Monday, March 8, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"அலைகள்" by Vidhya Nivash

 


கட்டுக்கு அடங்காமல் துள்ளி எழும் அலைகளை பார்க்கும் போது மனமும் சேர்ந்து துள்ளுகிறது சிறு பிள்ளை போல்...


நுரை நுரையாய் பொங்கும் நீர்க்குமிழ்கள் எங்கும் பரவி மறைகிறது நொடியில்..


அலைகளின் ஓங்கார சப்தம் எதையோ காதில் சொல்லி மௌனத்தில் முடிக்கிறது..


இந்த அலைகள் நம்மை வசீகரிக்க அனைத்துலக இன்ப ,துன்பம் மறந்து சிலையாக...


இந்த உலகின் நிலையற்ற தன்மையை உணர்த்தி,

எதுவுமே வந்த இடம் தெரியாமல் மறையும் நொடியில்..


 அதை அடக்க நினைத்தால் அது நன்மை ஆட்கொண்டு விடும் என்று சொல்லாமல் சொல்லுகிறது இந்த அலைகள்,


கடலும்,அலையும் என்றும் வியப்பானது !!!



அலைகள் ஓய்வதில்லை,

ஆசைகள் ஓய்வதில்லை,

இசைகள் ஓய்வதில்லை,

ஈர்ப்புகள் ஓய்வதில்லை,

உணர்ச்சிகள் ஓய்வதில்லை,

ஊக்கம் ஓய்வதில்லை,

எண்ணங்கள் ஓய்வதில்லை,

ஏக்கங்கள் ஓய்வதில்லை,

ஐயம் ஓய்வதில்லை,

ஒப்புரவு ஓய்வதில்லை,

ஓசைகள் ஓய்வதில்லை,

ஒளவியம் ஓய்வதில்லை...

இந்த அனைத்து அலைகளும் ஒன்றோடு ஒன்று மோதி விளையாடி கடல் போன்ற மனதில் சர்க்கரையாக, உப்பாகவும் கரைந்து , ஆவியாக மாறி மீண்டும் ஒன்றோடு ஒன்று மோதி அலை அடிக்கட்டுமே... அந்த அலைகளை அசையாமல் அசைபோடுவோமே!!!


10 comments:

  1. ஓயாத அலைகள் போல சுவையான புதிய ஆத்திசூடி

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு வித்யா கலக்கிட்டீங்க

    ReplyDelete
  3. வித்யா....ரொம்ப அழகாக எழுதி இருக்கேடா👌💜👌

    ReplyDelete
  4. அருமை வித்யா...

    ReplyDelete
  5. அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...