நினைத்தவுடன் கற்பனையில் செல்வது போல எந்த ஒரு பாஸ்போர்ட்டும் இல்லாமல் எல்லைகளைத் தாண்டி பட்டாம்பூச்சி போல் பறந்து செல்லும் உருமாற்றம் வேண்டும்..
புத்தக சுமை வேண்டாம் ,பக்கம் பக்கமாக எழுதவும் வேண்டாம் ,பரீட்சையும் வேண்டாம் ,இயற்கையுடன் இணைந்து ஆடி விளையாடும் எந்த கட்டுப்பாடும் அற்ற கல்வி முறையில் நிஜ மாற்றம் வேண்டும்...
சமூக குற்றங்களைப் பார்த்த நொடியில் எரிக்கும் டிராகன் போன்ற நெருப்பு உமிழும் சக்தி மாற்றம் வேண்டும்..
எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மக்களும் இணைந்து வாழ்வும் ஆதிவாசி போன்ற வாழ்க்கை சமூக மாற்றம் வேண்டும்..
உடலில் ஏற்படும் நோய்களை அந்தந்த உறுப்புகளே சரிசெய்துக் கொள்ளும் நல மாற்றம் வேண்டும்...
எது நடந்தாலும் ஏமாற்றம் அடையாமல் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனமாற்றம் வேண்டும்...
வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்து போகும் அதில் ஒரு சுகமும் இருக்கத்தான் செய்யும், எது நடந்தாலும் நிலையாக இருக்கும் இயற்கை போல நிரந்தரமற்ற மாற்றங்களை எண்ணி ஏமாற்றம் அடையாமல் இருந்தால் போதும் ...
எத்தனை பெரிய மாற்றங்கள் வந்தாலும் நம்முடைய இயல்பான குணம் மாற்றமடையாமல் இருந்தால் போதும் வாழ்க்கை என்றும் சுகமே!!!

இவை நடந்தால் நல்லதே
ReplyDeleteஆமாம்,நன்றி
ReplyDeleteMaatram ondrae maaraadhu!
ReplyDeleteYes😊
ReplyDelete