Sunday, May 30, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"வெங்காயம் " by Akhiladevi Kumaran

 




சிந்தனைக்குரிய பகுதி -"வெங்காயம்" by Vidhya Nivash

 


மேலே உள்ள வெங்காயத்த பார்த்த கொஞ்சம் 

பயமா இருக்குது. வெங்காய வெடி குண்டோ? 

வெங்காய வெடி தான் கேள்விபட்டிருக்கேன்.

 இதிலிருந்து கண் திருஷ்டிக்கு பூசணிக்காயைவிட 

வெங்காயம் கரெக்ட்டா இருக்கும் என்று நினைக்கிறேன்.

 சிறந்த கிருமி நாசினி அதனால வீட்டில மாட்டினால்

 கண்டிப்பா வீடு சுத்தமா இருக்கும்னு 

நினைக்கிறேன்.பார்க்க பயங்கரமா இருக்கு இந்த 

வெங்காயம். அடுத்து ஞாபகம் வருது சின்ன 

வயசுல கேட்ட வெங்காயம் ,தக்காளி, ஐஸ் கதை

 தான் ஞாபகம் வருது.


பழையசாதமும் வெங்காயமும் என்றும் இனிமை,

வெங்காயப் பச்சடி இல்லாத பிரியாணி உண்டோ ,

வெங்காய சட்னியும் இட்லியும் பிசைந்து சாப்பிட்டால் செமயா இருக்கும்,

வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி காரவகைகள் மேலே தூவி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் , சமைத்த உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா ??சிறிது பச்சை வெங்காயத்தை சேருங்க..

வெங்காயத்தின் கூட்டணி எல்லாத்தோடும் ஒத்துப்போகும்.

பெண்கள் இல்லாத வீடு சிறக்காது வெங்காயம் இல்லாத சமையல் சுவைக்காது.



சலிப்பு by Veena Shankar

    


                                                              சலிப்பு


               தற்போது ராஜாவுக்கும் ராணிக்கும் திருமணமாகி   இருபத்தைந்து வருடமாகிறது. முதல் வருட திருமண நாளன்றே முதல் குழந்தைக்கு தாயானாள் ராணி. இதனால் தன்னை யாரும் மலடி என சொல்ல மாட்டார்கள் எனவும் நினைத்தாள் ராணி.  அந்த காலத்தில் எல்லாம் மூன்று நான்கு குழந்தைகள் வேண்டும் என்று நினைத்து பெற்றுக் கொள்வர். ராணிக்கு முதல் குழந்தை  பிறந்து பத்து வருட இடைவெளிக்கு பிறகு தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. எல்லாம் நன்மைக்கே என நினைத்தனர் தம்பதியினர். ஏனென்றால் இவ்வளவு இடைவெளியிருப்பதால் முதலாமவன் இரண்டாமவனை பார்த்துக்கொள்வான் எனக் கூட எண்ணினர்வயது முதிர்வின் போது வேலைக்கு செல்வது சிரமம் தான். எது எப்படியோ சர்வேசன் கணக்கு தப்பாது.


              குழந்தைகளும் பெரியவராகினர். முதல் பையன் காலேஜ் முடித்து விட்டான்போட்டித் தேர்விற்காக படித்துக் கொண்டிருக்கிறான். இரண்டாமவன் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். எப்போது பார்த்தாலும் இவர்கள் சண்டை போடுவதே வேலையாக இருந்தது. இது ராஜாவிற்கும் ராணிக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் பெற்றோரை கலாய்க்கும்  போது மட்டும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள்.  


              ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. இந்த கொரானா வைரஸ் வந்து இப்படி ஆட்டிவைக்கும் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள். வீட்டில் எல்லோரும் இருப்பதால் சில நேரங்களில் சிக்கல் வருகிறதுஇப்படித்தான் ராஜா-ராணியின் பிள்ளைகளும் கேட்க கூடாத கேள்வியை இன்று கேட்டனர். எனக்கும் தம்பிக்கும் இவ்வளவு வருடங்கள் இடைவெளி  இருப்பதால் தான் எங்களால் ஒற்றுமையுடன் இருக்க முடியவில்லை. அதுவுமில்லாமல் நான் படித்து முடித்து விட்டேன். தம்பி இப்போதுதான் பள்ளியில் படிக்கிறான். சென்ற வருடம், இந்த வருடம் பத்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் ஆல் பாஸ் செய்து விட்டனர். ஆனால் பாருங்கள் நானும் தம்பியும் பொது தேர்வு எழுதாமல் பாஸ் பண்ண முடியவில்லை. கஷ்டப்பட்டு படித்து தான் முன்னேற வேண்டியிருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து எங்களை பெற்றிருக்கலாம் அல்லவா என தன் குமுறலை வெளிப்படுத்தினான். அதற்கு அவன் தம்பியும் ஆமோதித்தான். இவர்களின் சலிப்பைப் பார்த்து இது என்னடா நமக்கு வந்த சோதனை என வேதனைப்பட்டனர் ராஜா-ராணி தம்பதியினர்.


                 பெயரில் ராஜா-ராணி தான் என்றாலும் பிள்ளைகளின் வார்த்தைகளால் ஏழையாயினர்.   


சிந்தனைக்குரிய பகுதி -"வெங்காயம்" by Akhiladevi Kumaran

 




சிந்தனைக்குரிய பகுதி -"வெங்காயம்" by Veena Shankar

 


சட்டை போட்ட மச்சான்

கண்ணீரை வர வச்சான்

உன் ஜோடி பூண்டோடு

தக்காளி வைத்து கொண்டாடு

நீயில்லா சமையலும் ருசிக்காது

விரத நாட்களில் உன்னை தவிர்த்து உனக்கு ஓய்வு தருகிறோம்

இதழ் இதழாக பிரிகையில் பதம் பதமாக விரிகிராய்

தேனோடு கூட்டு சேர்ந்து இருமலை போக்குகிறாய்

உன் சிறிய தங்கையும் ம(ரு)(க)த்துவம் நிறைந்தவள்

உன் மேல் வளரும் பச்சை கொண்டையும்

உணவாகிறாள் 

கொத்து கொத்தாக வளர்ந்து தத்தனியாக பிரிகிறாய் பிரிவு உபசார விழா நடத்தாமல்

உன்னை மறுப்பார் இல்லை

வெறுப்பார் இல்லை

சாமானியன் உணவிலும் கெத்தாக பங்கேற்கிறாய்

மனிதன் உள்ளவரை உன்னை மறவோம்

Friday, May 28, 2021

யாதென்று by Veena Shankar

 


யாதென்று??


வயலுக்கு தெரியாது தான் விளைவிப்பது யாதென்று

மலருக்கு தெரியாது தான் எங்கே சூடப்படுவோம் என்று

கருவுக்கு தெரியாது தான் யாரென்று

மரத்திற்கு தெரியாது தான் எப்படி உருமாறுவோம் என்று

கடலுக்கு தெரியாது தன்னுள் இருப்பது யாதென்று

மலைக்கு தெரியாது மழை நீரை சேமிப்பது எவ்வாறு என்று

மனிதனுக்கு தெரியும்

வயலை வளமாக்க

மலரை ரசிக்க

கருவை சுமக்க

மரத்தை பொருளாக்க 

கடலை சுகமாக்க

மலையை மடுவாக்க

ஆனால் மனிதனுக்கு தெரியாது

மனிதநேயத்தை வளர்க்க

Wednesday, May 26, 2021

படித்ததில் பிடித்தது கல்லும்,மரமும் by Vidhya Nivash

         படித்ததில் பிடித்தது ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சாரநாத் சென்றிருந்தார். அங்கிருந்த பார்வையற்ற ஒரு புத்த துறவி ஏன் இங்கே வந்திருக்கிறாய் என்று இவரை கேட்க புத்தரைப் பார்க்க வந்தேன் என்று இவர் பதில் கூற புத்தரையா..பார்க்க வந்திருக்கிறாய் என்று அவர் சிரிக்க .புத்தர் ஸ்தூபியை பார்க்க வந்திருக்கிறேன் என்று இவர் மீண்டும் பதில் கூற .ஏன் உங்கள் ஊரில் சுட்ட செங்கலில் சிலை இல்லையா என்று கேட்டார்.இல்லை ,இது ஆயிரம் வருடங்கள் பழமையானது.


