Tuesday, March 30, 2021
Monday, March 29, 2021
Monday, March 22, 2021
சிந்தனைக்குரிய பகுதி -"உணவு" by Vidhya Nivash
உணவு எது உணவு???
எது ?எது ?உணவு கடுமையான உழைப்பிற்குப் பிறகு , பசித் தூண்டப்பட்டு, நேரம் காலம் பார்க்காமல் கிடைத்த உணவை உடலும் மனமும் விரும்பி உண்ணும் உணர்வைத் தூண்டும் உணவே நம் உடலையும்,மனதையும் வளர்க்கும்..
இதற்கு மாறாக இன்று நம் கண்ணால் தூண்டப்பட்டு ,நாக்கில் எச்சி ஊறி எந்நேரமும் எதைக் கண்டாலும் உண்ணத் தூண்டும் உணவா அல்லது உணர்ச்சி தூண்டிகளா???
சரியான உணவை நாம் உட்கொள்ளும் பொழுது மனமும் உடலும் இணைந்து செயல்படும் நிம்மதியான தூக்கம் வரும், இன்று வரும் துரித உணவுகள் நம் உடலையும் ,மனதையும் என்ன செய்கின்றன???
பசித்து,ரசித்து, ருசித்து உண்ணும் பொழுது நம்மை அறியாமல் கண்ணில் இருந்து நீர் வரும் ,உணவை படைத்தவரை மனம் வாழ்த்தும்!!!
உன்னதமான உணர்வை தரும் உணவு...
அளவிற்கு மிஞ்சி குப்பையில் கொட்டும் உணவு !!!அதற்கே
எங்கோ ஒரு சிறு பிள்ளை கை ஏந்தி கொண்டிருப்பாள் ஒரு ஜான் வயிற்றுப் பசிக்காக...
எண்ணிலடங்கா உணவு விரயத்தை பார்க்கும் பொழுது மனம் கலங்குகிறது ...
Sunday, March 21, 2021
Saturday, March 20, 2021
சிந்தனைக்குரிய பகுதி -"பணம்" by Vidhya Nivash
ஏ ...இராக்காயியி... கருப்பன் வீட்ல இவ்வளவு கூட்டம் காலைல எழுந்து கொல்லைக்கு போயி வயல் பக்கம் போயி வேலைய பாக்காம அம்புட்டு பயலும் அவன் வீட்டுல பலாப்பழத்தை மொய்க்கிற ஈ போல மொய்க்க..
ஐயா அவரு பட்டணத்துக்கு போயிட்டு ஏதோ புதுசா... கொண்டுவந்திருக்கிறார். நாளைக்கு பதினொரு மணிக்கு நல்ல நேரமாம் அந்த நேரத்துல எல்லோருக்கும் காட்டுவதா, சொல்லி இருக்கிறார் .அதுதான் ஊரெல்லாம் ஒரே பேச்சு பேசுறாங்க.. வானம் பார்த்த பூமியை விடவா ??? உங்களுக்கு பெரிய கூத்தாக போச்சு!
ஊரெங்கும் இதே பேச்சு, காலையில விடிஞ்சு சூரியன் வானத்தை பார்த்தது அம்புட்டு பேரும் அங்க போய் கூடிட்டாங்க கருப்பையா பதினோரு மணிக்கு ஒரு பெட்டி எடுத்துட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார் . ஊரே அமைதியா பார்க்க அந்த பெட்டியை மெதுவாகத் திறக்க அதிலிருந்து வெளியே வந்தது ஒரு வெள்ள நோட்டு.. இதத்தான் இம்புட்டு விமர்சனம் பண்ணிய இத வச்சி என்ன செய்ய வயல உழதானே சோறு போடும் ..வாங்க வேலையை பார்ப்போம்!!!
2050 ல்...
