Saturday, March 20, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"பணம்" by Vidhya Nivash

 


ஏ ...இராக்காயியி... கருப்பன் வீட்ல இவ்வளவு கூட்டம் காலைல எழுந்து கொல்லைக்கு போயி வயல் பக்கம் போயி வேலைய பாக்காம அம்புட்டு பயலும் அவன் வீட்டுல பலாப்பழத்தை மொய்க்கிற ஈ போல மொய்க்க.. 


ஐயா அவரு பட்டணத்துக்கு போயிட்டு ஏதோ புதுசா...     கொண்டுவந்திருக்கிறார். நாளைக்கு பதினொரு மணிக்கு நல்ல நேரமாம் அந்த நேரத்துல எல்லோருக்கும் காட்டுவதா, சொல்லி இருக்கிறார் .அதுதான் ஊரெல்லாம் ஒரே பேச்சு பேசுறாங்க.. வானம் பார்த்த பூமியை விடவா ??? உங்களுக்கு பெரிய கூத்தாக போச்சு!


ஊரெங்கும் இதே பேச்சு, காலையில விடிஞ்சு சூரியன் வானத்தை பார்த்தது அம்புட்டு பேரும் அங்க போய் கூடிட்டாங்க கருப்பையா பதினோரு மணிக்கு ஒரு பெட்டி எடுத்துட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார் . ஊரே அமைதியா பார்க்க அந்த பெட்டியை மெதுவாகத் திறக்க அதிலிருந்து வெளியே வந்தது ஒரு வெள்ள நோட்டு.. இதத்தான் இம்புட்டு விமர்சனம் பண்ணிய இத வச்சி என்ன செய்ய வயல உழதானே சோறு போடும் ..வாங்க வேலையை பார்ப்போம்!!!


2050  ல்...


ஹலோ எப்படி இருக்கீங்க ??பார்த்து ரொம்ப நாளாச்சு ... மன்னிக்கணும் ,கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ஏதோ உங்க தாத்தா கொடுத்தத காட்டுரெனீங்களே  என்னது?? கருஸ் ஒரு அழகான பெட்டியிலிருந்து ஒரு நோட்டை எடுத்தார், அட இத தான் சொன்னீங்களா?? இதையேதான் எங்க தாத்தாவும் வச்சிட்டு போய் இருந்தாரு இத வச்சு என்ன பண்றது!!!


ஒரே மரத்தில் இருந்தே பிறந்தோம் ,

அச்சடிக்கப்பட்டு நீயோ உயர்ந்தாய் சிரித்தாய்..

அச்சில் ஏற்றி என்னை பலவகையாக பிரித்து சில நேரம் உயர்த்தி, சில நேரம் கிழித்து எறிந்தனர்,

ஆனால் ஓர் இரவு போதும் உனக்கும் என் நிலைமை தான்!!!


அந்நியன் ஆக உள்ளே வந்த பணம் இன்று அந்நியன் ஆக்கியது அனைவரையும்!!!


பணம்...


கஞ்சி போட்ட வெள்ளை சட்டையின் உள்ளே விரைப்பாய் கண்ணாடிப் பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மை போலே...


அழுக்கு வேஷ்டியில் சுருட்டி வைக்கப்பட்ட கந்தல் நோட்டோ வானத்தில் பறக்கும் பட்டாம்ப்பூச்சி போலே..


உயிரை படைத்த சாமிக்கும் ,உன்னை படைத்த ஆசாமிக்கும்  உன்னையே மாலையாக போட்டு அழகு பார்க்கும் கூட்டம் இருக்கும் வரையில் நீயே தனிக்காட்டு ராஜா!!!


நீயே இருப்பாய் பந்தியிலே மற்றும் அனைத்தும் இருக்கும் குப்பையிலே !!!


எவ்வளவு தங்கமான குணம் இருந்தாலும் பணம் அதை மறைத்து விடுகிறது, எவ்வளவு அவமானங்களையும்,வலிகளையும் தந்தாலும் உன்னையும் வெற்றி கண்டு சிகரத்தைத் தொட்டவர் பலர்!!!



4 comments:

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...