அப்படியா உன்னுடைய வயது என்ன என்று கேட்டு,அதோடு மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் ஒரு பையில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத்து அவர் கையில் கொடுத்தார். இந்த கல்லிலும் புத்தர் இருக்கிறார் .ஆனால் இன்னும் இது சிற்பமாக மாறவில்லை. இது எங்கோ ஒரு மலையிலிருந்து உடைந்து வந்த ஒரு சிறு துகள் இப்பொழுது உன் கையில் ஒரு மலையே இருக்கிறது .கல்லை பார்த்து இருக்கிறாயா அது எப்பொழுதுமே அன்று மலர்ந்த மலர் போல் புதிதாக இருப்பதாகவே தெரியாது. 


நீயும் ஒரு கல்லை இரண்டாக உடைக்கலாம் மீண்டும் நான்காக ,எட்டாக என்று கல்லை உடைத்துக் கொண்டே போகலாம் .அந்த கல்லுக்குள் என்ன இருக்கு என்று ஆராய முடியாது . அதுபோல தான் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் .நீ சிலைகளில் உற்றுப் பார்க்காமல் கற்களில் உற்றுப்பார் வடிவமற்ற புத்தரை நீ உணர்வாய் .


அதுபோலத்தான் மரங்களும் விறகு,மேஜை,வீடுகட்ட என பல வகையில் பயன்படும் .ஒரு கண் இல்லாதவனுக்கு ஊன்றுகோலாக இருக்கும் பொழுது அது பல மலைகளையும், கடலையும் தாண்டி வருகிறது. இதோ இந்த ஊன்றுகோல் என் ஒரு உறுப்பாகவே மாறிவிட்டது என்று கூறி சென்றார்.


சிந்தனைக்குரிய பகுதி -"பல மாத தேடல்" by Akhiladevi Kumaran

 




சிந்தனைக்குரிய பகுதி -"சில தேடல்கள்" by Akhiladevi Kumaran

 




Tuesday, May 25, 2021

ஆ(ற்)றுதல் by Veena Shankar

                             


  

                     ஆ(ற்)றுதல்

தோற்றத்தில் பெண்ணாய் இரு

ஆற்றலில் ஆணாய் இரு

மாற்றத்தில் மனிதனாய் இரு

ஏற்றத்தில் சூரனாய் இரு

தேற்றுதலில் அன்னையாய் இரு

குற்றத்தில் அறிவிலியாய் இரு

பதற்றத்தில் அறிவாய் இரு

கற்றலில் அருவியாய் இரு

பெற்றதில் மகிழ்ச்சியாய் இரு

பற்றுதலில் ஏணியாய் இரு

கூற்றில் நியாயமாய் இரு

ஒற்றுமையில் தேனீயாய் இரு

வேற்றுமையில் மலர்களாய் இரு

தூற்றுதலில் ஊமையாய் இரு

சீற்றத்தில் அலையாய் இரு

சுற்றத்தில் சுமுகமாய் இரு

பற்றில் ஞானியாய் இரு

வெற்றியில் சிலையாய் இரு

படித்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


இந்த புத்தக்கத்தில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல நூறு அர்த்தங்கள் உள்ளது.அட்டையிலுள்ள வாக்கியமே உள்ளிழுக்கிறது.

மிக எளிமையாக குழந்தைப்போல் ரசியுங்கள் வாழ்க்கை இனிமையானது.


மேலுள்ள வரிகளும் பல அர்த்தங்கள் அடங்கியது.குழந்தைபோல் ரசித்து பாருங்க சிரிப்பாக வருகிறது.அதற்கு எதனுடைய மதிப்பும் தெரியாது அதற்கு பிடித்ததே உயர்ந்தது,அதுப்போல தான் நாமும் பல நேரம் இருக்கின்றோம். 