ஹலோ எப்படி இருக்கீங்க ??பார்த்து ரொம்ப நாளாச்சு ... மன்னிக்கணும் ,கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ஏதோ உங்க தாத்தா கொடுத்தத காட்டுரெனீங்களே என்னது?? கருஸ் ஒரு அழகான பெட்டியிலிருந்து ஒரு நோட்டை எடுத்தார், அட இத தான் சொன்னீங்களா?? இதையேதான் எங்க தாத்தாவும் வச்சிட்டு போய் இருந்தாரு இத வச்சு என்ன பண்றது!!!
ஒரே மரத்தில் இருந்தே பிறந்தோம் ,
அச்சடிக்கப்பட்டு நீயோ உயர்ந்தாய் சிரித்தாய்..
அச்சில் ஏற்றி என்னை பலவகையாக பிரித்து சில நேரம் உயர்த்தி, சில நேரம் கிழித்து எறிந்தனர்,
ஆனால் ஓர் இரவு போதும் உனக்கும் என் நிலைமை தான்!!!
அந்நியன் ஆக உள்ளே வந்த பணம் இன்று அந்நியன் ஆக்கியது அனைவரையும்!!!
பணம்...
கஞ்சி போட்ட வெள்ளை சட்டையின் உள்ளே விரைப்பாய் கண்ணாடிப் பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மை போலே...
அழுக்கு வேஷ்டியில் சுருட்டி வைக்கப்பட்ட கந்தல் நோட்டோ வானத்தில் பறக்கும் பட்டாம்ப்பூச்சி போலே..
உயிரை படைத்த சாமிக்கும் ,உன்னை படைத்த ஆசாமிக்கும் உன்னையே மாலையாக போட்டு அழகு பார்க்கும் கூட்டம் இருக்கும் வரையில் நீயே தனிக்காட்டு ராஜா!!!
நீயே இருப்பாய் பந்தியிலே மற்றும் அனைத்தும் இருக்கும் குப்பையிலே !!!
எவ்வளவு தங்கமான குணம் இருந்தாலும் பணம் அதை மறைத்து விடுகிறது, எவ்வளவு அவமானங்களையும்,வலிகளையும் தந்தாலும் உன்னையும் வெற்றி கண்டு சிகரத்தைத் தொட்டவர் பலர்!!!
அன்புக்கு வேலி அவசியமா? by Thahira
அன்புக்கு வேலி அவசியமா?
ஆயிஷா... கணவனின் வரதட்சணை கொடுமை தாளாமல் சபர்மதி நதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்.. ஹ்ம்ம்ம்.. உயிர்நீக்கும் முன் தெளிவான வீடியோ பதிவையும் ஏற்றியுள்ளார். இவ்ளோ தெளிவாகப் பேசியிருப்பதைப் பார்த்தால் தனிச்சையாக முடிவெடுக்காமல் நன்கு தீர யோசித்துத் தன் கணவனைப் பழிவாங்கவே இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்ததற்காக அவரைக் கோழை என்று பலர் தூற்றுகின்றனர். இத்தகைய நெருக்கடியான சூழலில் நாம் சிக்காததாலோ அல்லது தற்கொலை செய்யும் அளவு நம்பிக்கையின்றி துவண்டு போகாமல் நம்மை இறைவன் பாதுகாத்து வைத்திருப்பதாலோ ஆயிஷவின் முடிவை மட்டுமல்ல, எவருடைய முடிவையும் விமர்சிக்கும் தகுதியினை அடைந்துவிட முடியாது, இல்லையா? பிறரது முடிவுகளை விமர்சிப்பதை விடவும் அவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்களைக் கவனிப்பதே எல்லா வகையிலும் நன்மை பயக்கும்.
இந்த தற்கொலை விஷயத்திலும் நமக்குப் பாடமா? ஆம்.
