி, பிள்ளை குட்டிகளை

காப்பாற்ற வேண்டிய கடமை

இல்லையென்றாலும்

தன் பிறவிக்காக

அயராது உழைக்கும் மாடுகள்

வேண்டுவது யாது?

எங்களையும் வாழ விடுங்கள்


இதன் பொருள் தான் என்ன?


அடிமையாய் நடத்த வேண்டாம், அதே சமயம்

எங்களை உழைப்பதிலிருந்து

 விடை கொடுத்து மாற்றவும் வேண்டாம்

- Veena 

வீட்டின் செல்லப்பிள்ளைகள்

உத்தரவிற்கு காத்திருக்க, கால்

 பதித்த இடம் எல்லாம் பொன்

 விளைய காத்திருக்க , மண்ணை

 பக்குவப்படுத்த விண்

 காத்திருக்க , இனத்தை பெருக்க

 மண்புழுக்கள் காத்திருக்க,

 விருந்தாளியாக வருவோரை

 பாம்புகள் வேட்டையாட

 காத்திருக்க , வியர்வை குடித்த

 பயிரை வாங்க முதலாளி

 காத்திருக்க, கடைசியில்

 மிஞ்சியது கஞ்சிக்கு போக,

 எஞ்சிய தவுடே இவர்களுக்காக 

 காத்திருக்கும்.

- Vidhya 

 

Wednesday, August 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



மனங்கள் காதல் தீயால் பற்றிக்கொள்ள

இனங்கள் கொண்டு அவர்களை விலக்கி நிற்க

பற்றிய மனங்களின் உயிர்கள்

இங்கே தீயால் பற்ற வைக்கப்பட்டன


மனித இதயத்தை தாங்கும் கரங்கள்

பின் அக்னியின் வசம் 

ஒப்படைப்பதும் ஏனோ?


 கரங்கள் தாங்குவது விளக்கல்ல, இதயம்

விளக்கு அணையும் நேரத்திற்குள்

திருமண பந்தம் என்னும் உறவு

முடிந்து விடுவதும் ஏனோ?


 காட்சிக்காக வைக்கப்பட்ட இதயம் அல்ல இது

நடைமுறையில் சகிப்புத்தன்மை

குறைந்ததால் எரிந்த இதயம் இது

- Veena 

தீயாக எரியும் இதயம் உந்தன்

 கரத்தில் பட்டவுடன், நெருப்பு

 துகள்கள் தங்கமாக மின்னுதே,

ஒவ்வொரு துகளிலும் பொதிந்த

 இதயம் ,காற்றில் மிதக்குதே...

- Vidhya 


Tuesday, August 26, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 தாகம் தீர்த்தது இங்கே

 தண்ணீரா இல்லை நண்பனா?


 ஒருவன் கொடுக்க ஊற்றாய்

ஒருவன் அடிக்க நண்பனாய்

ஒருவன் குடிக்க தாகம் உள்ளவனாய் 

ஒருவன் நிலைக்க மரமாய்

தாகம் தீர்த்த கையோடு 

பசுமையும் வளர்ந்தது

ஊற்றும் பெருகியது

எவர் செயலாலே இவை

தாகம் கொண்டதாலா ?

ஊற்று கொண்டதாலா ?

அடிக்குழாயை வைத்ததாலா?

அதை இயக்க வைத்ததாலா?

இது ஏதும் இல்லை

மாசற்ற நட்பே உண்மை!

- Veena 


ஆனந்தத்தின் எல்லை..

துள்ளுற மனசு கண்ணில்

 தெரியுது, கள்ளம் கபடமற்ற

 துள்ளல் ,அந்த பம்பை அடிக்கும்

 போது எல்லையில்லா ஆனந்தம்,

அடிப்பம்பின் சப்தமே அடிக்க

 மீண்டும் தூண்டும்!