Monday, May 24, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Veena Shankar

 


மனத்தின் தேடலே ஆன்மீகம் 

ஆன்மீகத்தின் தேடலே பக்தி 

பக்தியின் தேடலே இறைவன்

 உயிரணுக்களின் தேடலே கரு

 ஆசையின் திறவுகோல் தேடல் 

 பசியின் தேடலே உணவு

 ரசிப்பின் தேடலே காட்சி

 நாசியின் தேடலே மணம்

 ருசியின் தேடலே அறுசுவை

 காசு(ன்) தேடலே அந்தஸ்து

தேனீக்களின் உழைப்பை திருடாமல் தேன்

 எடுக்கும் வித்தையை தேடுதல் வேண்டும்

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Vidhya Nivash

 


Google ல எதையோ தேட போனேன் instantly மறந்துபோனேன் .

ஆம் இன்று நாம் தினந்தோறும் இந்த வலைத்தளங்களில் தேடிக்கொண்டிருக்கும் பலவற்றை நாம் கேட்பதற்கு முன்னே தேடித்தருகிறது நம் ஸ்மார்ட்போன் அந்த அளவிற்கு நம்மை கண்காணிக்கிறது .இன்றைய ஸ்மார்ட்போன்களில் தேடுவது ஆரோக்கியமானதா ?ஆபத்தானதா?


எது தேவை என்றாலும் ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க இதோ இப்ப சொல்லுறேன் என்று முதலில் தேடுவது கூகுளை தான் .ஆம் பட்டி தொட்டியில் இருப்பவர்கள் கூட எங்கிருந்தும் எதையும் காணலாம் கண்களால் அந்த அளவிற்கு எல்லாம் இலவசம் இலவசம் இலவசம் இந்த வலைதளங்களில்..


பல நேரங்களில் தேடியதை மறந்து இந்த கூகுளில் அனாவசியமாக தேடியதே அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் நம் நேரத்தை தொலைத்தே மிச்சம்.


அதிகமாக பேசப்படும் ஆரோக்கிய தேடலிலேயே நாம் நம்மை தொலைத்தோம் என்று சொல்லலாமா.இதிலே பல குள்ளநரிக்கூட்டம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


நம்முடைய தேடல்களுக்கு விடை கொடுப்பது போல ஏமாற்றி நம்மையே கொம்பு சீவி ,உணர்ச்சிகளை தூண்டி கடைசியில் நம்மைப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது இன்றைய இணையதள தேடல்கள்.


பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ ஆசைதான் என்னதான் ஒரு பெண் பிள்ளையை ஆண் பிள்ளை போல வளர்த்தாலும் ,தைரியமாக இரு என்று கூறி ஊக்கப் படுத்தினாலும், கடைசியில் அனைவரும் எதிர்பார்ப்பது பெண்ணிற்கான நாணத்தையும், அடக்கத்தையுமே.நம்முடைய சமூக தேடல்கள் நம் குடும்பத்தை பாதிக்காத வரை நல்லதே. என்னதான் பேசினாலும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி பெண்ணின் கையிலே உள்ளது. அடுத்த தலைமுறையின் நலத்தை அக்கறையில் கொண்டு வாழ்வோமாக .சமூகத் வளர்ச்சியில் நாம் ஈடுபட்டாலும் சினிமாக்களில் வருவது போல யாரும் நம்மை வந்து பாதுகாக்கப் போவதில்லை. சூழ்நிலை மாறினால் யாவரும் மாறுவர்.நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


அனைத்துத் தேடல்களிலும் மிகவும் கொடுமையானது உயிரோடு பிள்ளையை தொலைத்தாயின் தேடலே ஆனால் இன்றோ உயிரோடு இருக்கும் பல சொந்தங்களையும் இழந்து வாழ்ந்து வருகின்றோம்.


அனைத்து மக்களும் கண்டு ஆச்சரியப்பட்டது நம்முடைய குடும்ப கலாச்சாரம் தான். அந்த குடும்ப கலாச்சாரம் இப்பொழுது ஒரு பக்கம் சீரழிய எந்த தேடல் காரணம்??

