மாலை நேரத்தில் வேலை முடிந்து பேருந்தில் வீட்டிற்கு பயணம் செய்கிறான் சிவா . ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான் .தெருவில் ஓரமாக இரண்டு பிள்ளைகள் ஒரே ஒரு சாக்லேட்டுக்கு சண்டை போடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான். சிறுவயதில் அவனுடைய நண்பனுடன் சேர்ந்து ஆசை சாக்லெட்டின் கவரை பிடித்து இழுத்து விளையாடிய நியாபகம் வருகிறது .அவனுக்கு அதோடு மட்டுமில்லாமல் ஆசை சாக்லேட்டின் கவர்கள் 25 சேமித்த சுவாரசியமும் அதிலிருந்து கிடைக்கும் ஸ்டிக்கர்களும், ஒரு ஆசை சாக்லேட்டும் எந்த ஒரு கடையிலும் காசு கொடுத்து வாங்கிய சாக்லேட்டுக்கு இணையாக அவ்வளவு சந்தோஷம் தோன்றும். இப்பொழுதோ எத்தனை ஆசை சாக்லேட் வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் ஆனால் அந்த சுகமில்லை.வீட்டிற்கு செல்கிறான் அதே ஆசை சாக்லேட்டின் நினைப்போடு தூங்க செல்கிறான் .மறுநாள் காலையில் கண் விழித்து எழுந்து பார்க்கும் பொழுது கடிகாரம் ஆசை ஆசை என்று அடிக்கிறது. வெளியே பால்காரனும் அம்மா ஆசை ஆசை என்கிறார் .பக்கத்தில் இருக்கும் மரத்திலிருந்து கூவும் குயிலும் ஆசை ஆசை என்றே கூவுகிறது .இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று யோசித்தவாறே சமையல் அறைக்கு செல்கிறான் அங்கே பொங்கும் பாலில் இருந்தும் ஆசை ஆசை என்றே வடிகிறது. குளிக்க சென்று பைப்பை திறந்தால் தண்ணீரும் ஆசையாசையாய் சொட்டுகிறது .அம்மா கூட ஆசை ஆசை என்று ஆவி பறக்க இட்லி தட்டில் வைக்கிறாள் .காணும் காட்சிகள், எங்கும் ஆசை எதிலும் ஆசையை தெரிகிறது .அவன் வேகமாக ஓடி சென்று பஸ்ஸில் ஏறினால் பஸ்ஸில் அடிக்கும் ஹாரன் ஆசை ஆசை என்கிறது. ஆசை ஆசை என்றே பூ விற்கிறார்கள் .ஆபீஸ் சென்றால் மேனேஜரும் ஆசை ஆசை என்று வரவேற்கிறார். எங்கும் ஆசை, எதிலும் ஆசை என்று ஒரு ஆசை உலகத்தில் மாட்டிக்கொண்டது போல் இருக்கிறது .சிவாவிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் கூகுளில் ஆசை சாக்லேட் எங்கே கிடைக்கும் என்று தேடிப்பிடித்து கண்டுபிடித்து விடுகிறான் .ஆசை சாக்லெட்டை அவசரமாக வாங்கி அதை ஆசையாக வாயில் போட்டு ருசிக்கும் போது அது இன்று விற்கும் ஆசை சாக்லேட் அவன் எண்பதுகளில் சாப்பிட்ட ஆசை சாக்லேட்டின் சுவை அதில் இல்லை . ஆசை உலகம் கலைகிறது கண்விழித்து பார்த்தால் அவன் இருப்பது அதே பேருந்தில் ஜன்னலோர இருக்கையிலே...மீண்டும் ஆசை வலை தொடருகிறது.


Asai,asaiyaga,irukkirathu,Vidhya,rajiyai,parpathrkku
ReplyDeleteஎங்களுக்கும் தான் அம்மா😊
Deleteஆசை முன்னாள் ஐ அசை போட வைத்தது
ReplyDeleteஆசை ஆசையாக இருக்கு உன் ஆசைகளை கேட்க.
ReplyDeleteThank you Sakthi 😊
ReplyDelete