- Vidhya 


Saturday, August 23, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஓர் வினாவிற்கு பல விடைகள் உண்டு

வாழ்வில் வளைந்து போக

சொல்லியே நம்மை

உணர்த்துகிறது இந்த

கேள்விக்குறியும் தானுமே வளைந்து


 கேள்விக்குறியில் வளைவும் உண்டு

அதனடியில் ஓர் புள்ளியும் உண்டு

எனில் எல்லா கேள்விகளுக்கும் 

விடையும் உண்டு முற்றுப்புள்ளியாய்


 விடை தெரியா வினாக்கள் பல

அதற்கு 

விடை தேடி சென்றால்

விலை மதிப்பில்லா நேரம் வீணாகும்

வினா நம்மை சீர்த்திருத்தவே

அன்றி 

முற்றுப்புள்ளி அல்ல அது

வினாக்களுக்கு ஒருசில நேரம்

பல விடைகளும் கிடைக்கும்

அவரவர் சூழ்நிலை பொறுத்து


 வினவுவதில் தெளிவு வேண்டும்

விடையளிப்பதில் அதை விட தெளிவு வேண்டும்

- Veena 

கேள்விகளின் பிறப்பிடமே சிந்தனையின் ஆரம்பம்..

கேள்விகளை முடக்கினால் எதற்கும் தலையாட்டும் மூடர் கூட்டத்தில் சேருவோம்..

கேள்விகளை வரவேற்போம் பதில் தெரியாவிட்டாலும் தானாக பிறக்கும்,இல்லையேல் ஒரு விடையற்ற செயல் தானாக முடங்கும்!

அர்த்தமற்ற கேள்வி ஒலிக்கும் இடத்தை கூர்ந்து நோக்கினால் ஒரு வழி பிறக்கும்..

விடை தெரியாமல் அலைவதைவிட உரிய இடத்தில் கேட்பதே மேல்! 

- Vidhya 



Thursday, August 21, 2025

புன்னகை by Winmeengal

 


Always Smile and keep others smiling

- Ramalakshmi 


சிரிப்பு என்றும் சிறப்பு


இதழ்களின் திறப்பு

உள்ளவரை


இல்லை அங்கே வெறுப்பு


சிரிப்பும் நமக்கு ஓர் குறிப்பு


எண்ண ஓட்டத்தின் அழகான அறிவிப்பு


எதிர்ப்பார்ப்பு இல்லா 

தாயின் அணைப்பு


நமக்கு என்றுமே அது அரவணைப்பு


திறவாமல் உணர்த்தும் நகைப்பும் ஓர் படைப்பு 


திறப்பதால் காட்டும் பற்களின் அமைப்பு


இதன் மாற்றத்தால் வருவது சலிப்பு


சிக்கல் தீர்ப்பவை நகைப்பு


சூழ்நிலையை மாற்றும் ஓர் களிப்பு 


அதனால்

சிரிப்பு என்றும் சிறப்பு

- Veena 


இப்பூவுலகில் ஒவ்வொரு உயிரும் சிந்தும் புன்னகை கொண்டு எப்பேர்ப்பட்ட கடனையும் அடைக்கலாம்!

 மழலை, மலர்களின் புன்னகை யாரையும் எளிதில் அடக்கிவிடும்,

அடங்கா புன்னகை கொண்ட கடலும் ,வானும் யாவரையும் மிரட்டும்,

மரங்களின் புன்னகை புரியாத மனிதனுக்கு  மிருகங்களின் புன்னகை குழந்தையாக்கும்,

எவ்விடமும் ஒரு புன்னகை மொழி போதும்  வரவேற்க, அதை கொண்டு அன்பான உறவை தாங்கி செல்வோம்!

Vidhya 

_*புன்னகை*_

*புன்னகை* ‍ மகிழ்ச்சியை மலர வைக்கும்; 

உறவுகளை மனமுவந்து வளர வைக்கும்;

மனிதத்திற்கு மட்டுமே கிடைத்த வரம்‍ ‍ அதை 

மானுடம் தரமாக உதிர்த்தால் தரம்!