இதில் நமக்கு இருக்கும் பாடம் இதுதான். ஆயிஷா தன் வாழ்வில் நிகழ்ந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான தன் கணவனைப் பற்றி மட்டுமே சிந்தித்திருக்கிறாள். பிரச்சினைகள் தரும் குழப்பங்களின் போது நமது முடிவெடுக்கும் திறன் திசை மாறுகிறது என்பது நமக்கு விளங்குகிறது. பிரச்சினைகளுக்கு யார் காரணமோ அவர்களைத் தான் அதிக முக்கியமாகக் கருதுகிறோம். ஆனால், உண்மையில் சீரான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் சமயத்தில் இது தவறு என்பது தெளிவாகப் புரியும். நம் வாழ்வு என்பது நமக்கானது. பிறருக்கு உதவுவதில் நமக்கு இன்பம் தான் கிடைக்க வேண்டும். மாறாக, நம் உதவியோ அருகாமையோ யாருக்கு விருப்பமில்லையோ அவர்களுக்காக ஒரு நொடியும் செலவழிப்பது நமக்கு அவசியமில்லை. விலகி வந்து அவர்களுக்காகப் பிரார்த்திப்பதோடு நம் அன்புக்கு வேலி அமைத்துகொள்ளலாம். பல சமயங்களில் இந்த விலகலே அவர்கள் நம்மைப் புரிந்து கொண்டு நெருங்கி வர உதவும். நமக்கு யார்மீது வெறுப்புள்ளதோ அவரையே, அவரது நடவடிக்கைகளையே உற்று உற்றுப் கவனித்துக்கொண்டிருக்கிறோம். நம் நலன் மீது அக்கறை கொண்டு அறிவுரை சொல்பவர்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒதுக்கி விலக வேண்டியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே நம் நேரத்தையும் செயல்களையும் செலவழித்து மனநலத்தையும் உடல்நலத்தையும் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். சிந்திப்போமா? நிச்சயம் சிந்திப்போம். சிந்தித்து சிந்தனைகளைச் சீராக்கிக்கொள்வோம்.
Friday, March 19, 2021
சிந்தனைக்குரிய பகுதி -"ஆசை" by Vedavalli Ramani
ஆசை . முக கவசம் அணிந்த முகத்து கவசம் எடுத்து அவர்கள் புன்னகை பார்க்க ஆசை.
உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் அடிப்படைத் தேவைகளான உணவு.உடை.இருக்க இடம் கிடைக்க ஆசை.
உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கல்வி கிடைக்க ஆசை.
உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் பொறாமை.ஏமாற்றுதல்.திருட்டு.பொய் சொல்லாமல் இருக்க ஆசை.
உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் அன்பு.பண்பு.உதவும் குணம்.தயை இவைகளுடன் இருக்க ஆசை.
ஆசை அம்மா ஆசை இது தான் என் ஆசை.
Thursday, March 18, 2021
Wednesday, March 17, 2021
தோப்பு by Vidhya Nivash
சின்னையா தாத்தாவிற்கு முதலாவதாக ஒரு பேரக் குழந்தை பிறந்தது.பேரன் பிறந்ததின் சந்தோஷத்தின் காரணமாக வீட்டின் பின்புறம் ஆசையாக ஒரு பலாக் கன்றை நட்டு வைத்தார் . பேரன் வளரவளர பலா மரமும் வளர்ந்து கொண்டே வந்தது வருடங்கள் ஓட மரமும் வளர்ந்து செழித்து. அதில் பழுத்த முதல் பலாப்பழத்தை கோவிலுக்கு கொடுத்து அங்கு வரும் சிறுபிள்ளைக்கு ஆசையாக கொடுப்பதே தாத்தாவின் பழக்கம்.இதே போல் ஒவ்வொரு வருடமும் பலாப்பழ சீசன் வரும்போது இதே மாதிரி தானமாகக் கொடுப்பார்.
