"தேசாந்திரி" என்ற புத்தக தலைப்பிற்கு ஏற்றார் போல் இந்த தேசத்தை நாம் சுற்றித்திரிய ,வெட்டவெளியில் சுதந்திரமாக வட்டமிட ,மேகங்களையும், அலைகளையும் தொட்டு ,மலையின் உச்சியில் சென்று கத்தி, மழையில் நனைந்து, பனியில் உறைந்து ,வெயிலில் காய்ந்து, இருளில் பயந்து, நடையில் தேய்ந்து, மணலில் புரண்டு, தெருவில் திரிந்து ,சுனாமியில் மனம் கரைந்து ,அதிசய பிறவி எண்ணி அசந்து ,கல்லை மரத்தை வணங்கி..என்னவென்று சொல்வது ஒவ்வொரு தலைப்பும் அந்த தலைப்பிற்கு கீழே உள்ள வெவ்வேறு எழுத்தாளர்களின் கவிதையும் இதை எழுத செய்தது இங்கு. .
மீண்டும் ஆசிரியர் அவருடைய எழுத்தில் ,பயணத்தில், ஆச்சரியத்தில் மூழ்கடித்து கடலில் முத்துக் குளிப்பது போல் இந்த புத்தகத்தில் இருந்து முத்துக்களையும், வைரங்களையும் கண்டு இன்ப மகிழ்ச்சி அடைந்தேன்.எஸ். ரா அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி என்றும் உரியது.
சென்னை பற்றி தெரியும் சென்னையில் இருக்கும் புனித தாமஸ் மௌன்ட் பற்றிய வரலாறு தெரியாது,
சரநாத் பற்றி தெரியும் இங்கிருக்கும் சிலையில் மட்டும் புத்தர் இல்லை அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும், கல் பற்றி கூறும் கருத்து தெரியாது,
காசி பற்றி தெரியும் ஆனால் அங்கே இருக்கும் மியூசியத்தின் சிறப்பம்சம் தெரியாது,
தண்டி யாத்திரை பற்றி தெரியும் ஆனால் உப்பின் வரலாறு தெரியாது,
அயோத்தி, பீகார், டெல்லி அவற்றில் இருக்கும் பரபரப்பு தெரியும் ஆனால் அதற்கு நேர் எதிராக இருக்கும் தோகைமலை தெரியாது, குருமலை தெரியாது, கன்னியாகுமரியில் இருக்கும் பழங்குடியினர் பற்றி தெரியாது,
சமணர்கள் பற்றி தெரியும் ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற படுக்கைகளின் சிறப்பம்சம் தெரியாது,
சோழர்கள் கட்டிய கோவில்கள் பற்றி தெரியும் ஆனால் அதிலிருக்கும் சிற்பங்களும், ஓவியங்களும் மறைந்து வருவது தெரியாது,
கோயிலுக்கு சென்று கூட்டநெரிசலில் சாமி கும்பிட்டுவிட்டு, பிரசாதம் உண்டு ,சொந்தக்கதை ,சோகக்கதை பேசுவோமே தவிர அங்கு இருக்கும் சிலைகளின் கலை வடிவமும் ,அதன் பின் இருக்கும் சிற்பிகளின் வலியும் தெரியாது,
பழனி பஞ்சாமிர்தம் பற்றி தெரியும் ஆனால் அங்கே இருக்கும் போகர்,குதிரை வண்டியின் அருமை தெரியாது,
பலமுறை கோயிலுக்கு சென்று, ஒரு நாளில் பலமுறை தரிசனம் பெற்று மொட்டை அடித்து ,உண்டியலில் பணம் போட தெரியும் ஆனால் அதையே சுற்றி வரும் மனித மனங்களுக்கு அள்ளிக் கொடுக்க தெரியாது ,
சுதந்திர வீரர்கள் என்று சிலரை பற்றி மட்டும் தெரியும் ஆனால் மணியாச்சி இரயில் நிலையம் பற்றி தெரியாது,
கட்டபொம்மன் பற்றி தெரியும் ஆனால் இன்றும் அவருக்கு மரியாதை கொடுக்கும் புதுக்கோட்டை குமாரபட்டி கிராமம் பற்றி தெரியாது,
கழுதை கல்யாணம் கேள்விப்
பட்டிருக்கிறோம் ஆனால் கொக்கு கதையும் ,தவளைக்கதையும் இன்னும் பல கிராமங்களில் நடைபெறுவது தெரியாது,
எகிப்திய பிரமிடுகள் பற்றி தெரியும் அதைவிட பழமையான மரங்கள் இருக்கும் காப்பகம் திண்டிவனம் அருகில் திருவக்கரையில் இருப்பது தெரியாது, மரங்கள் கல்லாகும் கதை தெரியாது ,
ஆறுகள் உற்பத்தியாகும் இடம் பற்றி தெரியும் ஆனால் அவை கடலில் சென்று கலக்கும் இடம் எப்படி இருக்கும் தெரியாது,
கடலின் கொந்தளிப்பால் மறைந்த ஊர்களைப் பற்றி தெரியும் ஆனால் அவற்றின் இன்றைய நிலை தெரியாது,
என இன்னும் பல கேள்விகள் ,அனைத்தும் உண்மை தானே??? அவர் ரசித்த வற்றை அழகான வார்த்தைகளில் நெய்த புத்தகம். இது "தேசாந்திரி" என்ற சொல்லுக்கேற்ப நாம் இந்தத் தேசத்தை சுற்றி பார்க்க உதவும் ஒரு சிறந்த கையேடு.






Awesome......with clippings too!! Great compilation Vidhya. Keeo sharing dear
ReplyDeleteThank you Akhila 😊
ReplyDeleteSuper
ReplyDeleteThank you 😊
DeleteArumaiyana, culture,memories, super
ReplyDeleteThank you Amma 😊
ReplyDeleteவித்யா ஒரு ஒரு வரிகளிலும்....ஆழ்ந்த சிந்தனையும், இழந்ததின்....அர்த்தங்களும் தெளிவாக சொல்லியிருக்கேடா💜💜
ReplyDeleteThank you akka 😊
ReplyDelete