சிரிப்பின் சிறப்பை உணர்ந்தால் ஏற்றம்!

புன்னகை என்ன விலை?

காசா பணமா இலவசம் தானே?!

ஸ்மைல் ப்ளீஸ்!!

- Akhiladevi 

Monday, August 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



கூர் முனை கொண்ட எதுவும் தகர்க்கும் எதையும்

எழுதும் கருத்தில் உள்ள ஆழம்
எழுது பொருளை வைத்து அல்ல
எதுபவரின் ஆளுமையை பொறுத்தே

 எழுதுகோல் கூர்மை பெறுவது 
அதன் சில பாகங்களின் தியாகத்தாலே

ஓர் கருத்தின் வெளிப்பாட்டிற்காக
எழுத்து கொண்டது தான் விடுதலை
எழுதுகோல் வாயிலாக

ஏர் முனையின் 
கூர் முனை போலே
ஓர் முனை
பார் முழுதும் திரும்பி
பார் என்றது
கார்மேகம் போல் வண்ணம்
சீர்படுத்த வந்தது கருத்தாலே
ஈர்த்ததும் எழுத்தாலே
ஊர் முழுக்க பேச வைக்கும் திறமை 
சோர்வடையா 
தூர்வாரப்பட்ட கிணறு போலே
ஊற்றெடுக்கும்
தேர் போல் பவனி வந்து
நீரோட்டம் போல் வளைந்து
நேர்பட பேசியும்
சீர் கொள்ள செய்யும்
போர் முனை வாள் போலே வெற்றி கொண்டு
மார் தட்டி ஆமோதிக்க செய்யும்
தேர்தல் களம் காணா 
தனியொருவனின் ஆளுமை 
இங்கே எப்போதும்

- Veena 

கத்தியை விட கூர்மையான முனை அதில் வடிக்கும் வார்த்தைகள் உண்டாக்கும் வடு எதையும் கொண்டு அழிக்க முடியாத ஆயுதம் !

கல்வி எனும் வேர் பல கோட்டையை தாண்டி ,பல சாக்கடையை மிதித்து, பீறிட்டு வரும் விருட்சம், அதில் ஊஞ்சல் இட்டு விளையாட வாருங்க, வேலி இட அல்ல!

- Vidhya 


Sunday, August 17, 2025

கண்ணாடி by Winmeengal

 


மனவலிகளை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடி, காணும் நபருக்கு மட்டுமே


 ஏன்?

எப்படி?

எதற்கு?

யார்?

யாரால்?

யாருக்கு?

என்ற கேள்விகளை

கேட்டும் பதில்

கொடுக்காத கள்வன் இவன்

அவனை கடிந்தாலும் 

இழப்பு நமக்கே!

ஒன்று நம்மால் உதிர்ந்த ரூபமாய் 

இல்லை 

நம் மனதை

உதிர வைக்கும் ரூபமாய்


பதிவு செய்ய முடியாத காட்சிகள்

அரங்கேறும் இவன் முன் மட்டும்


 இவனை நிழல் என்று சொல்வதா?

காட்சி என்று சொல்வதா?

இரண்டும் நம் பிரதிபலிப்பே!

நிழல் என்றால் பின் தொடர வேண்டும் 

காட்சி என்றால் நிலைக்க வேண்டும்


கண்ணாடி


மொழியின் குரல் மட்டும் மௌனம்

இவன் முன்னே

நம் நிஜத்தின் பிம்பமாய்

இருந்தாலும்

அவரவர் வனப்பு

இவன் முன்னே 

சொல்லும் மிடுக்கு

பாகுபாடு கொள்ளாது

இவன் தேவை

எவர் இல்லத்திலும்

உள்ளத்திலும்

நிஜத்திலும்

எதிர்மறை கிடையாது

இவனிடம்

ஒரு பக்கம் மட்டும்

காண முடிவதால்

மனதின் கண்ணாடி முகம்

முகத்தின் கண்ணாடி இவனே!

