அந்தி மாலை வேளை......
அதுவரை சிலையாய் இருந்த இலைகள் அலை அலையாய்.....
அசைந்து கொண்டிருந்தன
மேனியினை மெதுவாய் படரும் குளிர்காற்று......
மெல்ல மெல்ல நாசியினை உணரசெய்யும்
மண்வாசனை....
எனக்குள்.....
ஒரு எதிர்பார்ப்பு
எனக்கு நெருக்கமானவள் என் அருகில் வருவது போல்....
முகம் உயர்த்தி பார்க்கிறேன்...
இதுவரை உணரமுடிந்தவள் உருவாய் என்னை நோக்கி வருவது தெரிகிறது......
பல ஆயிரம் மைல்களை தாண்டி வந்த என் அன்பு தோழி
(மழைத்துளி).......
முத்தம் எனும் எச்சில்துளிகளாய்..என் மேனியை தழுவிக் கொண்டாள்
அவள்கூடவே வந்த ஆயிரமாயிரம் தோழிகளும்(மழைதுளிகளும்)
குட்டையாக என் முன்னே தேங்கி நின்றனர்.....
மனதளவில்
குழந்தையாய்....!
அக்குட்டையிலே
சிறுவயதில் காகித கப்பல்களை விட்ட ஞாபகம்.......
அப்படியே....
கால்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கிணற்றருகில்.....
சென்றன
அங்கேயும் அன்பு தோழிகள் (மழைத்துளிகள்)
ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்து கொண்டிருந்தனர்
மனதளவில்
மீண்டும் குழந்தையாய்....! சுரைகூடு கட்டி கிணற்றில் குதித்த ஞாபகம்........
மீண்டும் சிறுநடைக்குபின்
வழிநெடுகிழும் மரங்களில் அமர்ந்து கொண்டிருக்கும் இருக்கும் அன்பு தோழிகளை(மழைத்துளிகளை) அசைத்து என்மீது விழசெய்தேன்
குழந்தையாய்.....!
குழந்தையாகவே மாறியிருந்த என் நினைவுகள் சுரீரென்ற சூரிய கதிர்களின் வருடல்களால் என் நினைவுக்கு வந்தேன்.......என் அன்பு தோழியும்(மழைத்துளியும்)சிறிது சிறிதாக பிரியாவிடை கொடுத்தால்..... மனதில் கனத்தோடு வீட்டினுள் வந்தால்..... அடுப்பிதிட்டில்
வெண்டையும்,
தக்காளியும்
என்னை பார்த்து சிரித்தனர்
ஏனோ மனதளவில் மீண்டும் குழந்தையாய்.....! குண்டு தக்காளியை அப்பா,அம்மாவாகவும் குட்டி தக்காளியை நானும் அக்காவுமாகவும் மாறி குடும்பம் நடத்திய ஞாபகம்
என் கைகளில் இருந்து நழுவிய தக்காளியினால் மீண்டும் நிகழ்காலம் வந்தேன்
அத்தக்காளியை தேடியபோது என் வீட்டு கண்ணனின் காலடியில் இருந்தது......
எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது
என் மாயவனின் அழகுமுகம் என்னை மீண்டும் குழந்தையாய்.....!
என் தந்தை கட்டிய பெருமாள் கோவிலில்..... சுவற்றில் கண்ணன், கோபியரின் ஓவியமும் உண்டு
யாதுமறியா வயதில் இறைமையை பற்றி ஒன்றும் தெரியாத வயதில்
நான் பெரும்பாலும் இருந்த இடம் அதுவே.....
மாயவன் ஓவியமாய் உள்ளான் என்பதையும் மறந்து என்னுடனே இருப்பதாய்,
என்னுடன் விளையாடுவதுப்போல, என்னுடன் உறங்குவதுப்போல, என்னுடன் உணவருந்துவதுப்போல.......
சதா சர்வ
காலமும் அவனுடனே இருப்பதாய்..... ஒரு குழந்தையாய்......
நான் வாழ்ந்த காரணத்தால்தானோ
இன்றும் இறைசேவையில் என்னை தொடரவைத்திருக்கிறான் என் மாயவன்!
அன்றாட வாழ்க்கையில்....
அரிபரியான வாழ்க்கையில்...
சில நிகழ்வுகள்
நாம் வாழ்ந்த வாழ்க்கையினை... நம்மில் இருக்கும் குழந்தையினை....
பிரசவித்து ஓர் தெவிட்டாத நாட்களை சுவைக்க வைத்து விடுகின்றன......





உங்களுடைய மழைத்தோழி என்னையும் நனைய செய்தாள் 👏👏அருமை,உங்களுடைய பதிவுகளை படித்து ஒரு முறை மீரா படம் பார்த்தேன்,மீண்டும் உணர்கிறேன் மீராவை
ReplyDeleteThanku vidya🙏
ReplyDeleteHatts off aka the lines are amazing ......
ReplyDeleteThanks da💜
ReplyDelete