" தாய் " அன்னையர் தின கவிதை by Veena Sankar
தாய்
அன்று உதிரம் சிந்தி என்னை ஈன்ற-தா(ல்)(ய்)
இன்று நான் உயிர் பெற்று நிற்கிறேன்
என் கரம் பிடித்து என்னை நீ தாங்கிய-தா(ல்)(ய்)
உன் மனம் குளிர நான் இருக்கிறேன்
நீ ஆசைப்படாமல் வாழ்க்கை நடத்திய-தா(ல்)(ய்)
நான் மாட மாளிகையில் வாழ்கிறேன்
என் தவறுகளை சுட்டிக்காட்டி வளர்த்த-தா(ல்)(ய்)
நான் சரியான பாதையில் பயணிக்கிறேன்
உன் பாசம் கொண்டு என்னை வடித்த-தா(ல்)(ய்)
நான் பரந்த மனதோடு இருக்க விழைகிறேன்
நீ கனவு கொள்ள சொன்னதா(ல்)(ய்)
நான் விரிந்த உலகில் மிதக்கிறேன்
நீ பொறாமை இல்லாமல் வாழ்ந்த-தா(ல்)(ய்)
நான் உன்னைக் கண்டு பெருமை அடைகிறேன்
உன் செயலால் நீ கோபுரத்தில் நின்ற-தா(ல்)(ய்)
நானும் உன் நிழலாய் இருக்க விரும்புகிறேன்

No comments:
Post a Comment