பிறர் நம்மை காண்கையில்

தெளிவு பிறக்க இவன்

வேண்டும் நித்தமும்

பல தடவை காண

நம் வாழ்வை சீர்படுத்த

இவனும் காரணமோ?


-Veena


கண்ணாடி


உன்னைக் காணாமல் செல்வாரில்லை!

நின்னைப் பாராத பாவையில்லை!

உன்னைக் காணாத நாளில்லை!

நீ இல்லாத வீடில்லை, கடையில்லை!

கண்ணாடி உன் முன்னாடி நாள்தோறும், 

தன் வனப்பைக் கூட்டத் தமக்கை தேடினாள்; 

சலிப்பின்றி சதா காலமும் சகோதரன் நாடினான்;

பொட்டிட்டு பெருமிதமடைய அம்மா அனுகினாள்;

மழமவவென மழிக்க அப்பா உற்று நோக்கினார்;

விழப்போகும் பல்லின் ஆழத்தை தம்பி தடவினான்;

நரைமுடியை மறைக்க மறக்காமல் அத்தை அளந்தார்;

தொப்பையை மறைக்க மாமா பல கோணங்களில் திரும்பினார்.


சுவற்றில் ஒய்யாரமாய், கைப்பையில் ஒரு ஓரமாய்‍

எத்தனை உருவங்கள் வரினும்,

எத்தனை வடிவங்கள் பெறினும்,

எத்தனை தேவைகள் தரினும்,

எத்தனை தடவை நாடினும்,

எத்தனை துண்டுகள் ஆயினும்,

உன் கடன் பணி செய்தலே‍ எந்நேரமும்;எவராயினும்; எதுவாயினும்!


அனைத்தும் உனக்கு சரி சமமே!

அனைவரும் பெறின் ந‌மக்கு வரமே!

- Akhiladevi


 காண்பவை யாவையும் அழகே உன்னில்,

சில நேரம் சலித்துக்கொள்வார் உன் முன்,

சில நேரம் அழுவார்,சிரிப்பார்,நெளிவார், பல முகங்கள் கொண்டாலும் ஒரு முகம் மட்டுமே நிஜம்,எண்ணத்தில் தோன்றும் நிழலை எவ்வளவு அலங்கரித்தாலும், நிஜத்தை காட்டும் கண்ணாடியை கோபித்து என்ன பயன்!

- Vidhya 

படமும் கருத்தும் by Veena Shankar

 


புல்லாங்குழல் ஊதும் கண்ணன் இங்கே

ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறான்

பெண்ணின் காதோடு


மாயக் கண்ணன் மாயமாகி போனான்

தங்கத்தின் விலை ஏற்றத்தாலே

இருந்தாலும் இடம் கிடைத்தது

பெண்ணின் காதோரத்தில் 

அவள் கொண்ட காதலால்

கண்ணனிடம் மட்டுமல்ல

தங்கத்தின் ஈர்ப்பாலும்


 மங்கையின் கூந்தல் அலையில்

வெளிப்பட்ட காற்றால்

ஆடின இங்கே அவள் தோடு

கண்ணனும் மயங்கி லயித்து எடுத்தான்

அவன் குழலை 

அவன் பக்கத்தில்

இருப்பது தானென்று

நினைத்தாள் மங்கையும்

அவன் மீது கொண்ட காதலால் 

ஏமாற்றம் யாருக்கு?

மங்கையின் கூந்தலை 

வளியாய் நினைத்த கண்ணனுக்கா ? 

அவன் மெய் என நம்பிய மங்கைக்கா?


 காதில் ஓர் தங்கத்தோடு ஓர் தங்கத் தோடு

Thursday, August 14, 2025

படமும் கருத்தும் by Kiruthika amd and Veena Shankar

 


ஏதேதோ செய்ய நினைத்து கொண்டு இருக்கையில்...

