Thursday, August 14, 2025

படமும் கருத்தும் by Kiruthika amd and Veena Shankar

 


ஏதேதோ செய்ய நினைத்து கொண்டு இருக்கையில்...

வேறொன்று

குறுக்கே வர...

இதை முதலில் 

செய்து விட்டு ..

அதை பிறகு செய்யலாம் என்று நினைக்கையில்...

இதேபோல் ..

நேற்று பின்னுக்கு தள்ளிய வேலை முன்னுக்கு வர..!..

இப்போது -

நான் 

இன்றைய இதை செய்யவா...

இல்லை -

நேற்றைய

அதை செய்யவா..

என்று என் மண்டை ..

சூடேற ...

கடைசியில்..

தலை வலி..

வழியில்..

இடைமறிக்க...

அட போ...

இதை அதை என 

எதையும்..

நாளையே..

சேர்த்து செய்து கொள்ளலாம்...

என 

குப்புற படுத்து

உறங்கி கொண்டு 

இருக்கிறது ..

என் சின்ன 

மூளை...!..

இருந்தும்..

பாருங்கள்..

உறக்கத்தில் கூட

இதை மட்டும்

விடாமல் 

எழுதி

கொண்டு இருக்கிறது என் மனம்...

ஏனெனில்..

இது வேலை அல்ல ..

ஆவல்..

ஆக்கம்...

ஆசை...!!....

Kiruthika 

என்றும் காக்க வேண்டும் அமைதி 


இயலாமையில் அடைவது அசதி


குற்றத்தை வளர்ப்பதால் எப்போதும் அவதி


ஆக்கத்தின் முடிவே இறுதி


மனதில் கொள்ள வேண்டும் உறுதி


வெற்றி பெற வேண்டும் உண்மை தன்மை கருதி


குறிக்கோள் அடையும் வரை அடங்க கூடாதது குருதி


வாழ்வில் தவறி விழும் இடம் யாவும் சகதி


இசையில் லயிக்க தேவை சுருதி


வேண்டிய இடத்தில் வளர்ப்பது தகுதி


அழகு என்பது அறிவின் ஓர் பகுதி


அடுத்தவர் குற்றத்தை ஏற்க வேண்டுவது மறதி


அறிவோடு அழகு என்பதே யுவதி

- Veena 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...