அதிகாலை வேளை....
பனிமூட்டத்தால் சூழ்ந்திருக்கும்
விண்ணில்.....
வெண்பஞ்சாலான தன் மேக போர்வையினை
கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொண்டுதகதகக்கும்,
தன் தங்க முகத்தின் பிரகாசத்தினால்.....
இப்பிரபஞ்சத்தினையே ஒளி
மயமாக்குகிறான்
*பகலவன்*
தன் செங்கதிர்களின்
கைதீண்டுதலுக்காக தன் முகத்தை
மூடிக்கொண்டிருக்கும் தாமரையின்
அழகினை ரசிக்கிறான்
*பகலவன்*
தன் செங்கதிர்களின்
கை தீண்டுதலினால்
மேகங்கள் ஒன்றோடு ஒன்று
இணைந்து பொழியும் மழை
துளிகளை ரசிக்கிறான்
*பகலவன்*
தன் செங்கதிர்களின்
கை தீண்டுதலினால்
கூட்டினில் இருந்து தன் தலையினை
மெல்ல மெல்ல அசைத்து
சப்தஸ்வரங்கள் கற்றுக் கொள்ளாமல்
இனிமையான பாடல்களை பாடும்
பறவையினங்களை ரசிக்கிறான்
*பகலவன்*
தன் செங்கதிர்களின்
கை தீண்டுதலினால்....
காலத்தை கணித்து முப்போகம்
விளைவித்து உலக மக்களை வாழ
வைக்கும் உழவனை ரசிக்கிறான்
*பகலவன்*
அந்திமவேளையில்
தன் செங்கதிர்களின்
ஒளியிழந்தாலும்....தன் மென்மையான
ஒளிக்காக மலர காத்திருக்கும்
அல்லியின் மலரும் அழகினை
ரசித்தபடியே
தன் மேகப்போர்வைக்குள் தன்னை
லயித்துக்கொண்டான
*பகலவன்*
தன் சகோதரனின் சுட்டெரிக்கும்
செங்கதிர்களின் அருகாமையை
தாங்கமுடியாமல் கார்நிற
போர்வைக்குள் ஒளிந்திருந்த
*பிறையவன்*
கொஞ்சம் கொஞ்சமாக தன்
பால்வடியும் முகத்தின்
பிரகாசத்தினால்.....
இப்பிரபஞ்சத்தினையே ஒளி
மயமாக்குகிறான்
*பிறையவன்*
தன் கைதீண்டுதலுக்காக......
தேவலோக மலரான.......
பாமா ருக்குமணியின் மனம் கவர்ந்த
மலரான......
சூரியன் நிராகரித்த காரணத்தால்
இரவில் தான் சிந்தும் கண்ணீர்
துளிகளையே மலராக்கிய
மலரான.......
மலரினங்களிலே
மண்ணில் விழுந்து
இறைவனின் மார்பினை
அலங்கரிக்கும் பேர் பெற்ற மலரான......
பவளமல்லியின்
அழகினை ரசிக்கிறான்
*பிறையவன்*
தன் கைதீண்டுதலுக்காக பனிரெண்டு
மாதங்கள் காத்திருந்து தன்
இதழ்களை மெல்ல மெல்ல விரிக்கும்
பிரம்மகமலத்தின் அழகினை
ரசிக்கிறான் *பிறையவன்*
தன் கைதீண்டுதலுக்காக
ஆயிரமாயிரம் விண்மீன்கள்
பலவண்ண நிறங்களில் மின்னும்
அழகனை ரசிக்கிறான்
*பிறையவன்*
தன் கைதீண்டுதலுக்காக
நாள் முழுவதும் உழைத்து களைத்து
தன்னையே மறந்து நித்திரையில்
இருக்கும் ஒரு ஒரு மானிட
குழந்தைகளையும் ரசிக்கிறான்
*பிறையவன்*
வானம் எனும் கர்ப்பகுடியில்
குடியிருக்கும்
*பகலவனும், பிறையவனும்*
நாள்தோறும்....
புயலானால் என்ன?
மழையானால்
என்ன?
வெயிலானால்
என்ன?
எந்த சூழ்நிலையானால்
என்ன?
எப்போதும் மாறா தன்மையுடன்
தங்களின் கடமைகளை
நிறைவேற்றுகின்றன
அதுப்போல.....
*மானிடா!*
இன்பம்-துன்பம்,
நடந்தது-நடக்கபோவது
வந்தது-போனது
எதுவாயினும் கலங்காதே.....
*இரவென்றால்-
பகலுன்டு*
தலை நிமிர்ந்து பார்!
உன்னை வழிநடத்த
நாங்கள் இருக்கிறோம்.....
அனைத்துமாய்....










அற்புதமான சிந்தனை👌👏🌷
ReplyDeleteSuperb
ReplyDeletethoughts ma.
Thanku vidya, Thanku🤔
ReplyDeleteAwesome sairam😇
ReplyDeleteThanku sudha
ReplyDelete