வேறொன்று

குறுக்கே வர...

இதை முதலில் 

செய்து விட்டு ..

அதை பிறகு செய்யலாம் என்று நினைக்கையில்...

இதேபோல் ..

நேற்று பின்னுக்கு தள்ளிய வேலை முன்னுக்கு வர..!..

இப்போது -

நான் 

இன்றைய இதை செய்யவா...

இல்லை -

நேற்றைய

அதை செய்யவா..

என்று என் மண்டை ..

சூடேற ...

கடைசியில்..

தலை வலி..

வழியில்..

இடைமறிக்க...

அட போ...

இதை அதை என 

எதையும்..

நாளையே..

சேர்த்து செய்து கொள்ளலாம்...

என 

குப்புற படுத்து

உறங்கி கொண்டு 

இருக்கிறது ..

என் சின்ன 

மூளை...!..

இருந்தும்..

பாருங்கள்..

உறக்கத்தில் கூட

இதை மட்டும்

விடாமல் 

எழுதி

கொண்டு இருக்கிறது என் மனம்...

ஏனெனில்..

இது வேலை அல்ல ..

ஆவல்..

ஆக்கம்...

ஆசை...!!....

Kiruthika 

என்றும் காக்க வேண்டும் அமைதி 


இயலாமையில் அடைவது அசதி


குற்றத்தை வளர்ப்பதால் எப்போதும் அவதி


ஆக்கத்தின் முடிவே இறுதி


மனதில் கொள்ள வேண்டும் உறுதி


வெற்றி பெற வேண்டும் உண்மை தன்மை கருதி


குறிக்கோள் அடையும் வரை அடங்க கூடாதது குருதி


வாழ்வில் தவறி விழும் இடம் யாவும் சகதி


இசையில் லயிக்க தேவை சுருதி


வேண்டிய இடத்தில் வளர்ப்பது தகுதி


அழகு என்பது அறிவின் ஓர் பகுதி


அடுத்தவர் குற்றத்தை ஏற்க வேண்டுவது மறதி


அறிவோடு அழகு என்பதே யுவதி

- Veena 

படமும் கருத்தும் by Winmeengal



Solitude -அழகிய தனிமை!

Wings exist to set her free..

Wings exist to let her go..

Wings exist to prove power..

Yet immersed in SOLITUDE✨

-Akhila 

எனக்கென எதுவும் தேவையில்லை இந்த சிறகுகள் பாரமாக மாறாத வரை..

- Vidhya 


  Veena Shankar: 

சிறகுகள் முளைத்த பின் காலத்தால் அது அழியும் வரை வானமே உலகம்


 சிறகுகள் முளைத்த பின்னும்

சிறையில் முடங்குவது ஏன்?

சிறகுகள் உனக்கு பாரமில்லை அது வளர்ந்தாலும்

வாழ்வில் எதிர்நீச்சல் போடும்

பெண்ணின் பிம்பமாய்

நீ வானை வசமாக்கு


ஏதும் விரிய விரியவே அதன் ஆழம் தெரியும்

ஏதும் விடியவே இருள் விலக வேண்டும் 

படமும் கருத்தும் அப்படியே!