அடுத்தடுத்த பேரக்குழந்தைகளுக்கும் மாமரம் ,கொய்யா ,தென்னை மரம் என்று கடைசியில் அவர் வீட்டை சுற்றிலும் ஒரு சின்ன தோப்பாக உருவாகிவிட்டது. ஒவ்வொரு மரத்திற்கும் அந்த பேரக்குழந்தைகளின் பெயரையே வைத்து அவர்கள் இல்லாத போது அவர்களுடன் உரையாடுவது போல மரங்களுடன் ஆசையாக பேசி பழகி வந்தார். அனைத்து மரங்களும் குழந்தைகள் சிரிப்பது போல பூத்துக் குலுங்கி எங்கும் பசுமை நிறைந்து வழிந்தது.பேரப்பிள்ளைகள் ஊருக்கு வரும்பொழுது ஆசையாக தானே பழங்களை பறித்துக் கொடுப்பார் .அவருடைய அன்பிற்கு ஏற்றாற்போல் அதிலிருக்கும் பழங்களும் சர்க்கரை போல இனிக்கும் . வருடங்கள் ஓட வயோதிகத்தின் காரணமாக தாத்தாவும் இறந்துவிட்டார்.
முதல் பேரனுக்கு தாத்தாவின் ஞாபகம் வந்தது உடனடியாக ஊருக்கு கிளம்பி சென்றான். எப்பொழுதும் தாத்தா அங்கே நின்று வரவேற்பது போல பாட்டி இன்று, அவர் நின்று சிரிப்பது போல் பலாமரம் வரவேற்க. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஆசையாக வளர்த்த பலா மரத்திலிருந்து ஒரு புதிய கன்று தழைத்திருந்தது ஆசைக்கு எல்லையே இல்லை மீண்டும் ஒரு தோப்பு உருவாக காலம் ஆசையாக காத்திருக்கக்கிறது.
Tuesday, March 16, 2021
சிந்தனைக்குரிய பகுதி -"ஆசை" கதை by Vidhya Nivash
மாலை நேரத்தில் வேலை முடிந்து பேருந்தில் வீட்டிற்கு பயணம் செய்கிறான் சிவா . ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான் .தெருவில் ஓரமாக இரண்டு பிள்ளைகள் ஒரே ஒரு சாக்லேட்டுக்கு சண்டை போடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான். சிறுவயதில் அவனுடைய நண்பனுடன் சேர்ந்து ஆசை சாக்லெட்டின் கவரை பிடித்து இழுத்து விளையாடிய நியாபகம் வருகிறது .அவனுக்கு அதோடு மட்டுமில்லாமல் ஆசை சாக்லேட்டின் கவர்கள் 25 சேமித்த சுவாரசியமும் அதிலிருந்து கிடைக்கும் ஸ்டிக்கர்களும், ஒரு ஆசை சாக்லேட்டும் எந்த ஒரு கடையிலும் காசு கொடுத்து வாங்கிய சாக்லேட்டுக்கு இணையாக அவ்வளவு சந்தோஷம் தோன்றும். இப்பொழுதோ எத்தனை ஆசை சாக்லேட் வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் ஆனால் அந்த சுகமில்லை.வீட்டிற்கு செல்கிறான் அதே ஆசை சாக்லேட்டின் நினைப்போடு தூங்க செல்கிறான் .மறுநாள் காலையில் கண் விழித்து எழுந்து பார்க்கும் பொழுது கடிகாரம் ஆசை ஆசை என்று அடிக்கிறது. வெளியே பால்காரனும் அம்மா ஆசை ஆசை என்கிறார் .பக்கத்தில் இருக்கும் மரத்திலிருந்து கூவும் குயிலும் ஆசை ஆசை என்றே கூவுகிறது .இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று யோசித்தவாறே சமையல் அறைக்கு செல்கிறான் அங்கே பொங்கும் பாலில் இருந்தும் ஆசை ஆசை என்றே வடிகிறது. குளிக்க சென்று பைப்பை திறந்தால் தண்ணீரும் ஆசையாசையாய் சொட்டுகிறது .அம்மா கூட ஆசை ஆசை என்று ஆவி பறக்க இட்லி தட்டில் வைக்கிறாள் .காணும் காட்சிகள், எங்கும் ஆசை எதிலும் ஆசையை தெரிகிறது .அவன் வேகமாக ஓடி சென்று பஸ்ஸில் ஏறினால் பஸ்ஸில் அடிக்கும் ஹாரன் ஆசை ஆசை என்கிறது. ஆசை ஆசை என்றே பூ விற்கிறார்கள் .