மாணவப்பருவம்
நெளிவு கொண்ட பாதையிலே செல்லும்போதும்
என் மனம் நெளியவில்லை
நேரான பாதையிலே புத்தக சுமையினால்
நெளிந்து நெளிந்து செல்லும் மாணவர்களை
காணும்போது நெளிவு கொண்டது என் மனம்
அத்தனை புத்தகங்களையும் படிக்காவிட்டாலும்
சுமந்து செல்வதே பெரிய தண்டனையா
அதனால் என்னவோ இக்காலத்திலும் உருவாயினர்
குழந்தை தொழிலாளர்கள்
சமாதி
காதல் தோல்வியால் அமைதி விரும்பி
சென்றேன் சமாதிக்குள்
தொலைத்த என் காதலை கண்டெடுத்தேன்
சமாதிக்குள் சமாதியாய் ஆக்கப்பட்ட
என் காதலியை
எது முடிவு
ஆடி முடிந்ததும் திருமணம் என
கூடிப் பேசி முடிக்கும் முன்
ஓடிப்போய் திருமணம் செய்ததால்
இடி விழுந்தது போலாயிற்று பெற்றோருக்கு
முடிவு மரணமே என்று எண்ணுவதால் இதற்கு
விடிவு ஏதும் இல்லையா
மத்தள வாழ்க்கை
தெரு குப்பைகள் என்னை ப்பார்த்து
சிரிக்கிறது அள்ள ஆளில்லாமல்
தெருவிளக்குகள் என்னைப்பார்த்து
கண் சிமிட்டுகிறது சரி செய்ய
ஆள் இல்லாமல்
தெரு குழாய்கள் என்னைப்பார்த்து ஏங்குகிறது
உபயோகிக்க ஆளில்லாமல்
தண்ணீர் வராத காரணத்தினால்
தெரு மக்கள் என்னை ஏசுகின்றனர்
ஓட்டுப்போட்ட காரணத்தினால்
காசு வாங்கி ஓட்டு போட்ட இவர்கள்
இப்படிப் பேசினால்
சீட்டு வாங்க காசு கொடுத்த நான்
என்ன செய்ய?
விட்டதைப் பிடிக்க எண்ணி நான் கையை நீட்ட
சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டேன்
மத்தளம் போல் அல்லல்படுகிறேன்
அருமையான படங்கள் வித்யா
ReplyDeleteThank you Veena,அற்புதமான படைப்பு 👌
Deleteசிறப்பு
ReplyDeleteThank you
Delete