பிறர் தேடல்களுக்கு நாம் கேள்விக்குறியாகாமல் , விடையாக இருப்பது என்றும் நலமே. சாதனையாளர் பட்டியலில் நம்மை தேடவேண்டுமே தவிர காணாமல் போனவர் பட்டியலில் நம்மை தேடக்கூடாது.நிழல் நிஜமாகும் போது சுடும்.


இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை நம் சொந்தங்களோடு இணைக்கும் ஒரே இணைப்பு இந்த தொலைத்தொடர்பு கருவிகளே .எந்த தேடலும் அளவாக இருந்தால் ஆரோக்கியமே, எதுவும் நம் கை மீறி அதன் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றால் அது என்றும் ஆபத்தே.


உன்னில் இருக்கும் ஆனந்தத்தை தேடு ஆனால் உன்னையே தொலைக்கும் தேடல் வேண்டாமே. தனித்திருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள் இந்த இணையதள தேடலில் விழித்திரு!!! என்றும் மகிழ்ந்திரு.








Sunday, May 23, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Kamatchi

 


மண்ணிற்கு மழை தேடல்

மலருக்குள் மணம் தேடல்

வண்டுக்கு தேன் தேடல்

கண்களுக்குக் காட்சி தேடல்

மனதிற்கு அமைதி தேடல்

பறவைக்கு இரை தேடல்

மனிதனுக்கு பொருள் தேடல்

தேடல் என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்! தேடல் முடியும் போது உன் தேகம், மோகம் அனைத்தும் அடங்கி ஆன்மா இறை தேட சென்று விடும்.

Saturday, May 22, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Vidhya Nivash

 


தேடலையே வாடிக்கையாக வைத்திருக்கும் பெண்களின் குழந்தைத்தனமான தேடல்கள்..


பள்ளிபருவத்தில் தேடுவோம் உடைந்துபோன சிலேட்டுகுச்சியை ,காகித குச்சியை,ரிப்பனை..


பேருந்துக்கு தேடுவோம் சில்லறையை கை நுழையாத பர்சில்..


கல்யாண வீட்டில் தேடுவோம் தட்டில் இருக்கும் ரோஜாவில் பிடித்த நிறத்தை...


சர்க்கரைப் பொங்கலில் முந்திரியையும், புளி சாதத்தில் வேர்க்கடலையும் தேடாதோர் உண்டோ...


கல்லூரிக்கு நேரம் ஆயிட்டு என்ன தேடுற இன்னும் தேடுவதை மறந்து போயிட்டேன்... பேருந்தில் ஏறியவுடன் ஞாபகம் வரும் மறக்காமல் எடுத்து வைக்க நினைத்த நோட்டை..


காலை அவசரத்தில் தேடுவோம் நன்கு பழகிப்போன ஹேர்பின், ஹேர் பேண்ட், மற்றும் ஊக்கு கண்டிப்பாக காணாமல் போய்விடும்...


அவசரத்தில் காணா போகுமே கம்மலின் திருகாணி அதை தேடியே டென்ஷன் ஆகுமே..


ஹேண்ட்பேக் சூப்பர் இதையேதான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.


விளம்பரத்தில் பார்த்த டிசைன் கிடைக்கவே இல்லையே.. ரொம்ப நேரம் ஆச்சு தேடி தேடி பார்த்து கடைசியில் தேடி எடுத்து வந்தவுடன் அடுத்த கடையில் முன்னாடியே தொங்க விட்டிருப்பான்.. இவ்வளவு நேரமா தேடி இதைத்தான் எடுத்தியா..


பல மாடல்கள் பார்த்து பல கடைகள் தேடி ஏறி இறங்கி கடைசியில் வாங்கிய செருப்பு முதல் நாளே கடிக்கும் காலை..


நோட்டீஸ் போர்டில் பேரை தேடுவோம் தேடிய உடன் அடுத்து தேடுவோம் தோழியின் நம்பரை..


நூலகத்தில் நாம் தேடும் புத்தகத்தை தவிர அனைத்து புத்தகங்களும் இருக்கும்..


