அழகான காலை பொழுதில்
ஒருபுறம் குழாயில் தண்ணீர் வர மறுபுறம் அம்மா வாசல் தெளித்து அழகாக கோலமிட்டாள்.
பால்காரர் வந்து வீட்டு முன்னிருக்கும் செம்பில் பாலூற்றி செல்ல படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் பொழுதே பில்டர் காபின் வாசனையுடன் கமகமக்க ,சூரியனுடன் கிணற்றடியில் காலை நேரம் உட்கார்ந்து இருக்கும் சுகமே சுகம் .கோலம் போடும் போதே கீரை வாங்க, அப்பா தினசரி சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வர அதில் கொசுறாக கொடுக்கும் கருவப்பிள்ளை ஒரு சுகம்தான்.எத்தனை பொருள்கள் அப்பா வாங்கி வந்தாலும் அம்மா அவசரமாக தம்பி அண்ணாச்சி கடையில ஒரு பத்து தேங்காய் வாங்கிட்டு வா சட்னி அரைக்க என்பதும் ஒரு சுகமே.
மாலைப் பொழுதில் பூக்காரர் வந்து ஒரு படி அளந்து போட்டு கொசுறாக அள்ளிப் போடும் மல்லிகை பூக்களும் சுகமே.
வருடத்தில் வரும் ஒரு ஷாப்பிங் தீபாவளி ஷாப்பிங் அதை எண்ணி நாம் கண்டோம்... காணும் கனவு என்றும் சுகமே .அன்று ஒருநாள் கிடைக்கும் ஐஸ்கிரீமும் இன்னும் அதிகம் சுகமே. புத்தாடைகள் அதைவிட சுகமே. அக்கா போட்ட முழுப்பாவாடை, தங்கைக்கு போக அரைப்பாவாடை ,அதன்பின்னும் தலையணை உரையாக மாற ,அதன்பின்னும் சமையலறை கரித் துணியாக இருக்கும் அதிலும் ஒரு சுகமே.
வருடத்திற்கு ஒரு முறை வாங்கும் காட்டன் ஆடைகள் பல தலைமுறைகளை காணும்.
அது மட்டுமா புத்தகங்கள் முதல் பெயர் பொறிக்கப்பட்ட லஞ்ச் பாக்ஸ் ,ஸ்கூல் பேக் ,விளையாட்டு சாமான்கள் அனைத்தும் பல தலைமுறைகள் கண்டவனே .இதில் முக்கியமான ஒன்று அனைத்தும் இயற்கைக்கு பிரியமான பொருட்களால் ஆனவை... தீபாவளி கடையில் கிடைக்கும் மஞ்சப்பை எத்தனை தலைமுறைகளை பார்க்கும்.
ஏய் ராஜூ நேற்று கடைக்குப் போய் இருந்தியே...என்ன ஆஃபர் போட்டிருக்காங்க ?நான் போன கடையில 70% ஆஃபர் போட்டு இருந்தாங்க. அதுக்கு போன வாரம் போன கடையில ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம், வாங்குன காசுக்கு வீட்டுக்கு போட்டு அடிச்சா போது போ...
அது மட்டும் இல்லடி ஏதோ ஒரு புதுசா கடை ஓபன் பண்றான் கண்டிப்பா ஓபனிங் ஆஃபர் போடுவான் நான் உனக்கு சொல்றேன்.
ஜனவரி மாதம் நியூ இயர் ஆஃபர்
பிப்ரவரி மாதத்தில் பொங்கல் ஆப்பர் தொடரும்
மார்ச்சு மாதத்தில் கிளியரன்ஸ் சேல்
ஏப்ரல் மாதத்தில் தமிழ் நியூ இயர் ஆஃபர்
மே மாதத்தில் சம்மர் கூல் ஆஃபர்
ஜூன் மாதத்தில் பேக் டு ஸ்கூல் ஆஃபர்
ஜூலை மாதத்தில் ஆடி ஆஃபர்
ஆகஸ்ட் மாதத்தில் ரம்ஜான் சேல்
செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி சேல்
நவம்பர் மாதத்தில் நவராத்திரி தீபாவளி சேல்
டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் சேல்
இதற்கிடையில் பல கிளியரன்ஸ், ஃபேக்டரி அவுட்லெட் சேல்ஸ்,
ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இலவசம்,
வார இறுதி ஆஃபர்ஸ்...
ஏ1 ரொம்ப அழகா இருக்கே என்ன ஆஃபரில் வாங்கினே...
போன வாரம் தான் எடுத்துக் கொடுத்தேன்
அதுக்குள்ளேயும் ஒடச்சிட்டான் ஆஃபர் ல வாங்கினது தானே.
உடற்பயிற்சிக்காக வாங்கும் சாதனங்களை துணி காய வைக்கவே அதிகம் பயன்படுத்திருப்போம்.
உணவு பற்றி சொல்லவே வேண்டாம்,வீட்டில் உடம்பு சரியில்ல என்றால் மட்டுமே கடை உணவு என்பது மாறி,வாரம் ஒரு முறை சாப்பிடவில்லை என்றால் மன நோய் இன்று.உச்சகட்டமாக மாஸ்க்கு பிரியாணி ஆஃபர்.
அன்று விளையாடிய மரச்சாமான் பொம்மைகளும், பித்தளைப் பாத்திரங்களும் இன்றும் இருக்கிறது வீட்டை அலங்கரிக்கும் பொருட்களாக மிக அதிக விலை கொடுத்து வாங்கி தினமும் தூசி துடைத்து வேறு என்ன ஆஃபர் போட்டிருக்கிறான் வாங்க போகலாம் என்று தினமும் விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் இந்த shopping நம்மை நாகரீக கோமாளிகள் ஆகியதே மிச்சம் ...
அளவாக,அன்றாட வாங்கி இனிமையாக வாழ்ந்தோம்..
இன்று வாங்குவதே ஒரு நோயாக மாறி வருகிறது.வாங்கியது பாதி குப்பைக்கு போய் இயற்கையையும் சீர்கேடுக்கிறது...

மிக மிக அருமை. என்ன எதார்த்தம் அரங்கேறியுள்ளது. என் எண்ணத்தை பிரதிபலிக்கும் படைப்பு.அருமை (தோழியே)
ReplyDeleteபடிக்கவே ஆசையா இருக்கு அந்த கால வாழ்க்கை..super Vidhya..
ReplyDeleteThank you Divya😊
Deleteமிக்க நன்றி 😊
ReplyDeleteNice vidya
ReplyDeleteThank you Sakthi
ReplyDelete