ஆபீஸ் சென்றால் மேனேஜரும் ஆசை ஆசை என்று வரவேற்கிறார். எங்கும் ஆசை, எதிலும் ஆசை என்று ஒரு ஆசை உலகத்தில் மாட்டிக்கொண்டது போல் இருக்கிறது .சிவாவிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் கூகுளில் ஆசை சாக்லேட் எங்கே கிடைக்கும் என்று தேடிப்பிடித்து கண்டுபிடித்து விடுகிறான் .ஆசை சாக்லெட்டை அவசரமாக வாங்கி அதை ஆசையாக வாயில் போட்டு ருசிக்கும் போது அது இன்று விற்கும் ஆசை சாக்லேட் அவன் எண்பதுகளில் சாப்பிட்ட ஆசை சாக்லேட்டின் சுவை அதில் இல்லை . ஆசை உலகம் கலைகிறது கண்விழித்து பார்த்தால் அவன் இருப்பது அதே பேருந்தில் ஜன்னலோர இருக்கையிலே...மீண்டும் ஆசை வலை தொடருகிறது.
Monday, March 15, 2021
Sunday, March 14, 2021
Saturday, March 13, 2021
சிந்தனைக்குரிய பகுதி -"ஆசை" by Vidhya Nivash
காற்றாக மாறி எல்லை கடந்து வானம் தொட்டு பருந்து போல் வட்டமிட ஆசை,
அதிகாலையில் மலரும் மொட்டு களிலிருந்து சிந்தும் தேன் ஆக மாற ஆசை,
மலை உச்சியில் மரத்தின் கிளையில் தலைகீழாகத் தொங்கும் குரங்காக மாற ஆசை,
சுட்டெரிக்கும் சூரியனுக்கு குடை பிடிக்க ஆசை,
இருள் கொஞ்சும் பொழுதில் நடு வானில் மிதக்கும் நிலவின் அருகில் நட்சத்திரமாக கண் சிமிட்டிட ஆசை,
வானவில்லின் வண்ணம் ஆக மாறி அருவிகளில் வழிந்தோடிட ஆசை,
வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் இல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்திட ஆசை,
மயில்போல காலில் சலங்கை கட்டி ஆட ஆசை,
குயில் போல இல்லை என்றாலும் கழுதை போல கத்த ஆசை,
மலர்களை மொய்க்கும் வண்டுகளை போல புத்தகங்களைக் மொய்க்க ஆசை,
பெண்ணுக்குள் ஆண், ஆணுக்குள் பெண் இது இயல்பு இவை இரண்டும் மத்தியிலும் அல்லாடும் உள்ளங்களின் கண்ணீர் துடைக்கும் கைக்குட்டையாக மாற ஆசை,
சத்தமில்லா கடலில் மிதக்கும் ஓடம் ஆக மாற ஆசை,
தூசி பறக்கும் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறக்க ஆசை,
பால்போன்ற குழந்தைகளின் கண்களில் இருந்து வடியும் மையாக ஒழுக ஆசை,
பல பேர் பசி போக்கும் கோயில் பிரசாதமாக மாற ஆசை,
சில நேரம் நீதிபதிகளின் பேனா மையாக மாற ஆசை,
அம்மா அப்பாவிற்கு செருப்பாக மாற ஆசை,
என்னவரின் கைபிடித்து நெடுந்தூரம் மௌனத்தில் பேசி நடந்திட ஆசை,
தோழிகளின் தலையணையாக இருக்க ஆசை,
காதலன் காதலியின் கற்பனையாக ஆசை,
காற்றில் கரையும் கற்பூரமாகவும், ஆடி காற்றடித்தாலும் அசையாத கல்லாகவும் ஆக ஆசை,
மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோலாக நிற்க ஆசை,
வயது முதிர்ந்தும் சிறுபிள்ளை போல் நடக்கும் பிள்ளைகளை தமக்குப் பின் யார் காப்பார் என்று ஏங்கும் பெற்றோரின் தூக்கமாக இருக்க ஆசை,
இறக்கும் நாள் அறிந்து வாடும் உள்ளங்களின் படுக்கையாக மாற ஆசை,
ஆசை எனும் அருமருந்து இருப்பதாலே பலர் இன்று அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர் வாழ்க்கையை ....