அம்மா செட்டு செட்டாக மடித்து வைத்து விடுவார் துணிமணிகளை கல்யாணத்துக்குப் பிறகு பேண்ட் கிடைத்தால் துப்பட்டா கிடைக்காதது..பேண்ட் கிடைத்தால் டாப் கிடைக்காது தேடித்தேடி கடைசியில் கையில் கிடைத்ததை உடுத்தி செல்வோம்...



சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Akhiladevi Kumaran

 




சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Aruna

 


தேடல் அறிவின் வழிக்காட்டி 

தேடல் அறியாமையின் அழிவு 

தேடல் உண்மையின் தோழன் 

தேடல் பொய்யின் எதிரி 

தேடல் பேரின்பத்தின் தொடக்கம் ....

அட நானும் எழுதிட்டேன்பா.......

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Vedavalli Ramani

 


தொல்லை என்று முதியோர் இல்லத்தில் விட்டாலும் மகனோ.மகளோ வந்து பார்க்கமாட்டார்களா என்று தேடல் பல பெற்றவர்கள் மனதில் இருக்கும்.

இப்போ நம் எல்லோருடைய தேடலும் கொரோனா இல்லாத முன்பு இருந்த உலகம்.

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Ramalakshmi

 


முடிவற்ற தேடலில்

தொலைக்கின்றோம் வாழ்க்கையை

Thursday, May 20, 2021

சில நேரங்களில் சில மனிதர்கள் by Vidhya Nivash

 


சில நேரங்களில் சில மனிதர்கள் இங்கே சொல்ல போவதற்கும் இந்த நாவலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதை எழுதியவர் ஜெயகாந்தன். அவர் எழுதிய நாவல்களில் முதலில் படித்தது. இந்த நாவல், இது திரைப்படமாகவும் வெளிவந்தது .அன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு நாவல்.. இப்போது இதுபோல பல திரைப்படங்கள் வந்தாலும் ஆனால் ஏன் இந்த ஆசிரியர் இப்படி ஒரு முடிவை கொடுத்திருந்தார் என்று குழம்பிப் போயிருந்தேன். அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது அவர் அப்/ இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு எதையும் நம்பி ஏமாந்து போக வேண்டாம் குறிப்பாக பெண்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார் என்பதை ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது.


ஒரு சின்ன வட்டத்தில் நமக்கு தெரிந்த சமூகத்தில் நம்முடைய வாழ்க்கை ஆரம்பிக்கிறது .சில நேரங்களில் நமக்கே தெரியாமல் சிலருடன் நமக்கு ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது .அது எப்படிப்பட்ட ஈர்ப்பு என்று சில காலம் பழகிய பிறகு தான் புரிய வருகிறது .அந்த ஈர்ப்பு நமக்கு பிடித்த ஏதோ ஒரு விஷயம் அது பழக்கவழக்கங்கள் ஆக இருக்கலாம் ஆழ்மன எண்ணங்கள் ஆக இருக்கலாம் நம்மால் செய்ய முடியாத ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது. நம்மை அறியாமல் அவர்களால் ஈர்க்கப்படுகிறோம் இதுவே உண்மை .அது ஆண் ஆணுக்கான நட்பாக இருக்கலாம் பெண்களுக்கான நட்பாகவும் இருக்கலாம் .இது இளம் வயதிலிருந்து முதுமை வரை தொடர்கிறது.