 என்றும் காக்க வேண்டும் அமைதி 


இயலாமையில் அடைவது அசதி


குற்றத்தை வளர்ப்பதால் எப்போதும் அவதி


ஆக்கத்தின் முடிவே இறுதி


மனதில் கொள்ள வேண்டும் உறுதி


வெற்றி பெற வேண்டும் உண்மை தன்மை கருதி


குறிக்கோள் அடையும் வரை அடங்க கூடாதது குருதி


வாழ்வில் தவறி விழும் இடம் யாவும் சகதி


இசையில் லயிக்க தேவை சுருதி


வேண்டிய இடத்தில் வளர்ப்பது தகுதி


அழகு என்பது அறிவின் ஓர் பகுதி


அடுத்தவர் குற்றத்தை ஏற்க வேண்டுவது மறதி


அறிவோடு அழகு என்பதே யுவதி

Wednesday, August 13, 2025

எவரும் இழிவல்ல by Veena Shankar



 எவரும் இழிவல்ல 


ஒரு நாள் ஜெகன் பஜாருக்கு செல்ல வேண்டி செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினான். அப்போது அவன் காலுக்கும் செருப்புக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் வந்தது. செருப்பு சொன்னதாம் நான் தான் பெரியவன் என்று. கால் சொன்னதாம் நான் தான் பெரியவன் என்று. 


"இல்லை. நான் இல்லையென்றால் நீ நடக்க முடியாது" என்று செருப்பு தன் வாதத்தை துவக்க, "இல்லை நீ இல்லாமல் நான் வீட்டினுள் நடந்து கொண்டு தானே இருக்கிறேன். அதனால் நீ இல்லாமலும் என்னால் இருக்க முடியும்" என்று தர்க்கத்தை தொடர்ந்தது கால். "வீட்டினுள் என் தேவை இல்லையென்றாலும் வெளியில் போகும் போது நான் தான் உன்னை தாங்கி கொண்டு நடக்கிறேன். அதுவுமில்லாமல் சிலர் வீட்டில் என்னை வீட்டினுள் பயன்படுத்துகிறார்கள். எனவே நானே பெரியவன்" என்றது செருப்பு. உடனே கால், " திமிரில் ஆடாதே! 

இப்போ பார்! உன்னை நான் என்ன செய்கிறேன் என்று ?" என்று சொல்லியவாறே ஓர் கல்லில் செருப்பை முட்ட வைக்க, செருப்பின் வளையம் அறுந்து போக, "ச்சீ! என்று புலம்பிய ஜெகன் செருப்பை கொஞ்சம் சரி செய்து நடக்க முற்பட்டான்.


 ஒரு சில மணித்துளிகளில் அவன் கால் இடறி விழ, அவன் கால் கட்டை விரல் பதம் பார்க்கப்பட்டது. "ஐயோ! " என்று புலம்பியவன் செருப்பை எடுத்து பார்க்க, முற்றிலும் அது சேதமாகியிருந்தது .


 இதை பார்த்த கால் , செருப்பை பார்த்து ஏளன சிரிப்பு உதிர்த்தது தன் கால் அடிப்பட்டதை மறந்து.


" என்னை பார்த்து நீ மகிழ்ச்சி கொள்ளாதே! அடிபட்டதில் உன் காலில் ரத்தம் வருவதை கூட கவனிக்காமல் இருக்கிறாய் " என்று செருப்பு சொல்ல, அதற்குள் செருப்பை முன் பின் பார்த்த ஜெகன் இனி இந்த செருப்பால் பிரோஜனம் இல்லை என்று நினைத்து இரு செருப்புகளையும் குப்பைத்தொட்டியில் வீசினான். 


"பார்த்தாயா! திமிராக பேசிய நீ இப்போது கிடப்பது குப்பை தொட்டியில்" என்று சொல்லிக் கொண்டே சென்றது கால். செய்வதறியாது இருந்த செருப்பும் மௌனம் காத்தது.


அடி மேல் அடி வைத்து எப்படியோ ஒரு வழியாக ஜெகன் வீடு வந்து சேர்ந்தான். அடிபட்ட காலுக்கு மருந்து போட்டு மாத்திரையையும் விழுங்கினான். 

