" மனம் ஸ்பரிசிக்க நினைக்கும் ஓர் அற்புத உணர்வு ஓயாத அலைகள்"
"தூய்மையான மனதை காட்டும் வெண் அலைகள்
தாயின் தாலாட்டை உணர்த்தும் அலையின் ஓசைகள்"
மீனவக் குழந்தையின் தாலாட்டுப் பாடல் நீ
முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணம் நீ
ஓயாதிருப்பதால்
தலையெழுத்தை மாற்ற முடியும் என நினைக்க வைத்தவன் நீ
நான் மணலில் விரக்தியால் எழுதிய வார்த்தைகளை அழித்ததால்
கரையைத் தொட நினைத்தாலும் உன் எல்லையை கட்டுக்குள் வைத்திருப்பவன் நீ
மனிதனின் வாழ்க்கையை உணர்த்தவே சுனாமியாக உருவெடுத்தாய்
உனக்குள்ளே ஒளித்துகொள்ளாமல் விலையுள்ள பொருட்களையும் உன் கரம் கொண்டு கரை சேர்த்தாய் நீ
தீண்டாமை இருந்த காலத்திலும் அனைவரையும் தீண்டி மகிழச் செய்தாய்
மாற்று கருத்து இல்லை என்னிடம் நீ என்னை இழுத்துக் கொண்டாலும் கரை சேர்த்து விடுவாய் என் உடலை...


கடைசி வரி அருமை👏
ReplyDelete