நம்முடைய வட்டத்தில் அது புதிதாக வரும் பொழுது அங்கே பல ஆச்சரியங்களும் மகிழ்ச்சியையும் தருகிறது .ஆனால் அந்த வட்டத்தில் இருந்து காணாமல் போகும் பொழுது அது பல துக்கங்களையும் வருத்தங்களையும் தந்து விட்டே செல்கிறது. இளமைக் காலத்திலிருந்தே சில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்து செல்கிறோம் , ஈர்க்கப்படும் மனிதர்களுடன் நெருங்கிய நட்புக் கொள்ளும் வாய்ப்புகளும் கிடைக்கிறது .சில நேரம் நமக்கு அவர்களை தூரத்திலிருந்தே , ஏதோ ஒரு விஷயம் அவர்களிடம் நமக்கு பிடித்திருக்கும் ஆனால் அவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்காது.ஆனாலும் நம்முடைய எண்ணங்களில் அவர்கள் கடைசிவரைக்கும் இருக்கத்தான் செய்வார்கள் .இதில் பழகி விட்டு நம்மை விட்டு பிரிந்து செல்பவர்கள் ஒரு வடுவாக மாறி விடுகிறார்கள் .கடைசியாக அதில் நமக்கு கிடைக்கும் பாடம் என்னவென்று பார்த்தால் இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது கிடையாது. இதுவும் கடந்து போகும் என்பது போல எதுவும் மறந்து போகும். போராட்டங்களை அதன் போக்கிலே விட்டுவிட்டு அதற்கு ஏற்றவாறு நாம் எதிர்வினை புரியாமல் இருந்து மனதின் எண்ணங்களை கவனித்து அந்த நேரத்தில் நாம் அமைதியாக இருப்பதே ஒரே வழி. அது எவ்வளவு தான் நம்மை குழம்பினாலும்,அமைதியாக இருக்க மன எண்ணங்களும் தோற்றுப்போகும். அதுவே உண்மை ,எதையும் கவனிப்பதே நம்முடைய வேலை .


மனிதனை மிருகமாக்கும் இந்த எண்ண அலைகளை இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது நம்மை சுற்றி இருக்கும் வட்டத்துள் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டும் .அவர்கள் நம்மை விட்டு சென்றாலும் அதற்காக வருத்தப்படாமல் நம்மை சுற்றியிருக்கும் அன்பானவர்களுக்கு செவிகொடுத்து வாழ்வோமாக...தனிமை நம்மையறியாமல் பயத்தை விதைக்கும்.


இந்நேரத்தில் ஒரு துறவியின் கதை ஞாபகம் வருகிறது. ஒரு துறவி ஒருவர் ஞானம் பெறுவதற்காக அடர்ந்த காட்டில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமைதியான சூழலில் தவம் புரிய ஆரம்பித்தார். அவருடைய ஜெபம் அவரை சுற்றிலும் ஒரு வட்டமிட்டது. ஒரு எண்ண அலைகடலின் நடுவில் அவர் அமர்ந்து தியானம் புரிந்துகொண்டிருந்தார்.பல காலமாக தியானம் புரிந்தார்.ஏன் ஞானம் கிடைக்கவில்லையே என்ற ஒரு கேள்வி.தற்செயலாக அங்கு வந்து தங்கிய ஒரு திருடன், திடீரென்று மாற்றம் அவன் நினைக்காத போது அவன் அப்படியே மாறி விட்டான். அவன் ஒன்றுமே செய்யவில்லை வெறும் அந்த துறவியின் எண்ண அலைகள் அவனுள் புகுந்து அவன் அறியாமலேயே அவனை மாற்றியது .அந்த துறவி செய்த ஒரே தவறு என்னவென்றால் அவர் அவருக்கு ஞானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் தியானத்தில் ஈடுபட்டார்.


அதுபோலத்தான் எல்லாம் தெரியும் நான் தெளிவாக இருக்கிறேன் என்று ஏமாந்து கொண்டு இருக்கிறோம் . எதிர்பார்ப்பு இல்லாமல் சும்மாவே இருப்பது தான் வாழ்க்கையோ தெரியவில்லையே அப்படித்தான் இருக்கவும் முடியவில்லை .


சில நேரத்தில் சில மனிதர்கள் வந்து பாடங்கள் புகுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்.அதை அமைதியாக கவனிப்போம்.ஏமாந்தால் இந்த நாவலில் வருவது போல கடைசியில் நாமே அதற்கு அடிமையாகி போய்விடுகிறோம்.


எத்திசையிலும் எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க

எல்லா உயிர்களும் அமைதி பெற

எல்லா உயிர்களும் ஆனந்தமாக இருக்க

இறைவனை வேண்டுகிறேன்.




இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...