மருந்து போட்டதால் விரைவில் குணமாகி விடுவேன் என்ற மிதப்பில் இருந்த காலுக்கு தற்போது ஓய்வு தேவைப்பட, ஜெகன் கட்டிலில் படுத்தான். மருந்து உண்டதால் வலி தெரியாமல் கண் அயர்ந்தான். வீட்டின் முன் யாரோ "தீ ! தீ! " என குரல் கொடுக்க , பதட்டத்துடன் எழுந்த ஜெகன் மறுபடியும் கட்டிலில் காலை இடித்துக் கொள்ள காலில் ரணம் பன்மடங்கு கூடியது. வலி தாங்க முடியாமல் கட்டிலில் மீண்டும் படுத்து துவண்டான் ஜெகன். அவன் அழும் சத்தம் கேட்டு வந்த அவன் மனைவி மருத்துவமனைக்கு அவனை அழைத்து செல்ல, வழியில் குப்பையில் கிடந்த செருப்பு, "நானாவது பரவாயில்லை. ரத்தம் இல்லாததால் அவதிப்படவில்லை. ஆனால் நீ பாரேன்" என்று செருப்பு சொல்ல வந்ததை முழுமையாக சொல்லாமல் இருந்தது. ஜெகனின் கால் நொண்டி அடித்து கொண்டு கூட செல்ல முடியாமல் இருவர் தாங்க மருத்துவமனையின் உள்ளே சென்றான். நீரிழிவு நோயால் அவதிப்பட்டவனுக்கு மட்டுமே தெரியும் அந்த வேதனை. காலில் புண், காயம் கொள்ளாமல் இருப்பதே நல்லது. 


பிறர் செயல் கண்டு ஏளனம் செய்யாமல் இருப்பது நன்று. "இன்று உனக்கு நாளை எனக்கு" என்பது எப்போதும் எவருக்கும் பொருந்தும். எவரும் இழுந்தவர்கள் அல்லர் இவ்வுலகில்.

Monday, August 11, 2025

படமும் கருத்தும் by Kiruthika and Veena

 


ஒற்றை செடியில்

 ஒற்றை மலர் 

கற்றது என்ன

கற்பது எங்கே

ஏற்றைக்கும் காதல் 

ஏற்பது சிறப்பு 

கற்பனை விரிய 

கற்சிலை போலே

உளி தாங்கி

உள்ளத்தில் நிற்க

விற்பனை இல்லை

விற்பவர் உத்தியிலும்

விற்ற பொருளும்

வெற்றிடம் கொள்ளும்

மற்றது யாவும்

மாற்றத்தக்கது என்றும்

உட்புகுந்த காதல்

வெளிக்கொணர தவிக்கும்

போதும், போதும்

என்று சொல்லா

அழியா

- Veena 

நாம் யார் ..நம் விருப்பம் என்ன..எண்ணம் என்ன..பார்வை என்ன..என்பது நமக்கு மட்டுமே தெரியும்...!..

சில சமயங்களில் 

பிறர் நம் மேல் கொண்டிருக்கும் எந்த ஒரு தவறான 

அனுமானதிற்கும் ..

நாம் பொறுப்பல்ல...

நாம் ஒன்றும் செய்ய இயலாது...

அவரவர் பார்வைக்கு அவரவரே பொறுப்பு ...!..


காதல் 

கொண்டு காத்து இருந்தேன்..

உனக்கு முன்னே 

இதோ...

கவிதை வந்து விட்டது...!..

நீ -

எப்போது ...

என்னை

புரிந்து...

