Monday, October 25, 2021

சின்ன கவிதைகள் ஆழமான சிந்தனைகள் by Veena Shankar


  

மாணவப்பருவம் 


நெளிவு கொண்ட பாதையிலே செல்லும்போதும் 

என் மனம் நெளியவில்லை 

நேரான பாதையிலே புத்தக சுமையினால் 

நெளிந்து நெளிந்து செல்லும் மாணவர்களை

காணும்போது நெளிவு கொண்டது என் மனம் 

அத்தனை புத்தகங்களையும் படிக்காவிட்டாலும் 

சுமந்து செல்வதே பெரிய தண்டனையா 

அதனால் என்னவோ இக்காலத்திலும் உருவாயினர் 

குழந்தை தொழிலாளர்கள்


சமாதி 


காதல் தோல்வியால் அமைதி விரும்பி 

சென்றேன் சமாதிக்குள் 

தொலைத்த என் காதலை கண்டெடுத்தேன் 

சமாதிக்குள் சமாதியாய் ஆக்கப்பட்ட

 என்  காதலியை


எது முடிவு 


ஆடி முடிந்ததும் திருமணம் என 

கூடிப் பேசி முடிக்கும் முன் 

ஓடிப்போய் திருமணம் செய்ததால் 

இடி விழுந்தது போலாயிற்று பெற்றோருக்கு

முடிவு மரணமே என்று எண்ணுவதால்  இதற்கு 

விடிவு ஏதும் இல்லையா


 மத்தள வாழ்க்கை


தெரு குப்பைகள் என்னை ப்பார்த்து 

சிரிக்கிறது  அள்ள ஆளில்லாமல் 

தெருவிளக்குகள் என்னைப்பார்த்து 

கண் சிமிட்டுகிறது சரி செய்ய 

ஆள் இல்லாமல் 

தெரு குழாய்கள் என்னைப்பார்த்து ஏங்குகிறது

உபயோகிக்க ஆளில்லாமல் 

தண்ணீர் வராத காரணத்தினால் 

தெரு மக்கள்    என்னை   ஏசுகின்றனர்

ஓட்டுப்போட்ட காரணத்தினால் 

காசு வாங்கி ஓட்டு போட்ட இவர்கள்

இப்படிப் பேசினால் 

சீட்டு வாங்க காசு கொடுத்த நான்

என்ன செய்ய?

விட்டதைப் பிடிக்க  எண்ணி நான் கையை நீட்ட 

சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டேன் 

மத்தளம் போல்  அல்லல்படுகிறேன்

4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...