Monday, March 8, 2021

மகளிர் தின சிறப்பு கவிதை by Kamatchi


உலகப் பெண்கள்

பெண்கள் தின வாழ்த்துக்கள்


அன்னையின் மடியிலே மயில் போல்

வளர்ந்த பூக்களளே!


பருவ வயதில் பட்டாடைக் கட்டி

பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்களே!


பலதுறைகளிலும் பட்டப்படிப்பை முடித்து நான்கு திசைகளிலும் நற்பெயர் எடுத்தவளே!


திருமண பந்தங்கள் புதிது என்றாலும் புன்னகையாய் புகுந்தவர்களே!


தரணி சிறக்க தன்னலமற்ற அறிவைக் கொடுக்க ஆசானாய் அமர்ந்தவளே!


மருத்துவத் துறையிலும் மனம் நோகாமல் மக்களைக் காக்கும் மங்கையர்களே!


எல்லாத்துறைகளிலும் எழில்மிகு வளர்ச்சி பெற்று சிறப்புடன் இருக்கும் எழிலரசிகளே !


இவை அனைத்தையும் திறம்பட செய்து அழகாய் குடும்பத்தை காக்கும் சிங்க பெண்களே!


அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்


4 comments:

  1. அழகான முதல் கவிதை,அருமை👏👏

    ReplyDelete
  2. Great and beautiful. Keep it up kamatchi. 💞👏👏👏I am happy to see you here.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். அருமையான கவிதை

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் காமாட்சி 🕊

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...