வருவாயோ...!.. காதல்

மனத்தின் கண்

- Kiruthika 

மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை


காய்கறி வாங்கி வர கடைத்தெருவிற்கு கிளம்பினாள் முனியம்மா. ஒருவழியாக அனைத்தையும் வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்த அவள் , சற்றே இளைப்பாற கோயில் வாசற்படி பக்கம் அமர்ந்தாள். அப்போது மணி ஐந்தை தொட்ட நிலையில் ஒருவர் பின் ஒருவராக ஒரு கூட்டம் வாசற்படியில் அமர்ந்த போது முனியம்மாளையம் ஏற இறங்க பார்த்தது. பின் அவர்கள் முனியம்மாளைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருக்க, அப்போது கோயிலிலிருந்து ஒரு பக்தர் கூட்டம் வெளியே வர, முனியம்மாளின் கையில் வந்தவர் ஒருவர் வலுக்கட்டாயமாக பத்து ரூபாய் நோட்டை திணித்து சென்றார். ஒன்றும் அறியாதவளாய் அவள் விழிக்க,அதுவரை அவளை பார்த்து முறைத்த யாசகர் கூட்டம் பொங்கி எழுந்து, முனியம்மாளை யார் எவர் என விசாரிக்க, அதற்குள் முனியம்மாளும் நடந்ததை உணர்ந்து விருட்டென்று எழுந்தாள். மேலும் தன்னை விசாரித்த அந்த கூட்டத்திடம் தான் இளைப்பாற உட்கார்ந்ததாகவும் அவர்களுக்கு போட்டியாக வரவில்லை என்பதை உணர்த்தி தன் கூடையுடன் நடையைக் கட்டினாள் முனியம்மா.

Saturday, August 9, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


இளங்காளைகளைக் சுண்டி இழுக்கும் பார்வையா? 

இல்லை 

அவள் மேல் பார்வையும் கலையாமல் செல்லும் காளைகளா?

வில் போல் வளையும் புருவங்களா? 

இல்லை

புருவங்களும் வில் போல் கூர்மை ஆனதா?

புன்னகைப்பது விழிகளா? 

இல்லை 

பிரிந்த உதடுகளா?

கவினுற அழைப்பது உதடுகளா ? 

இல்லை  

மண்டியிட வைக்கும் விழிகளா? 

நாசிகள் இருப்பதும் சுவாசிக்க மட்டுமா? இல்லை 

காண்போரின் திணறலுக்கு மருந்தா?

இமைகள் மூடினால் காட்சிக்கு வேலியா?

 இல்லை

வேலியே விழிக்கு அழகை கூட்டவா?

இரவில் வரும் வெண்மதியா? 

இல்லை

பூமியின் வெண்மதியும் இவளா? 

கனவில் வரும் காட்சியா? இல்லை 

காட்சிகள் எல்லாம் கனவாகும் இவளா?

Tuesday, August 5, 2025

மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை


கணவன் தீடீரென நோய்வாய்பட , அவன் கஷ்டப்படுவதைப் பார்த்த மனைவி, கோயிலுக்கு வந்து கடவுளைப் பார்த்து "உனக்கு கண் இல்லையா? ஏன் அவரை இப்படி சோதிக்கிறாய்? அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்து விடு. ஏன் நானும் கூட தவறு செய்திருக்கலாம். அதையு ம் மன்னித்து விடு" என்று உரத்த குரலில் இறைவனை கேட்டுக் கொண்டிருக்க, அங்கே அமர்ந்திருந்த அடியார் ஒருவர் அவள் வேண்டியதை பார்த்து அவளிடம் " நீ உன் கணவன் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறாய். ஆனால் அதில் தவறு இருப்பதாக நான் நினைவிறேன், உன் கணவன் தவறு செய்தால் மன்னிக்குமாறு சொல்லும் நீ " நான் கூட தவறு செய்திருக்கலாம்" என்ற சொல் நெருடலாக இருக்கிறது, தவறு செய்யாத மனிதர் இல்லை, அப்படியிருக்க நீ நான் கூட தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் என்று கூறியதால் அங்கே உன் அகம்பாவம் வெளிப்பட்டு நிற்கிறது. " என்று கூறி அவள் பதிலுக்கு காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தார். தன் தவறை மனைவியும் உணர்ந்து தான் முன்பு சொல்லியதை திருத்தி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.


நம்மை அறியாமல் நாம் செய்யும் செயலும் பேச்சும் நமக்கு பின்னடைவை தரும் என்பது உண்மை.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...