Tuesday, March 2, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"பகல் இரவு" by Vidhya Nivash


 பகல் இரவாக ஓடினேன் ஆனால் நீயோ வெளிச்சமும் இருளுமாக வெளிப்பட்டாய்!!!


பட்டப்பகலில் பகலவனை பார்த்தால் கண் கூசியது கண்ணை மூடினால் எங்கும் இருள் ஓட்டம்,


அம்மாவாசையில் கூட நடுக்காட்டில் தெளிவாக தெரியும் கண்கள் அத்தனை வெளிச்சம் எங்கிருந்து வந்தது?


இருள் சூழ்ந்த வெளியில் கண்கள் பிரகாசிக்கிறது, ஒளி சூழ்ந்த வெயிலில் கண்கள் கூசுகிறது என்ன ஒரு படைப்பு??


பகலில் வெயிலில் காய்ந்த உடல் இரவின் மடியில் குளிரால் நனைகிறது..


சூரியன் மறையும் அந்தி மாலைப்பொழுது பல ரகசியங்கள் கொண்ட இரவின் ஆரம்பம் ...


அந்திமந்தாரை பூக்கள் பூத்து வரவேற்கிறது இரவெனும் அரசியை..


அவள் எங்கும் தன்னுடைய கார்கூந்தல் பரப்பி..


அதில் எண்ணிலடங்கா கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் கொண்டு அலங்கரித்து..


நடுநிசியில் பேய் வரும் என்று யாரோ சொன்ன பொய்யால் உடலெங்கும் நடுக்கம்..


நடு வானில் நிலா காய, மிருகங்கள் வேட்டையில் இறங்க...


இருள் எங்கும் சூழ்ந்து ,

பனி எங்கும் பரவ..

உறங்கும் பட்சிகள் எல்லாம் விழிக்க ...


எங்கும் பரவியிருக்கும் இருளெனும் இரவு மெல்ல போர்வையை விலக்க,


அழகாக விடியும் காலைப் பொழுது அதற்காக காத்திருக்கும் சந்திரன் மறைய ,


சூரியன் வெளிவர தினமும் அரங்கேறுகிறது ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்!!!


பகலில் ஒட்டமாகவும் இரவில் ஒய்வாகவும் இருப்பது இயற்கையின் நீதி இதை மாற்ற நினைக்கும் சமூகம் பெறுகிறது பெரும் வியாதி!!!






8 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...