இன்று பேச ,எழுத ,நடக்க ,சிரிக்க, அழுவ அனைத்து சுதந்திரமும் கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறி நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!!!!
சிந்தனைக்குரிய பகுதி_ "ஆசை" by Jaya
ஆசையின் ஓசை
ஓவ்வொருவரின்
மனதில் இசையாய்
மனதை உயிர்ப்பாய்
இருக்க செய்யும்
மனதின் திறவுகோல்!!!
வகை வகையாய் பொருள் ஈட்டிட ஆசையில்லை
ஈகையோடு பிறர்க்கு உதவிட ஆசை
பகை கொண்டு பிறர் வெல்ல ஆசையில்லை
பகையில்லா உறவு கொண்டு வாழ்ந்திட ஆசை
நகை நகையாய் வாங்கிப் பூட்டிட ஆசையில்லை
நகைச்சுவை இழைய மனம் நோகா வாழ்வு வாழ்ந்திட ஆசை
மிகை வளர்ச்சியின் பின் ஓடிட ஆசையில்லை
தகைமை கொண்டு தளர்ந்து விடாமல் வாழ்ந்திட ஆசை
அகவை பல கடந்து வாழ்ந்திட ஆசையில்லை
அகம் வென்று அவனியில் அன்பு அழிந்திடாது வாழ்ந்திட ஆசை
உறவை தொலைக்கும் பணத்தின் பின்னே ஓடிட ஆசையில்லை
பறவை போல் சுதந்திரமாய் வாழ்ந்திட ஆசை
தான் மட்டும் என ஏகபோக வாழ்வு வாழ்ந்திட ஆசையில்லை
கரம் கோர்த்து நட்புணர்வாய் கூடி வாழ்ந்திட கோடி ஆசை
புறம் பேசி பொய் சொல்லி வாழ்ந்திட ஆசையில்லை
அறத்தின் வழி நல்வாழ்வு வாழ்ந்திட ஆசை
மனத்தில் சுகபோகமாய் உண்டுறங்கி வாழ்ந்திட ஆசையில்லை
அகத்தில் இறையுணர்வு கொண்டு வாழ்ந்திட ஆசை
பெருங்கவலைகள் நமை திண்ண விடாது
சிறுசிறு சந்தோஷங்களால் மனதை
நிறைத்து நிம்மதியாய் வாழ
நித்தமும் ஆசை!!!!!!!
Thursday, March 11, 2021
சிந்தனைக்குரிய பகுதி -"அலைகள்" by Vedavalli Ramani
ஆ அலைகள்.ஏன் இதுவரை எழுத தோணலை.மூன்று குழந்தைகளை தனக்கு இருதய நோய் இருந்தும்.நண்பர்கள்.உறவினர்கள் சொல்லியும் கேட்காமல் வெளிநாடு அனுப்பிய என் தெய்வம் சிங்கப்பூரில் மகன் மடியில் உயிரை விட்டு ஆற்றில் கரைந்து அலையாக வருவது போல் அலைகளை பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கும் அந்த ஆனந்தம் எங்கள் மகள் வீட்டில் அபுதாபில் கிடைத்து.வின்.மீன்கள் அகிலா வை சந்தித்ததையும் மறக்க மாட்டேன்.அலைகளேஎன்னவர் சேதியை சொல்லுங்களே.
Tuesday, March 9, 2021
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...















































