Monday, May 24, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"தேடல்" by Vidhya Nivash

 


Google ல எதையோ தேட போனேன் instantly மறந்துபோனேன் .

ஆம் இன்று நாம் தினந்தோறும் இந்த வலைத்தளங்களில் தேடிக்கொண்டிருக்கும் பலவற்றை நாம் கேட்பதற்கு முன்னே தேடித்தருகிறது நம் ஸ்மார்ட்போன் அந்த அளவிற்கு நம்மை கண்காணிக்கிறது .இன்றைய ஸ்மார்ட்போன்களில் தேடுவது ஆரோக்கியமானதா ?ஆபத்தானதா?


எது தேவை என்றாலும் ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க இதோ இப்ப சொல்லுறேன் என்று முதலில் தேடுவது கூகுளை தான் .ஆம் பட்டி தொட்டியில் இருப்பவர்கள் கூட எங்கிருந்தும் எதையும் காணலாம் கண்களால் அந்த அளவிற்கு எல்லாம் இலவசம் இலவசம் இலவசம் இந்த வலைதளங்களில்..


பல நேரங்களில் தேடியதை மறந்து இந்த கூகுளில் அனாவசியமாக தேடியதே அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் நம் நேரத்தை தொலைத்தே மிச்சம்.


அதிகமாக பேசப்படும் ஆரோக்கிய தேடலிலேயே நாம் நம்மை தொலைத்தோம் என்று சொல்லலாமா.இதிலே பல குள்ளநரிக்கூட்டம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


நம்முடைய தேடல்களுக்கு விடை கொடுப்பது போல ஏமாற்றி நம்மையே கொம்பு சீவி ,உணர்ச்சிகளை தூண்டி கடைசியில் நம்மைப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது இன்றைய இணையதள தேடல்கள்.


பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ ஆசைதான் என்னதான் ஒரு பெண் பிள்ளையை ஆண் பிள்ளை போல வளர்த்தாலும் ,தைரியமாக இரு என்று கூறி ஊக்கப் படுத்தினாலும், கடைசியில் அனைவரும் எதிர்பார்ப்பது பெண்ணிற்கான நாணத்தையும், அடக்கத்தையுமே.நம்முடைய சமூக தேடல்கள் நம் குடும்பத்தை பாதிக்காத வரை நல்லதே. என்னதான் பேசினாலும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி பெண்ணின் கையிலே உள்ளது. அடுத்த தலைமுறையின் நலத்தை அக்கறையில் கொண்டு வாழ்வோமாக .சமூகத் வளர்ச்சியில் நாம் ஈடுபட்டாலும் சினிமாக்களில் வருவது போல யாரும் நம்மை வந்து பாதுகாக்கப் போவதில்லை. சூழ்நிலை மாறினால் யாவரும் மாறுவர்.நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


அனைத்துத் தேடல்களிலும் மிகவும் கொடுமையானது உயிரோடு பிள்ளையை தொலைத்தாயின் தேடலே ஆனால் இன்றோ உயிரோடு இருக்கும் பல சொந்தங்களையும் இழந்து வாழ்ந்து வருகின்றோம்.


அனைத்து மக்களும் கண்டு ஆச்சரியப்பட்டது நம்முடைய குடும்ப கலாச்சாரம் தான். அந்த குடும்ப கலாச்சாரம் இப்பொழுது ஒரு பக்கம் சீரழிய எந்த தேடல் காரணம்??

பிறர் தேடல்களுக்கு நாம் கேள்விக்குறியாகாமல் , விடையாக இருப்பது என்றும் நலமே. சாதனையாளர் பட்டியலில் நம்மை தேடவேண்டுமே தவிர காணாமல் போனவர் பட்டியலில் நம்மை தேடக்கூடாது.நிழல் நிஜமாகும் போது சுடும்.


இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை நம் சொந்தங்களோடு இணைக்கும் ஒரே இணைப்பு இந்த தொலைத்தொடர்பு கருவிகளே .எந்த தேடலும் அளவாக இருந்தால் ஆரோக்கியமே, எதுவும் நம் கை மீறி அதன் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றால் அது என்றும் ஆபத்தே.


உன்னில் இருக்கும் ஆனந்தத்தை தேடு ஆனால் உன்னையே தொலைக்கும் தேடல் வேண்டாமே. தனித்திருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள் இந்த இணையதள தேடலில் விழித்திரு!!! என்றும் மகிழ்ந்திரு.








6 comments:

  1. super...liked this -பிறர் தேடல்களுக்கு நாம் கேள்விக்குறியாகாமல் , விடையாக இருப்பது என்றும் நலமே.

    ReplyDelete
  2. வித்யா நிதர்சனமான உண்மையை அழகாக எழுதி இருக்கிறாய்டா💜👌💜

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...